புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..

Mercury Retrograde In Cancer 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். மேலும் இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவரும் இவரே ஆவார்.

Mercury Retrograde In Cancer 2026 These Zodiac Signs Will Get Money Benefits

அந்த வகையில் சமீபத்தில் தான் கடக ராசிக்குள் நுழைந்தார். மேலும் கடக ராசியில் நுழைந்த புதனின் ஜூன் 29 ஆம் தேதி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் புதன் ஜூலை 07 ஆம் தேதி மிதுனத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார். இப்படி மிதுன ராசியில் புதன் வக்ர நிலையில் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சிலர் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். அதோடு சில ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். இப்போது புதன் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

புதன் வக்ரமாவதால் ரிஷப ராசிக்காரர்கள் சாதகமான மாற்றங்களை காண்பார்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும். நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக செல்வம் பெருகும்.

தனுசு

புதன் வக்ரமாவதால் தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்

புதன் வக்ரமாவதால் மீன ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மன அழுத்தம் குறையும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் நிதி நிலைமை வலுவடையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, June 26, 2026, 23:35 [IST]
Desktop Bottom Promotion