Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
மக்களே உஷார்..! கொரோனா வைரஸ் காற்றிலும் பரவுமாம்.. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்..
புதிய ஆய்வு ஒன்றில், கொரோனா வைரஸ் காற்று வழியாகவும் பரவுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வால் நிச்சயம் மக்களிடையே அச்சம் மேலும் அதிகரிக்கும்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் உலகமே அழிந்து கொண்டிருக்கிறது எனலாம். அந்த அளவில் கொரோனா வைரஸ் ஏராளமான உயிர்களைப் பறித்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த புதிய கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்களால் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வைரஸ் எவ்வாறெல்லாம் பரவும் என்பது குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இன்று வரை COVID-19 என்னும் கொரோனா வைரஸ் தும்மும் போது அல்லது இருமலின் போது சுவாசத் துளிகளால் மக்களிடையே பரவுகிறது என்று தான் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது புதிய ஆய்வு ஒன்றில், கொரோனா வைரஸ் காற்று வழியாகவும் பரவுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வால் நிச்சயம் மக்களிடையே அச்சம் மேலும் அதிகரிக்கும். இருப்பினும், முறையான தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால், நிச்சயம் இந்த வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

ஆய்வு
வளர்ந்து வரும் தொற்றுநோய் பதிப்பில் வெளியிடப்பட்ட ஆய்வில், சீனாவின் வுஹானில் உள்ள இரண்டு மருத்துவமனை வார்டுகளில் உள்ள நோயாளிகளிடமிருந்து சுமார் 4 மீட்டர் பரப்பளவில் கொரோனா வைரஸ் மரபணுப் பொருட்கள் மற்றும் காற்றில் பரவலாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் பொருள் என்னவெனில், இந்த 4 மீட்டருக்கு உட்பகுதியில் இருந்து சுவாசிப்பதன் மூலம் கொரோனா வைரஸைப் பெறலாம் என்பதாகும்.

மாஸ்க் கட்டாயம்
இதே ஆய்வில் அறிகுறியற்ற கேரியர்களிடமிருந்து வைரஸ் பரவுவதைக் குறைக்க, அனைத்து மக்களும் வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கருத்தும் வலுவாக தெரிவிக்கப்பட்டது.

மேற்பரப்புகளில் எவ்வளவு காலம் உயிர் வாழும்?
சமீபத்தில் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் வெவ்வேறு மேற்பரப்புகளில் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பது குறித்து கூறப்பட்டது. அதில் COVID-19 வைரஸ் காப்பர்/தாமிரத்தில் கிட்டத்தட்ட 4 மணிநேரம், அட்டைப்பெட்டிகளில் 24 மணிநேரம் வரை மற்றும் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல்/எஃகு பொருட்களின் மீது 72 மணிநேரம் வரை உயிர் வாழும் என்று கூறப்பட்டது. அதே ஆய்வில் காற்று தூசுப்படலத்தில் கொரோனா வைரஸ் 3 மணிநேரம் வரை மிதக்கிறது என்று கூறப்பட்டாலும், சுவாசிப்பதன் மூலம் வைரஸ் பரவக்கூடும் என்று அந்த ஆய்வு கூறவில்லை. ஆனால் சமீபத்தில் காற்றின் மூலம் வைரஸ் பரவும் என்று கண்டுபிடிக்கப்பட்டது புதிய கவலையை எழுப்புகிறது என்று தான் கூற வேண்டும்.

அசுத்தமான மேற்பரப்புகளால் பெரும் ஆபத்து
பெரும்பாலான சந்தர்பங்களில் கொரோனா வைரஸ் நெருங்கிய தொடர்பு மூலம் தான் பரவும். ஆனால் புதிய கொரோனா வைரஸ் இருக்கும் அசுத்தமான மேற்பரப்புக்களைத் தொடுவதன் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆகவே நாள் முழுவதும் நீங்கள் எதைத் தொடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் வீட்டிலேயே இருந்தாலும், வீட்டிற்கு வரும் அஞ்சல், மளிகைப் பொருட்கள் மற்றும் செய்தித்தாள் இன்னும் பல பொருட்களின் வழியே வைரஸ் உங்களைத் தாக்கலாம். முடிந்த அளவு வீட்டை சுத்தமாக பராமரியுங்கள்.

ஆன்லைன் ஆர்டரிலும் கவனம் தேவை
நீங்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து, எந்த ஒரு பொருளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம். ஆனால் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களைக் கொண்டு வரும் நபருக்கு வைரஸ் தொற்று இல்லாமல் இருந்தாலும், அவரிடமிருந்து பொருட்களை வாங்கிய பின்னர் உங்கள் பாதுகாப்பிற்காக கைகளை மட்டுமின்றி அந்த பொருட்களையும் நீரால் கழுவுவது மிகவும் நல்லது.
ஏனெனில் கொரோனா வைரஸ் மேற்பரப்புக்களிலும் உயிர்வாழக்கூடும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். அதோடு அந்த பொருட்களை வாங்கி வைத்த இடத்தையும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்துவது இன்னும் சிறந்தது.

பளபளப்பான மேற்பரப்புக்கள் ஆபத்தானவை
சில ஆராய்ச்சியாளர்கள் கடினமான, பளபளப்பான மேற்பரப்புகளில் விழும் நீர்த்துளிகளில் வைரஸ் இருந்தால், அது 72 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும் என்று கூறுகின்றனர். பிளாஸ்டிக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பெஞ்ச் டாப்ஸ் மற்றும் கண்ணாடி போன்றவை இதில் அடங்கும். இதனால் தான் எந்த ஒரு தொற்றும் ஏற்படாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவுவதோடு, நீங்கள் அடிக்கடி தொடும் மேற்பரப்புக்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மளிகை கடை
தற்போது கொரோனா வைரஸ் உணவுகளின் மூலம் பரவுவதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் மளிகை கடைக்கு செல்வது மிகப்பெரிய ஆபத்து. ஏனெனில் யாரிடம் வைரஸ் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாது. எனவே அடிக்கடி வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை கடைக்கு சென்றாலும், ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் வைரஸ் தொற்றின் அபாயத்தைக் குறைக்கலாம்.

கடைக்கு செல்லும் போது பின்பற்ற வேண்டியவைகள்:
* கடைக்கு சென்றால் கண்ட இடங்களைத் தொடுவதைத் தவிர்த்து, தேவையான பொருளை மட்டும் எடுங்கள்.
* வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய மறவாதீர்கள்.
* கடைக்கும் நுழையும் போதும், வெளியே வந்த பின்னரும் சானிடைசர் பயன்படுத்துங்கள்.
* கடைக்கு சென்றால், மற்றவர்களிடம் இருந்து குறைந்தது 6 அடி தூரத்தைப் பராமரியுங்கள்.
* மீண்டும் பயன்படுத்தக்கூடிய மளிகைப் பைகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், கடையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அவற்றைக் கழுவுங்கள்.
* கடைகளில் வாங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகளை நீரில் கழுவுவதும் நல்ல யோசனையாகும்.



Click it and Unblock the Notifications











