Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Venus Ketu Conjunction In Leo 2026: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். தற்போது கேது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.

இப்படிப்பட்ட சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவர். தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் ஜூலை 04 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கேது இருப்பதால், இப்பெயர்ச்சியால் கேது-சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த சேர்க்கையாது ஜூலை 30 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது சிம்ம ராசியில் நிகழும் கேது-சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் கேது-சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். செல்வம் பெருகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். சுப செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் கேது-சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பல புதிய வருமான வழிகள் உருவாகும். தொழிலில் ஒரு புதிய சாதனையை படைப்பீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆயினும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை தங்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மன அமைதி கிடைக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



