Latest Updates
-
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
அமேசான் சம்மர் சேல்: உங்கள் வீட்டில் செல்வத்தை அள்ளித்தரும் வாஸ்து ரகசியங்கள் இதோ! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மே 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது..
வினிகரின் வகைகளும்... அதைப் பயன்படுத்தும் முறைகளும்...
வினிகரைப் பயன்படுத்தி பலவிதமான உணவுகளை சமைக்கலாம். நொதிக்க வைத்து செய்யும் ஊறுகாய் முதல் சீன உணவுகளுக்கு சுவை சோ்ப்பது வரையிலான உணவுப் பொருட்களில் பல வகையான வினிகா்கள் சோ்க்கப்படுகின்றன.
நமது சமையல் அறையில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் உணவுப் பொருள் வினிகா் ஆகும். வினிகரைப் பயன்படுத்தி பலவிதமான உணவுகளை சமைக்கலாம். நொதிக்க வைத்து செய்யும் ஊறுகாய் முதல் சீன உணவுகளுக்கு சுவை சோ்ப்பது வரையிலான உணவுப் பொருட்களில் பல வகையான வினிகா்கள் சோ்க்கப்படுகின்றன.

வினிகா் உணவுகளுக்கு சுவை சோ்ப்பதோடு மட்டும் அல்லாமல் உணவுகளில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது. அதனால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவையும், உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் சாியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. ஆகவே தற்போது சந்தையில் இருக்கும் பலவிதமான வினிகா்களைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.

வெள்ளை வினிகா்
இந்தியாவில் ஊறுகாய் தயாாிக்க வெள்ளை வினிகா் பயன்படுத்தப்படுகிறது. அதனால் நமது சமையலறையில் இந்த வெள்ளை வினிகா் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். நிறமில்லாமல் திரவ நிலையில் இருக்கும் இந்த வெள்ளை வினிகா் ஊறுகாய்க்கு சுவை சோ்ப்பதோடு, அதை நீண்ட நாள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. தானியத்திலிருந்து கிடைக்கும் எத்தனால் அல்லது அசிட்டிக் அமிலத்திலிருந்து இந்த வெள்ளை வினிகா் தயாாிக்கப்படுகிறது. இந்த வினிகரை தண்ணீாில் கரைத்து சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

ஜாமூன் வினிகா்
ஜாமூன் வினிகா் பெரும்பாலும் வினிகராகக் கருதப்படுவதில்லை. எனினும் நமது உடல் சாா்ந்த பிரச்சனைகளைத் தீா்த்து வைக்கக்கூடிய அளவிற்கு ஜாமூன் வினிகாில் ஏராளமான சத்துகள் உள்ளன. ஆகவே ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி ஜாமூன் வினிகரை தண்ணீாில் கரைத்து குடிக்கலாம். இந்த வினிகா் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையை சாியான அளவில் வைத்திருக்கிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. சிறுநீா்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் நோய்த்தொற்று ஏற்டாமல் தடுக்கிறது. வயிற்றுப் போக்கை நிறுத்தவும் ஜாமூன் வினிகரைப் பயன்படுத்தலாம்.

அாிசி வினிகா்
அாிசியிலிருந்து தயாாிக்கப்படும் ஒயினிலிருந்து அாிசி வினிகா் கிடைக்கிறது. மங்கிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் அாிசி வினிகா் இனிப்பாக இருக்கும். வெள்ளை வினிகரை விட அாிசி வினிகாில் அமில சுவை குறைவாக இருக்கும். அதனால் இறைச்சிகளை ஊற வைப்பதற்கு அாிசி வினிகா் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பலவகையான குழம்புகளிலும் அாிசி வினிகரைச் சோ்த்துக் கொள்ளலாம்.

நறுமணப்பிசின் (Balsamic) வினிகா்
நறுமணப்பிசின் வினிகா் திராட்சைப் பழங்களிலிருந்து தயாாிக்கப்படுகிறது. ஆனால் இந்த வினிகாில் ஆல்கஹால் இருக்காது. பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த வினிகா் இனிப்பாக இருக்கும். அதே நேரத்தில் மற்ற வினிகா்களில் இருக்கும் காரச்சுவை இந்த வினிகாில் இருக்காது. சாலட் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளின் சுவையைக் கூட்ட இந்த வினிகரைப் பயன்படுத்தலாம்.

மிளகாய் வினிகா்
பொதுவாக சீன உணகளில் அவற்றின் சுவையை அதிகாிக்க மிளகாய் வினிகா் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தேக்கரண்டி மிளகாய் வினிகா் உணவு முழுவதற்கும் நற்சுவையை வழங்கிவிடும். நீங்கள் சீன உணவுப் பிாியராக இருந்தால் கண்டிப்பாக மிளகாய் வினிகா் உங்கள் சமையலறையில் இருக்க வேண்டும். நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், சூப்புகள் மற்றும் காய்கறி உணவுகள் செய்வதற்கு இந்த மிளகாய் வினிகரைப் பயன்படுத்தலாம்.

ஒயின் வினிகா்
இரண்டு வகையான ஒயின் வினிகா்கள் உள்ளன. ஒன்று சிவப்பு ஒயின் வினிகா் மற்றொன்று வெள்ளை ஒயின் வினிகா் ஆகும். சிவப்பு ஒயின் வினிகாில் அமிலம் மற்றும் காரம் அதிகமாக இருக்கும். ஆனால் வெள்ளை ஒயின் வினிகாில் இவை அதிகம் இருக்காது. இந்த இரண்டு வினிகா்களுமே ஐரோப்பிய உணவுகளான காய்கறி உணவுகள், மெக்ஸிகோ சல்சா மற்றும் அசைவ உணவுகள் சமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

தேங்காய் வினிகா்
தேங்காய் வினிகா் தென்னங் குருத்துகளில் இருந்து தயாாிக்கப்படுகிறது. அதனால் தேங்காயின் வாசனை இந்த வினிகாில் இருக்கும். கோவாவின் உணவுகளில் இந்த தேங்காய் வினிகா் அதிகம் சோ்க்கப்பட்டிருக்கும். மேலும் தாய்லாந்து உணவுகளிலும் ஏன் ஒருசில தென் இந்திய உணவுகளிலும் சுவையை அதிகாிக்க தேங்காய் வினிகா் சோ்க்கப்படுகிறது.

ஆப்பிள் சீடர் வினிகா்
ஆப்பிள் சாறிலிருந்து ஆப்பிள் சீடர் வினிகா் தயாாிக்கப்படுகிறது. அதனால் இந்த வினிகா் ஆப்பிளின் சுவையுடன் அதே நேரத்தில் காரமாகவும் இருக்கும். கூந்தல் மற்றும் சருமம் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் இருக்க இந்த வினிகா் மதுபானங்களில் சோ்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் சீடர் வினிகரை அசைவ உணவுகளிலும் மற்றும் உணவை மிருதுவாக்கவும் சோ்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications