இந்த 2 சத்துக்களின் குறைபாடு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

புதிய ஆய்வு ஒன்றில் போதுமான ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் கிடைக்காமல் போவது புற்றுநோயுடன் தொடர்புடைய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் என்பது உடலின் எந்த உறுப்பு அல்லது திசுக்களிலும் தொடங்கும் நோய்களின் ஒரு பெரிய குழு ஆகும். இந்த புற்றுநோய் உடலில் அசாதாரண கட்டிகள் கட்டுப்பாடு இல்லாமல் வளரும் போது, வழக்கமான எல்லைகளைத் தாண்டி அருகில் உள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவுகிறது. இதன் அடுத்த கட்டம் மெட்டாஸ்டாசிசிங் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இந்நிலையில் தான் மரணம் ஏற்படும். புற்றுநோயின் பிற பெயர்களாவன நியோபிளாசம் மற்றும் வீரியமிக்க கட்டி ஆகியவை.

2018 ஆம் ஆண்டில் 9.6 மில்லியன் இறப்புகள் அல்லது ஆறில் ஒரு இறப்பு என மதிப்பிடப்பட்ட உலகளவில் மரணத்திற்கு காரணமான இரண்டாவது முக்கிய காரணியாக புற்றுநோய் உள்ளது. புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. இதில் நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஆண்களைத் தாக்கும் பொதுவான புற்றுநோயாகும். அதே வேளையில் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஆகியவை பெண்களிடையே காணப்படும் பொதுவான புற்றுநோய்களாகும். புற்றுநோய் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம்.

2020 ஆம் ஆண்டில் 13,92,179 புற்றுநோய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 7,70,230 பேர் புற்றுநோயால் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு புதிய ஆய்வு ஒன்றில் இரண்டு ஊட்டச்சத்து குறைபாடுகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு

புதிய ஆய்வு

புதிய ஆய்வு ஒன்றில் போதுமான ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் கிடைக்காமல் போவது புற்றுநோயுடன் தொடர்புடைய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஃபோலேட் என்பது நீரில் கரையக்கூடிய பி வைட்டமின். இது பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளில் காணப்படுகிறது. அதே போல் ஃபோலிக் அமிலம் என்பது ஒரு செயற்கை வகை ஃபோலிக் அமிலமாகும். இது தானியங்கள் மற்றும் செரில்களில் காணப்படுவதோடு, சப்ளிமெண்டுகளாகவும் கிடைக்கிறது.

ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் கூற்று...

ஸ்வீடன் ஆராய்ச்சியாளர் கூற்று...

ஸ்வீடனில் உள்ள லண்ட பல்கலைகழகத்தில் ஊட்டச்சத்து, மெட்டபாலிசம் மற்றும் அழற்சி ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றவரும் ஆராய்ச்சியாளருமான பெட்ரோ கரீரா பாஸ்டோஸ் அவர்களின் கருத்துப்படி, ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்களின் குறைபாடு உணவுக் கூறுகளில் ஒன்றாகும். இது குரோமோசோம் சிதைவுகள், டிஎன்ஏ ஹைப்போமெதிலேஷன் மற்றும் பிறழ்வுகளுக்கு அதிக உணர்திறன் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது.

ஆகவே ஒருவருக்கு ஃபோலேட் குறைபாடு ஏற்படாமல் இருக்க, ஃபோலேட் நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுக்க வேண்டியது முக்கியம். இந்த ஃபோலேட் குறைபாடு இருந்தால், அது உடலில் சில அறிகுறிகளை வெளிக்காட்டும். இந்த அறிகுறிகளை கவனித்து சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது மோசமடையலாம் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோயை உண்டாக்கலாம்.

ஃபோலேட் குறைபாட்டின் அறிகுறிகள்

ஃபோலேட் குறைபாட்டின் அறிகுறிகள்

தசை பலவீனம், வயிற்றுப் போக்கு, சுவை உணர்வு இழப்பு, உணர்வின்மை, மன இறுக்கம், சோர்வு, வாய்ப்புண், நாக்கு வீக்கம், புற நரம்பியல் பிரச்சனை, மூச்சுத் திணறல் மற்றும் வெளிரிய சருமம் போன்றவை ஃபோலேட் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

பி வைட்டமின்கள்

பி வைட்டமின்கள்

பி வைட்டமின்கள் என்பது 8 வகையான ஊட்டச்சத்துக்களின் தொகுப்பாகும். இது உடலில் உள்ள செல்களின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலின் அளவைப் பராமரிக்க மிகவும் முக்கியமானவை. இந்த பி வைட்டமின்களின் அறிகுறிகள் ஒருவரின் உடலில் உள்ள குறைபாடுடைய சில வைட்டமின்களைப் பொறுத்தது.

பி வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகள்

பி வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகள்

உடல் சோர்வு, பலவீனம், மலச்சிக்கல், தேவையற்ற எடை இழப்பு, மோசமான நினைவாற்றல், பசியின்மை, நாக்கு புண், அதிகளவு தலைமுடி உதிர்வது போன்றவை பி வைட்டமின்களின் குறைபாட்டினை கண்டறிய உதவும் அறிகுறிகளாகும்.

ஆய்வு சொல்வது என்ன?

ஆய்வு சொல்வது என்ன?

ஃபோலேட், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 போன்றவை மெத்தியோனைன் தொகுப்பு மற்றும் டிஎன்ஏ மெத்திலேஷனில் முக்கிய பங்கு வகிக்கின்றன. டிஎன்ஏ மெத்திலேஷன் மாற்றப்படும்போது, ​​மரபணு மாற்றங்கள் மற்றும் டிஎன்ஏ சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, இது இறுதியில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று உணவியல் நிபுணர் பிளேர் பெர்சின் கூறுகிறார்.

அதே வேளையில், அதிகப்படியான ஃபோலிக் அமிலத்திற்கும், புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையேயான தொடர்பை சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளதாக பிளேயர் விளக்குகிறார். ஆகவே ஃபோலிக் அமிலத்தை ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய அளவில் மட்டும் உட்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டு கூறுகிறார்.

இந்த சத்துக்களின் உணவு பரிந்துரைகள் என்ன?

இந்த சத்துக்களின் உணவு பரிந்துரைகள் என்ன?

19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு நாளைக்கு 400 mcg ஃபோலேட் பெற முயற்சிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் 600 mcg ஃபோலேட்டைப் பெற வேண்டும். அதுவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்களாக இருந்தால், அவர்கள் ஒரு நாளைக்கு 500 mcg பெற முயற்சிக்க வேண்டும் என்று பிளேயர் கூறுகிறார்.

ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்த உணவுகள்

ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்த உணவுகள்

* சப்ளிமெண்டுகள் தவிர, பருப்பு வகைகள், பச்சை இலை காய்கறிகள், ஈஸ்ட், முழு தானியங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை அடங்கிய சமச்சீரான உணவை உண்பதன் மூலம் உடலுக்கு வேண்டிய போதுமான பி வைட்டமின்களைப் பெறலாம்.

* சில உணவுகளில் ஃபோலேட் மற்றும் பி வைட்டமின்கள் நல்ல அளவில் நிறைந்துள்ளன. அவை ப்ராக்கோலி, பசலைக்கீரை, முட்டைக்கோஸ், கேல், பட்டாணி, கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, கடல் உணவு, பழங்கள், ஜூஸ்கள், பால், முட்டைகள், பருப்பு வகைகள், அஸ்பாரகஸ், சிக்கன், கைக்குத்தல் அரிசி, அவகேடோ போன்றவை.

ஆகவே அடுத்த முறை உங்கள் உணவைத் திட்டமிடும் போது, அந்த உணவில் போதுமான பி வைட்டமின்கள் நிறைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, June 8, 2022, 12:25 [IST]
Desktop Bottom Promotion