For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

24 மணிநேரத்தில் வாய் புண்ணில் இருந்து விடுபட வேண்டுமா? இதோ சில வழிகள்!

பொதுவாக வாய் புண் சரியாவதற்கு சற்று காலம் எடுத்துக் கொள்ளும் மற்றும் இப்பிரச்சனை இருந்தால் உணவை மெல்லும் போது, பானங்களைப் பருகும் போது, சில சமயங்களில் பேசும் போது கூட சிரமத்தை சந்திக்கக்கூடும்.

|

நீங்கள் ஏதேனும் காரமான அல்லது மிகவும் சூடான உணவுகளை உண்ட பின் நாக்கில் காயம் ஏற்பட்டது போல் உணர்கிறீர்களா? நாக்கை அசைக்கும் போது ஏதேனும் எரிச்சல் உணர்வைப் பெறுகிறீர்களா? அப்படியானால், அது நாக்கில் கொப்புளங்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும். கொப்புளங்கள் மற்றும் வாய் புண் உணவை உண்ணும் போது அல்லது பானங்களைப் பருகும் போது கடுமையான வலியை உண்டாக்கும்.

Troubled Due To Mouth Ulcers? Get Respite With These Home Remedies

கொப்புளங்கள் மற்றும் வாய் புண்ணிற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், வலிமிக்க வாய் புண்ணிற்கு வழிவகுக்கும். பொதுவாக வாய் புண் சரியாவதற்கு சற்று காலம் எடுத்துக் கொள்ளும் மற்றும் இப்பிரச்சனை இருந்தால் உணவை மெல்லும் போது, பானங்களைப் பருகும் போது, சில சமயங்களில் பேசும் போது கூட சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய் புண் மற்றும் கொப்புளங்கள் எதனால் வருகிறது?

வாய் புண் மற்றும் கொப்புளங்கள் எதனால் வருகிறது?

* சாப்பிடும் போது நாக்கை கடித்துவிடுவது

* தொடர்ச்சியாக உடைந்த பற்களில் நாக்கைக் கொண்டு குடைவது

* மோசமான வாய் ஆரோக்கியம்

* சூடான அல்லது காரமான உணவுகளால் நாக்கு வெந்து போவது

* வைரல் தொற்றுக்களின் தாக்கம்

* ஆன்டி-பயாடிக் அலர்ஜி

இப்போது வாய் புண்ணை சரிசெய்யும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கம் மற்றும் வலியின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், வாய் புண்ணில் இருந்து விரைவில் விடுபட உதவி புரியும். அதற்கு நற்பதமான கற்றாழையின் இலையில் உள்ள ஜெல்லை எடுத்து, வாய் புண் மற்றும் கொப்புளம் உள்ள இடங்களில் தடவி, 5-10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், நாக்கில் புண்ணை உண்டாக்கிய பாக்டீரியாக்களை அழித்து, வாய் புண்யால் ஏற்படும் வலியில் இருந்து விடுபட உதவும். மேலும் பேக்கிங் சோடா நாக்கில் pH அளவை பராமரிப்பதோடு, தொற்றுக்களையும் தடுக்கும். அதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு மூன்று முறை தடவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், வலி விரைவில் நீங்கும்.

கிளிசரின்

கிளிசரின்

கிளிசரின் வாயில் உள்ள கொப்புளங்களை சரிசெய்ய உதவுவதாக ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வாய் புண்ணால் ஏற்படும் எரிச்சலையும் குறைக்க உதவும். முக்கியமாக இது விரைவில் குணமாக உதவி புரியும். அதற்கு கிளிசரின் மற்றும் தேனை சரிசம அளவில் கலந்து, வாய் புண் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் தடவி, 4-5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

தேன்

தேன்

தேனில் உள்ள வலி நிவாரண மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வாய் புண் மற்றும் கொப்புளங்களை சரிசெய்ய உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். ஒரு காட்டன் உருண்டையை நீரில் நனைத்து பிழிந்து கொள்ள வேண்டும். பின் அந்த ஈரமான காட்டனை தேனில் தொட்டு, வாய் புண் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இப்படி 3-5 நிமிடம் வைத்திருங்கள். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

சீமை சாமந்தி டீ

சீமை சாமந்தி டீ

சீமை சாமந்தி டீயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய் புண்ணை சரிசெய்ய உதவும். மேலும், இது வாய் புண்ணிற்கு காரணமானவைகளில் இருந்து விடுவித்து, வாய் கொப்புளங்களுக்கான அறிகுறிகளையும் போக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் உலர்ந்த சீமை சாமந்தி பூவை சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து பருக வேண்டும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை வாய் புண் உள்ள இடத்தில் வைத்தால், காயங்கள் குறைவதோடு, வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடனடி நிவாரணம் கிடைக்க நினைப்பவர்கள், இந்த வழியை முயற்சிக்கலாம்.

தயிர்

தயிர்

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாவான அசிடோபில்லஸ், வாயில் உள்ள கொப்புளங்களை சரிசெய்யும். அதற்கு தயிரை வாய் புண் உள்ள இடத்தில் அடிக்கடி தடவ வேண்டும். இதனால் காயங்கள் மற்றும் எரிச்சல் போன்றவற்றில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய வல்லது. பூண்டு பற்களை பேஸ்ட் செய்து, வாய் புண்ணின் மீது தடவினால், வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, தொற்றுக்கிருமிகள் பரவாமலும் தடுக்கும்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

இது வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுபட மேற்கொள்ளும் ஒரு பழங்கால ட்ரிக்ஸ். அதற்கு சிறிது டூத் பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இதனால் அதில் உள்ள சல்பேட் வலியைப் போக்குவதோடு, எரிச்சலையும் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Troubled Due To Mouth Ulcers? Get Respite With These Home Remedies

Mouth ulcers can cause severe discomfort. More than medicines, basic remedies can provide relief from the symptoms of ulcers and blisters. Read on...
Story first published: Thursday, October 24, 2019, 11:55 [IST]
Desktop Bottom Promotion