Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும்
ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா? அப்ப கண்டிப்பா இத படிங்க...
புதிய ஆய்வு ஒன்றில், 9.5 மணிநேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் வேலை செய்வோருக்கு விரைவிலேயே மரணத்தை சந்திக்கும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இன்று நேரம் காலம் பார்க்காமல் பலரும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். உழைப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அந்த உழைப்பின் பலனை அனுபவிக்க நாம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அல்லவா? அலுவலகத்தில் வேலை அதிகமாக உள்ளது என்று தினமும் 9 மணிநேரத்திற்கும் மேலாக அமர்ந்து வேலை செய்தால், உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும்.

புதிய ஆய்வு ஒன்றில், 9.5 மணிநேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் வேலை செய்வோருக்கு விரைவிலேயே மரணத்தை சந்திக்கும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியானது பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதே ஆராய்ச்சியில், ஒருவர் தினமும் 24 நிமிடம் சுறுசுறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொண்டால், விரைவில் மரணத்தை சந்திக்கும் அபாயம் குறைவதாக சொல்லப்பட்டுள்ளது.

ஆய்வு
புதிய ஆராய்ச்சியின் படி, அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் போது, உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு 9.5 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்வோருக்கு தான் விரைவிலேயே இறக்கும் அபாயம் உள்ளது.

அலுவலக வேலை
பொதுவாக அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர் பெரும்பாலும் மதிய உணவின் போது 30-35 நிமிடம் இடைவெளி தான் எடுத்துக் கொள்வார்கள். ஒருசிலரே வேலை செய்யும் நேரத்தில் அடிக்கடி எழுந்து ஆங்காங்கு நடப்பார்கள். எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் போது, உடல் மோசமாக பாதிப்பிற்குள்ளாகும். எனவே தான், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒவ்வொருவரும் 1 1/2 மணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து, சிறு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை
ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு, ஒவ்வொருவரும் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம் என்ற ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது. அதிலும் 18 வயது முதல் 64 வயது வரை, ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 25-30 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

எந்த உடற்பயிற்சிகள் சிறந்தது?
உடற்பயிற்சிகளுள் நடைப்பயிற்சி, ஜாக்கிங், பிராணயாமம், ஸ்ட்ரெட்சிங் போன்றவைகள் அடங்கும். அதுமட்டுமின்றி வீட்டு வேலைகளான சமைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைப் பெருக்குதல் போன்றவைகளும் அன்றாட உடற்பயிற்சிகளுள் அடங்கும். இந்த வேலைகளை செய்தாலே ஒருவர் சுறுசுறுப்புடனும், ஃபிட்டாகவும் இருக்கலாம்.

பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வந்த ஆய்வு
பிரிட்டிஷ் இதழில் வெளிவந்த ஆய்வில், தூக்கத்தைத் தவிர ஒருவர் ஒரே இடத்தில் ஒரே நிலையில் 9.5 மணிநேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்தால், வாழ்நாளின் அளவு குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆராய்ச்சியை ஒஸ்லோவில் உள்ள நோர்வே ஸ்கூல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் சயின்சஸ் நடத்தியது, அதன் முதன்மை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் உல்ஃப் எகெலண்ட் ஆவார்.

ஸ்மார்ட்வாட்ச்
இந்த ஆராய்ச்சியில் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஆராய்ச்சியில் 40 வயது முதல் 62 வயதிற்குட்பட்ட சுமார் 36, 383 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரது தகவல்களையும் சுமார் ஆறு வருடங்களாக கண்காணித்து ஆராய்ந்து வந்தனர் ஆய்வாளர்கள். இந்த ஆய்வின் விசாரணையின் போது, நாள் முழுவதும் அமர்ந்து வேலை செய்தவர்களில் 2,149 பேர் இறந்துள்ளனர்.

ஆய்வு முடிவு
இந்த ஆராய்ச்சியில் தான், யாரெல்லாம் 9.5 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்ததோடு, மிகவும் குறைவாக தங்களது இருக்கையை விட்டு எழுந்தவர்களுக்கு விரைவிலேயே மரணத்தை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதும் தெரிய வந்தது.
எனவே இனிமேல் நீண்ட நேரம் அலுவலகத்தில் வேலை செய்வதைத் தவிர்ப்பதுடன், அவ்வப்போது சிறு இடைவேளை எடுத்துக் கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
