சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கிரகங்கள் தொடர்ந்து இயங்கும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அதேசமயம் சில கிரகங்கள் ஒன்றாக இணையும் போது அவை சிக்கலான கிரக அமைப்பாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 04 ஆம் தேதி ஒரு சிக்கலான கிரக அமைப்பு உருவாகப்போகிறது.

Venus-Ketu Conjunction on July 2026 Bring Big Success To These 3 Zodiac Signs

ஜோதிடத்தில் சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஒரு சிக்கலான கிரகக் கூட்டமைப்பாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் ஆடம்பரம், செல்வம் மற்றும் உறவுகளின் அதிபதியாக இருக்கிறார், அதே சமயம் கேதுபகவான் பற்றின்மை மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறார். சுக்கிரன் ஜூலை 04 அன்று சிம்ம ராசியில் நுழைந்து, கேதுவுடன் ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்.

இந்த கிரக சேர்க்கை ஜூலை 30 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த கிரக சேர்க்கை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த கிரக சேர்க்கையால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பழைய கடனில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இறுதியாக இப்போது அதை தொடங்கலாம்.

சுக்கிரனின் ஆசீர்வாதத்தால் அவர்களின் பொருளாதார நிலை வலுவடையலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் வலுவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள்.

விருச்சிகம்

இந்த கிரக சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து நீங்கள் சிறப்பாக சம்பாதிக்கலாம். வியபாரத்தை விரிவாக்கும் முயற்சிகளுக்கு இது ஏற்ற காலமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் இப்போது விரும்பிய வேலையைப் பெறுவார்கள். அவர்களின் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிடலாம் மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவும். சமூகத்தில் அங்கீகாரம் மற்றும் மரியாதை பல மடங்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில், உங்கள் பேச்சாற்றல் பெரிதும் மேம்படும், அதே நேரத்தில் அவர்களின் நிதி நிலை வலுவடையும். மொத்தத்தில் இது அவர்கள் வாழ்க்கையின் பொற்காலமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் ஒரு புதிய வீடு அல்லது சொத்து வாங்குவது பற்றி நீண்ட காலமாக யோசித்துக்கொண்டிருந்தால், இது அதற்கு சிறந்த நேரமாகும். உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவர விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு பாசிட்டிவான செய்திகள் தேடிவரும். உங்கள் சமூக அந்தஸ்து மேம்படும், மேலும் உங்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

இந்த காலகட்டம் நிதி முதலீடுகளுக்கு, குறிப்பாக நீண்ட கால இலக்குகளுக்கு சாதகமானது, இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீயீடுகள் லாபத்தைத் தரக்கூடும். உங்கள் ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், மேலும் நீங்கள் மிகவும் உற்சாகமாக உணருவீர்கள். சரியான அணுகுமுறையுடன், இந்த நேரத்தை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தி உங்கள் இலக்குகளை அடையலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, June 26, 2026, 22:50 [IST]
Desktop Bottom Promotion