Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
ஆண்களே! படுக்கையில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க முடியலையா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க...
பல ஆண்கள் தங்களின் உடல் வலிமையை அதிகரிக்க மருந்துகளின் உதவியை நாடி அவற்றை அன்றாடம் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஆண்களின் இந்த உடல் பலவீனத்தை இயற்கை வைத்தியத்தின் மூலமே குணப்படுத்திவிடலாம்.
இன்றைய காலகட்டத்தில் பல ஆண்களிடையே உடல் பலவீனம் என்ற பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. இந்த உடல் பலவீனத்தால், அவர்களிடையே உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகரிப்பது மட்டுமின்றி, குடும்பம் மற்றும் ரொமான்டிக் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் பல ஆண்கள் தங்களின் உடல் வலிமையை அதிகரிக்க மருந்துகளின் உதவியை நாடி அவற்றை அன்றாடம் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஆண்களின் இந்த உடல் பலவீனத்தை இயற்கை வைத்தியத்தின் மூலமே குணப்படுத்திவிடலாம்.

இக்கட்டுரையில் ஆண்களின் உடல் பலவீனத்தை சரிசெய்யும் ஒரு அற்புதமான எனர்ஜி பானம் குறித்து தான் கொடுத்துள்ளோம். இந்த பானத்தை ஆண்கள் குடித்து வந்தால் உடல் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது போன்று உணர்வதோடு, நீண்ட காலம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது இந்த எனர்ஜி பானத்தை எப்படி தயாரிப்பது என்பதையும், இந்த பானத்தைக் குடிப்பதால் பெறும் நன்மைகளைக் குறித்தும் காண்போம்.

தேவையான பொருட்கள்:
ஆண்களின் உடல் பலவீனத்தைப் போக்குவதற்கு உதவும் பானத்தைத் தயாரிப்பதற்கு மூன்று பொருட்கள் இருந்தால் போதும். அந்த பொருட்களாவன:
* உலர்ந்த பேரிச்சம் பழம்
* மக்கானா
* பால்
இந்த பானத்தை இளைஞர்கள் தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. வயதானாலும் எப்போதும் ஆற்றலுடன் இருக்க வேண்டுமென நினைக்கும் யார் வேண்டுமானாலும், இந்த அற்புத பானத்தைக் குடிக்கலாம்.

உலர்ந்த பேரிச்சம் பழத்தின் நன்மைகள்
உலர்ந்த பேரிச்சம் பழத்தில் கால்சியம், நார்ச்சத்து, ஜிங்க், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இது ஆண்களின் ஸ்டாமினாலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. சொல்லப்போனால் பேரிச்சம் பழம் உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கும், ஒல்லியாக இருப்பவர்களுக்கும் ஒரு அற்புதமான உணவுப் பொருள். மேலும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு நல்லது.

மக்கானாவின் நன்மைகள்
மக்கானாவை பலர் கடைகளில் பார்த்திருப்பீர்கள். இது வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த மக்கானா ஆண்களுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள கார்போஹைட்ரேட், புரோட்டீன், கனிமச்சத்துக்கள், கொழுப்பு, பாஸ்பரஸ் போன்றவை ஆண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதை ஆண்கள் தினமும் உட்கொண்டு வந்தால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் உற்பத்தி அதிகரித்து, ஆண்களின் உடல் பலவீனம் நீங்கும்.

பால்
பொதுவாக பால் ஸ்டாமினாவை அதிகரிக்கும். தினமும் பால் குடித்து வந்தால், ஸ்டாமினா அதிகரிப்பதோடு, உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைத்து உடலும் வலிமையாக இருக்கும். அதுவும் பாலை சூடாக குடிப்பதால், உடல் வலி பிரச்சனை அனைத்தும் நீங்கும்.

தயாரிக்கும் முறை:
* முதலில் உலர்ந்த பேரிச்சம் பழம் மற்றும் மக்கானாவை குறைந்தது 2-3 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு டம்ளர் பாலை மிக்சர் ஜாரில் ஊற்றி, அதில் ஊற வைத்த பேரிச்சம் பழம் மற்றும் மக்கானாவை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது எனர்ஜி பானம் தயார்.
இந்த பானத்தை தினமும் குடிக்கலாம். மேலும் இந்த பானத்தை ஒருமுறை குடித்த உடனேயே ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும். இந்த பானத்தின் சுவையை அதிகரிக்க நினைத்தால், அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
Pic Courtesy: bulkbites

எனர்ஜி பானத்தின் பிற நன்மைகள்:
* பால், பேரிச்சம் பழம் மற்றும் மக்கானாவால் தயாரிக்கப்படும் இந்த பானம் நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.
* மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்குகிறது.
* தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இந்த பானத்தைக் குடித்தால் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். ஏனெனில இந்த பானத்திற்கு தூக்க ஹார்மோன்களை அதிகரிக்கும் திறன் உள்ளது.
* படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட்டு இன்பத்தை அனுபவிக்க முடியாமல் அவதிப்படும் ஆண்கள், இந்த பானத்தைக் குடித்தால் நன்கு செயல்பட முடியும். இதனால் ரொமான்டிக் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
