For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வறட்டு இருமல் பாடாய் படுத்துதா? இதோ அதிலிருந்து விடுவிக்கும் சில ஆயுர்வேத வழிகள்!

நாள்பட்ட வறட்டு இருமல் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கி, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் தடுக்கும். இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேதம் எளிமையான மற்றும் விரைவான தீர்வை அளிக்கும்.

|

தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் மோசமான காலநிலை காரணமாக பலர் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்படுகிறார்கள். அதில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது வறட்டு இருமல் தான்.

Suffering From Dry Cough? Ayurvedic Remedies To Get Rid Of It

வறட்டு இருமல் பல காரணங்களால் வரலாம். அதில் சுவாச பாதையில் தொற்றுக்கள், நிமோனியா, அழற்சி மற்றும் சைனஸ் பிரச்சனை போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமின்றி, தூசி, நச்சுமிக்க பொருட்கள் காற்றில் இருப்பது போன்றவையும் ஒருவருக்கு வறட்டு இருமலை உண்டாக்கலாம். வறட்டு இருமல் என்பது நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்ற முடியாத ஒரு நிலையாகும்.

MOST READ: இந்த பழக்கம் இருப்பவர்களை கொரோனா வைரஸ் வேகமா தாக்க வாய்ப்பிருக்காம்.. எச்சரிக்கையா இருங்க...

ஒருவருக்கு வறட்டு இருமல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம் மற்றும் இது குளிர் அல்லது காய்ச்சலாக கூட முன்னேறக்கூடும். நாள்பட்ட வறட்டு இருமல் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கி, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் தடுக்கும். இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேதம் எளிமையான மற்றும் விரைவான தீர்வை அளிக்கும். இப்போது வறட்டு இருமல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சில ஆயுர்வேத வழிகளைக் காண்போம்.

MOST READ: கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் இந்திய மூலிகைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிளகு

மிளகு

மிளகு சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் சிறப்பான ஒரு பொருள் தான் மிளகு. ஒரு டீஸ்பூன் தேனில், ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள சேர்த்து கலந்து சாப்பிட்டால், தொண்டைப்புண் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், பட்டை, இஞ்சி, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்தும் குடிக்கலாம். இது கடுமையான இருமல் மற்றும் சளியில் இருந்து விரைவில் விடுவிக்கும்.

தேன்

தேன்

பகல் மற்றும் இரவு நேரங்களில் இருமல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு தேன் மிகச்சிறந்த தேர்வு. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளது. இது தொண்டைப் புண் மற்றும் இருமலால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும். சுடுநீரில் தேன் கலந்து ஒரு நாளைக்கு பலமுறை குடித்து வந்தால், எரிச்சலூட்டும் இருமலில் இருந்து விடுபடலாம்.

புதினா

புதினா

புதினாவில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் இரண்டுமே உள்ளன. இது தொண்டை கரகரப்பு மற்றும் இருமலைக் குறைக்கும். அதற்கு புதினாவை பல வழிகளில் உணவில் சேர்க்கலாம். அதில் இரவு உறங்குவதற்கு முதன் புதினா டீயை குடித்தால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் செய்யும் வறட்டு இருமல் தடுக்கப்படும்.

மஞ்சள் பால்

மஞ்சள் பால்

மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன. மஞ்சள் வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால், வறட்டு இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். அதிலும் அத்துடன் சிறிது பூண்டு சேர்த்துக் கொண்டால், அது இன்னும் சிறப்பான பலனை விரைவில் தரும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மேம்படுத்துவதோடு, உடலில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வறட்டு இருமல் பிரச்சனைக்கான அறிகுறிகளில் இருந்து விடுபட, இஞ்சி துண்டை வாயில் போட்டு மெல்லவோ அல்லது இஞ்சி டீயைத் தயாரித்துக் குடிக்கவோ செய்யலாம்.

இதர வழிகள்

இதர வழிகள்

வெறும் ஆயுர்வேத வழிகளை மட்டும் முயற்சித்தால் வறட்டு இருமலில் இருந்து விடுபட முடியாது. வாழ்க்கை முறையில் குறிப்பிட்ட மாற்றங்களை செய்ய வேண்டியதும் அவசியம். கீழே அவை கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதை பின்பற்றினால், நிச்சயம் எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம்.

டயட்டில் கவனம்

டயட்டில் கவனம்

* வறட்டு இருமலால் அவஸ்தைப்படும் போது காரமான அல்லது ஜங்க் உணவுகளை உண்ணும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

* ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.

ஓய்வு தேவை

ஓய்வு தேவை

* கடுமையான இருமலால் கஷ்டப்படும் போது, போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.

* அதிகம் பேசாமல் குரல்வளைக்கு ஓய்வு கொடுப்பதோடு, எப்போதும் வெதுவெதுப்பான நீரைப் பருக வேண்டும்.

நுரையீரல் ஆரோக்கியத்தை கவனிக்கவும்

நுரையீரல் ஆரோக்கியத்தை கவனிக்கவும்

* நுரையீரலுக்கு செல்லும் சுவாசக் குழாயில் எரிச்சலூட்டி இருமலைத் தூண்டிவிடும் கொசுவர்த்திகள், ஊதுபத்திகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகாக்களை அன்றாடம் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Suffering From Dry Cough? Ayurvedic Remedies To Get Rid Of It

Ayurveda is the easiest and the quickest way to win over a cough. Here are some of the ayurvedic remedies that will help you get rid of dry cough.
Story first published: Monday, March 9, 2020, 13:26 [IST]
Desktop Bottom Promotion