Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கி, பிபி, கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கசாயம்!
நம் முன்னோர்கள் ஆரோக்கிய நலனுக்காக சமையலறையில் உள்ள பட்டை, பூண்டு, கிராம், இஞ்சி என்று பலவற்றைக் கொண்டு கசாயம் தயாரித்துக் குடிப்பார்கள். அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் ஓமம்.
தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், நாம் நமது நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்காக பல்வேறு உணவுகள், பானங்கள் மற்றும் சிலர் மருத்துவர் பரிந்துக்கும் மாத்திரைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் காலம் காலமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருசில கசாயங்களைக் குடித்து வந்தனர். அந்த கசாயங்களை இன்றைய தலைமுறையினர் குடித்து வந்தாலே உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

நம் முன்னோர்கள் ஆரோக்கிய நலனுக்காக சமையலறையில் உள்ள பட்டை, பூண்டு, கிராம், இஞ்சி என்று பலவற்றைக் கொண்டு கசாயம் தயாரித்துக் குடிப்பார்கள். அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் ஓமம். நம்மில் பலரும் ஓமம் செரிமானத்திற்கு மட்டும் தான் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் நினைப்பதை விட இதில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.

ஓமம்
நாம் இதுவரை ஓமத்தை நீரில் ஊற வைத்து, அந்நீரைத் தான் குடித்திருப்போம். ஆனால் ஓமத்தை பலவாறு சாப்பிடலாம். அதுவும் சமைக்கும் குழம்புடன், சப்பாத்தியுடன் மற்றும் பிற உணவுகளுடன் கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஓமத்தின் முழு நன்மைகளையும் பெற நினைத்தால், அதைக் கொண்டு கசாயம் தயாரித்துக் குடியுங்கள். கீழே ஓம கசாயம் எப்படி தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த கசாயத்தைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் பார்ப்போம்...!

ஓம கசாயம் தயாரிப்பது எப்படி?
ஓம கசாயத்தை இரண்டே நிமிடத்தில் தயாரித்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
* ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டீஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, ஓமத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* மிதமான தீயில் வைத்து, நீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேன், எலுமிச்சை சாறு/ஆப்பிள் சீடர் வினிகர், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து சூடாக குடிக்க வேண்டும்.
இப்போது ஓம கசாயத்தைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது
ஓம விதைகளில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-பாராசிடிக் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும், பருவகால நோய்த்தொற்றுக்களை எதிர்க்கவும் உதவுகிறது. ஒருவர் தினமும் காலையில் ஓம கசாயத்தைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் பிற தொற்றுக்களில் இருந்து விலகி இருக்கலாம். சில ஆய்வுகளும் ஓம விதைகள் மழைக்காலத்தில் ஏற்படும் பிங்க் கண்கள் அல்லது விழி வெண்படல அழற்சியைத் தடுக்க சிறந்ததாக பரிந்துரைக்கின்றன.

குடல் ஆரோக்கியம் மேம்படும்
ஓம விதைகள் அனைத்து விதமான வயிற்று பிரச்சனைகளும் சரிசெய்யவல்லது. மாதவிடாய் பிடிப்புக்களில் இருந்து, அடிவயிற்று வலி, வாய்வு மற்றும் மலச்சிக்கல் என்று அனைத்து பிரச்சனைகளையும் ஓம கசாயம் போக்கவல்லது. மேலும் இந்த கசாயம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எந்த செரிமான பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கிறது.

எடை இழப்பு
ஓம விதைகளில் உள்ள கொப்பைக் குறைக்கும் பண்புகள், உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கும். ஓம கசாயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, கொழுப்புச் செல்கள் வேகமாக கரைக்கப்படுகின்றன. மேலும் இந்த பானம் சர்க்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை நிர்வகிக்கவும் உதவுகிறது.

ஆஸ்துமா
உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளதா? அப்படியானால் ஓம காசாயத்தை குளிர் மற்றும் மழைக்காலத்தில் தினமும் குடியுங்கள். இதனால் சுவாச குழாய்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, எளிதில் சுவாசிக்க முடியும்.

ஆர்த்ரிடிஸ்
இன்று பலர் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்க்ள. அவர்கள் ஓம கசாயத்தைக் குடிப்பது நல்லது. ஆய்வு ஒன்றிலும் ஓம கசாயத்தை தினமும் குடிப்பது ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தினமும் காலையில் காபி, டீக்கு பதிலாக, ஓம கசாயத்தைக் குடியுங்கள், உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications