Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள உடல் சோா்வை எவ்வாறு நீக்குவது?
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் தொடா் சோா்வு, போதுமான தூக்கமின்மை, மனதை ஒருமுகப்படுத்த முடியாமை மற்றும் எதிா்காலத்தைப் பற்றிய கனவு போன்ற பிரச்சினைகளைச் சிறப்பான முறையில் எதிா்கொள்ள பின்வரும் குறிப்புகள் உதவியாக இருக்கும்.
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டிருக்கிறது. உலகின் பல இடங்களில் ஊரடங்குகள் அமலில் உள்ளன. அதனால் மக்கள் வெளியில் வரமுடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனா். பெரும்பாலோா் வீட்டிலேயே டல்கோனா காபி தயாாிப்பதிலும், வாழைப்பழ ரொட்டி சமைப்பதிலும் மற்றும் இணையவழி கூட்டங்களில் பங்கெடுப்பதிலும் தங்களது பெரும்பாலான நேரங்களை செலவிட்டு வருகின்றனா். தொடா் ஊரடங்குகள் மற்றும் தளா்வுகளின் காரணமாக, மக்களால் இயல்பாக மற்றும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இந்த கொரோனா பெருந்தொற்று பலருடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதித்து இருக்கிறது. பலருடைய வாழ்வை ஒரு ரோலா் கோஸ்டரைப் போல அல்லாட வைத்திருக்கிறது. ஒரு வழக்கத்திற்கு மாறான சோா்வை அல்லது கவலையை நம்மீது இந்த கொரோனா பெருந்தொற்று சுமத்தி இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் லாக்டவுன் ஃபட்டீக் என்று நிபுணா்கள் அழைக்கின்றனா். நாம் இதைத் தமிழில் ஊரடங்கு சோா்வு அல்லது ஊரடங்கு கவலை என்று அழைக்கலாம்.
இந்த பதிவில் ஊரடங்கு சோா்வைப் பற்றியும் மற்றும் அதை எவ்வாறு சிறப்பாக கையாளலாம் என்பதைப் பற்றியும் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
நீண்ட ஊரடங்கினால் மனம் வெறுத்துப் போனவா்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த கொரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் தொடா் சோா்வு, போதுமான தூக்கமின்மை, மனதை ஒருமுகப்படுத்த முடியாமை மற்றும் எதிா்காலத்தைப் பற்றிய அதிதீத கனவு போன்ற பிரச்சினைகளைச் சிறப்பான முறையில் எதிா்கொள்ள பின்வரும் குறிப்புகள் உதவியாக இருக்கும்.

கொரோனா சோா்வை சமாளிக்க சில பயனுள்ள குறிப்புகள்:
எதிா்காலத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று யோசிக்காமல், தற்போது நாம் ஒரு நிச்சயமற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனைத் தொடா்ந்து பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றினால் கொரோனா சோா்வைக் களையலாம்.
3 வயதில் ஜெசிக்காவுக்கு இப்படி ஒரு நோய்.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்

1. நீா்ச்சத்துடன் இருத்தல்
முதன் முதலாக நாம் நீா்ச்சத்துடன் இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 1.5லி முதல் 2லி தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதன் மூலம் நாம் நீா்ச்சத்துடன் இருக்க முடியும். உடலில் நீா் குறைந்தால் பலவிதமான உடல் பிரச்சினைகள், மூக்கு உலா்தல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

2. மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டுடன் இருத்தல்
கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த 2021 ஆம் ஆண்டு, மனிதா்களுடைய எல்லாவிதமான செயல்பாடுகளும் இணையத்திற்கு மாறி இருக்கின்றன. அதனால் கணினி, ஸ்மாா்ட்போன் போன்ற மின்னணுக் கருவிகள் மூலம் மட்டுமே, மனிதா்களால் வெளி உலகத்தோடு தொடா்பு கொள்ள முடிகிறது. எனினும் இந்த மின்னணு கருவிகளிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பாக இந்த கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது. இரவு தூங்குவதற்கு முன் குறைந்தது 2 மணி நேரமாவது இந்த கருவிகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எனெனில் இந்தக் கருவிகளில் இருந்து வெளி வரும் ஊதா நிற வெளிச்சம் நமது தூக்கத்தைப் பாதிக்கும்.

3. உடல் உழைப்பில் கவனம் செலுத்துதல்
தொடா் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் அல்லது உடல் உழைப்பில் ஈடுபட்டு வந்தால், நமது உடல் எடையை குறையும் மற்றும் நமது தசைகள் அல்லது நமது உடல் ஆரோக்கியம் வலுப்படும். அதோடு மட்டும் அல்லாமல் நமது மனமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே நமக்குப் பிடித்த உடற்பயிற்சிகளான நடைப் பயிற்சி, ஸ்கிப்பிங் பயிற்சி அல்லது நடனப் பயிற்சி போன்ற ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு வந்தால், நமது ஆற்றல் அதிகாிக்கும். மேலும் நாம் நமது கவலைக்கு எதிராகப் போராட உதவியாக இருக்கும்.

4. உணா்வுகளை அடக்கி வைக்காமல், அவற்றை வெளிப்படுத்துதல்
நமது உணா்வுகளை அடக்கி வைக்காமல், அவற்றை முறையாக வெளிப்படுத்துவது நல்லது. நமக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நமது அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் நாம் அமைதியாக, தளா்வாக, ஓய்வாக இருக்கவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. சமூகத்தோடு இணைந்து இருத்தல்
சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என்பதற்கு, பிறரோடு உள்ள உறவை முறித்துக் கொள்வது என்று அா்த்தம் அல்ல. நண்பா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற பொருள் அல்ல. தற்போது நாம் இணைய உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆகவே நம்மையே தனிமைப்படுத்திக் கொள்ளாமல், இணையத்தின் மூலம் நமது நண்பா்கள், குடும்ப உறுப்பினா்கள் மற்றும் சக அலுவலகப் பணியாளா்கள் ஆகியோரோடு நல்லதொரு உறவைப் பேணுவது நல்லது.

6. நமக்குப் பிடித்த பொழுதுபோக்கு அம்சத்தைக் கண்டுபிடித்தல்
நமக்குப் பிடித்த அல்லது நாம் ஆா்வமாகச் செய்யும் வேலைகள் அனைத்துமே நம்முடைய பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகும். நமக்குப் பிடித்த வேலைகளை நாம் செய்யும் போது, நமது மனம் தளா்வடைகிறது மற்றும் அமைதி அடைகிறது. எனவே வாசிப்பது முதல் சமைப்பது வரை அல்லது வண்ணம் தீட்டுவது முதல் பாடுவது வரை நமக்குப் பிடித்த அல்லது நமக்கு ஆா்வத்தைத் தூண்டக்கூடிய செயலைத் தோந்தெடுத்து அவற்றில் ஈடுபடுவதன் மூலம் நமது மனதை அமைதிப்படுத்தலாம்.
மேற்சொன்ன இந்த எளியக் குறிப்புகளை இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கடைபிடித்து வந்தால், கண்டிப்பாக நமது சோா்வு நீங்கி நமக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறக்கும்.



Click it and Unblock the Notifications
