Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்..
Numerology: மனித வாழ்க்கையில் எண்கள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த எண்களைக் கொண்டு கணிக்கக்கூடிய ஒரு ஜோதிட முறை தான் எண் கணிதம். இந்த எண் கணிதம் கொண்டு ஒருவரது குணாதிசயங்கள், நிகழ்காலம், எதிர்காலம், தொழில் வாய்ப்புகள், முன் ஜென்ம பந்தங்கள் மட்டுமின்றி, ஆன்மாவின் பயணத்தையும், அடுத்த பிறவியைக் குறித்தும் அறியலாம்.

அந்த வகையில் எண் கணிதத்தில் உள்ள 1 முதல் 9 வரையிலான எண்ணிற்கு உரியவர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து இப்போது காண்போம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணின் அதிபதி சூரியன். எனவே இந்த எண்ணிற்குரியவர்களின் குணங்கள் தலைமைப்பண்புகள், தனித்து செயல்படுவது, அதிகாரம் ஆகியவையாகும். இந்த பிறவியில் அதிகாரத்தை விரும்புவதால், அடுத்த பிறவியில் ஒரு தலைவராகவோ, வழிகாட்டியாகவோ, குழுவை நடத்துபவராகவோ பிறக்க வாய்ப்புள்ளது.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணின் அதிபதி சந்திரன். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குணம் அமைதி, உணர்ச்சிவசப்படுவது, அதிக கற்பனைத் திறன், கலை ஆர்வம் போன்றவையாகும். இந்த பிறவியில் அமைதியையும், அன்பையும் விரும்புவதால், அடுத்த பிறவியில் ஒரு கலைஞராக, உலக புகழ்பெற்ற தத்துவஞானியாக பிறப்பீர்கள்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த எண்ணின் அதிபதி குரு பகவான். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அறிவு, ஒழுக்கம், ஆன்மீகம், கற்பிக்கும் திறன் ஆகியவை நிறைந்திருப்பார்கள். குருவின் ஆதிக்கம் நிறைந்திருப்பதால், அடுத்த பிறவியில் மக்களுக்கு நல்வழி காட்டும் ஒருவராக அல்லது உலகையே மாற்றக்கூடிய சமூக சீர்திருத்தவாதியாக பிறப்பீர்கள். அதாவது உங்கள் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்வர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணின் அதிபதி ராகு. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பு, புரட்சிகரமான சிந்தனை, ரகசியத்தன்மை ஆகிய குணங்களைக் கொண்டிருப்பார்கள். இந்த பிறவியில் கடினமாக உழைத்து வெற்றி பெறாமல் இருந்தால், அடுத்த பிறவியில் அந்த கடின உழைப்புக்கான பெரிய பலனைப் பெறுவீர்கள். அதாவது அடுத்த ஜென்மத்தில் புகழ்பெற்றவராக அல்லது புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாளராக பிறக்க அதிக வாய்ப்புள்ளது.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த எண்ணின் அதிபதி புதன். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலி, பேச்சுத்திறன், படிப்பாளி, வியாபார திறன் கொண்டிருப்பார்கள். நீங்கள் எந்த ஒரு கட்டுக்குள்ளும் இருக்க விரும்பாதவர். எனவே அடுத்த பிறவியில் ஒரு மாபெரும் சாகச பயணியாக, ஊடகத்துறையில் உச்சம் தொட்ட ஒருவராக இருப்பீர்கள்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அழகு, அன்பு, ஆடம்பரம், குடும்பப் பற்று ஆகிய குணங்களைக் கொண்டிருப்பார்கள். சுக்கிரனின் அருள் பெற்றிருப்பதால், அடுத்த பிறவியில் பணக்கார குடும்பத்தில் பிறக்கலாம், கலைத்துறையில் சிறந்து விளங்கலாம் அல்லது ஆடம்பரமான வாழ்க்கையை வாழலாம்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த எண்ணின் அதிபதி கேது. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குணங்களானது ஞானம், தேடல், தனிமை, ஆன்மீக நாட்டம் ஆகியவை ஆகும். இந்த தேதியில் பிறந்தவர்கள் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்காமல், மறுபிறவியற்ற முக்தி நிலையை அடையலாம். அப்படியே ஒருவேளை பிறந்தால், சித்தராகவோ, தீர்க்கத்தரசியாகவோ பிறப்பீர்கள்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த எண்ணின் அதிபதி சனி பகவான் மற்றும் இவர்கள் நீதி, நேர்மை, போராட்டம், விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். இந்த பிறவியில் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கும், நேர்மைக்கும் அடுத்த பிறவியில் உங்கள் கர்மாவுக்கான பரிசு கிடைக்கும். அதாவது அடுத்த பிறவியில் நீதி வழங்கும் நீதிபதியாகவோ, ஒர் உயர் அரசு அதிகாரியாகவோ அல்லது தொழிலதிபராகவோ பிறக்கலாம்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த எண்ணின் அதிபதி செவ்வாய் மற்றும் இவர்கள் தைரியம், கோபம், தியாகம், மனிதநேயம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அடுத்த பிறவியில் ஒரு ராணுவ தளபதியாகவோ, வீரதீர செயலுக்காக உலகம் போற்றும் ஒரு தலைவராகவோ பிறக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
