Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
எச்சரிக்கை! ஒருவருக்கு இனப்பெருக்க பிரச்சனை இருந்தால் இளம் வயதிலேயே இந்த அறிகுறி தெரியுமாம்..
ஒரு ஆண் மற்றும் பெண்ணிற்கு இனப்பெருக்க பிரச்சனை இருந்தால், இளமைப் பருவத்தில் வெளிப்படும் சில பொதுவான அறிகுறிகளைக் காண்போம்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இளமைப் பருவம் என்பது மிகவும் முக்கியமான கட்டமாகும். ஏனெனில் இளமைப் பருவத்தில் தான் ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்படும். மேலும் இந்த கட்டத்தில் தான் பல கேள்விகள் மனதில் எழும் மற்றும் அந்த கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகம் இருக்கும். சொல்லப்போனால் இளமை பருவம் என்பது ஒரு ஆண் அல்லது பெண் பருவமடையும் கட்டமாகும். இந்த கட்டத்தில் ஆண் அல்லது பெண்ணிண் உடலானது பாலியல் இனப்பெருக்கம் செய்யக்கூடிய வயது வந்த ஒருவராக மாற்றமடைகிறது.

இந்த இளமைப் பருவத்தில் ஆண் மற்றும் பெண்கள் சந்திக்கும் பொதுவான இனப்பெருக்க பிரச்சனைகள் குறித்து இளம் வயதினர் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஆய்வுகளின் படி, 15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே தான் எச்.ஐ.வி தொற்றுககள் அதிகம் உள்ளன. ஆகவே இளமை பருவத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடல்கள், கருத்தடை சாதனங்கள், கர்ப்பம், பாலியல் மற்றும் பிற பிரச்சனைகளை பற்றி அறிந்திருக்க வேண்டும். இப்போது ஒரு ஆண் மற்றும் பெண்ணிற்கு இனப்பெருக்க பிரச்சனை இருந்தால், இளமைப் பருவத்தில் வெளிப்படும் சில பொதுவான அறிகுறிகளைக் காண்போம்.

தாமதமாக பருவமடைவது
பாலியல் வளர்ச்சியானது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும். எப்போது ஒரு ஆண் குழந்தையின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பெண் குழந்தையின் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்போது பருவமடைவது தாமதமாகும்.

ஆண் ஹைபோகோனாடிசம்
ஹைபோகோனாடிசம் என்பது போதுமான அளவு டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்ய முடியாத நிலையாகும். டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் தான் ஆண்களின் வளர்ச்சி மற்றும் பருவமடைவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

வேகமாக பருவமடைவது
ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை எதிர்பார்த்த வயதை விட முன்னதாகவே பருவமடைந்தால், அது முன்கூட்டியே பருவமடைதல் (precocious puberty) என்று அழைக்கப்படுகிறது. அதாவது குழந்தையின் பாலியல் முதிர்ச்சியானது வழக்கத்தை விட வேகமாக உருவாவதை இது குறிக்கிறது. முன்கூட்டியே பருவமடைவது பெண்களில் 8 வயதிற்கு முன்பும், ஆண்களில் 9 வயதிற்கு முன்பும் ஏற்படலாம்.

அமினோரியா
ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படாமல் இருக்கும் நிலை தான் அமினோரியா. இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பு குறைபாடுகள், போதுமான உடற்பயிற்சியில்லாமை அல்லது உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றால் ஏற்படலாம். இது தவிர பிறப்புறுப்பு குழாயில் பிரச்சனைகள் இருந்தாலும் இது ஏற்படக்கூடும்.

அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு
டீனேஜ் வயது பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவது. அதுவும் சிலருக்கு ஒழுங்கற்ற இடைவெளியில் மற்றும் நீண்ட நாட்கள் இரத்தப்போக்கு ஏற்படும். இப்படி ஏற்பட்டால் அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. ஏனெனில் இது பிற்காலத்தில் குழந்தை பிறப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே இம்மாதிரியான பிரச்சனையை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்ய வேண்டும்.

மாதவிடாய் பல மாதங்கள் தள்ளிப்போவது
பருவமடைந்த பின் சில மாதங்கள் சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்றி ஒழுங்கற்றதாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான மாதவிடாய் சுழற்சி பிரச்சனையானது சில மாதங்கள் அல்லது வருடங்களில் தானாகவே சரியாகிவிடும். ஒருவேளை சரியாகாமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வலிமிக்க மாதவிடாய்
பருவ வயதில் சில பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு முன் அல்லது மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத கடுமையான வயிற்று வலியை சந்திப்பார்கள். இது சில பெண்களுக்கு சாதாரணமாகவும், இன்னும் சில பெண்களுக்கு எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனையின் காரணமாகவும் ஏற்படலாம். இந்த மாதிரியான வலி பெரும்பாலும் வலி நிவாரணி மாத்திரைகள், கை வைத்தியங்கள், ஹாட் பேக்ஸ் போன்றவற்றால் சரியாகலாம். கடுமையான சந்தர்ப்பங்களில் எண்டோமெட்ரியோசிஸிற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.



Click it and Unblock the Notifications
