For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெருங்குடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய வழிகள்!

|

நமது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான பகுதி தான் பெருங்குடல். நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் பெருங்குடலின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும், உடலில் இருந்து திடக்கழிவுகளை அகற்றுவதற்கும், தேவையற்ற வைட்டமின்கள், உப்பு, நீர் போன்றவற்றை பிரித்தெடுக்கும் பணியை பெருங்குடல் செய்கிறது. இப்படிப்பட்ட பெருங்குடல் சரியாக செயல்படாமல் போனால், அது நச்சுக்களை அகற்றுவதற்கு பதிலாக உறிஞ்ச ஆரம்பித்துவிடும் இதன் விளைவாக தலைவலி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வாய்வு தொல்லை, உடல் பருமன், சோர்வு, குறைவான ஆற்றல் மற்றும் நாள்பட்ட பிற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பெருங்குடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதற்கும், பெருங்குடலில் நச்சுக்கள் அதிகம் தேங்குவதற்கும் முக்கிய காரணம் செரிமானமாகாத மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான் காரணம். இருப்பினும் பெருங்குடலை சுத்தம் செய்ய பல்வேறு சிகிச்சைகள் தற்போது உள்ளன. ஆனால் பலரும் இயற்கை வழிகளையே முயற்சிக்க விரும்புவார்கள். எனவே கீழே பெருங்குடலை சுத்தம் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் பெருங்குடலை எளிதில் சுத்தம் செய்யலாம்.

குறிப்பு: நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொண்டு வருபவராயின் அல்லது ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவராயின், மருத்துவரின் ஆலோசனையின்றி இந்த வழிகளை மேற்கொள்ளாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இஞ்சி வயிற்று உப்புசத்தைக் குறைக்கவும், பெருங்குடல் செயல்பாட்டை தூண்டிவிடவும், உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும் இஞ்சி செரிமான அமிலத்தின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. அதற்கு இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை குடிக்கலாம். இல்லாவிட்டால் 2 கப் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் 1/4 கப் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இஞ்சி டீயை தயாரித்தும் குடிக்கலாம். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் இஞ்சியை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு, ஒரு நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஆகவே இது பெருங்குடலை சுத்தம் செய்வதில் சிறந்தது. கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, தலைவலி, சரும தொற்றுகள், வயிற்றுப்போக்கு, வாய்வு வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கும். அதற்கு நற்பதமான கற்றாழையின் ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ஒரு எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இந்த சாற்றினை 2-3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் நாள் முழுவதும் தேவையான போது குடியுங்கள்.

கல் உப்பு

கல் உப்பு

கல் உப்பு குடலை சுத்தம் செய்ய பெரிதும் உதவும் ஒரு அற்புதமான பொருள். ஏனெனில் கல் உப்பில் நச்சுநீக்கும் பண்புகள் உள்ளன. அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து, அந்நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பின் சிறிது நேரம் தரையில் படுத்து வயிற்றை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள நச்சுக் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படும். இந்த முறையை மாதத்திற்கு 5 முறை வரை செய்யலாம். இந்த உப்பு நீர் வயிற்றுப் போக்கை உண்டாக்கும் என்பதால், இதை குடித்த பின் அந்நாள் முழுவதும் நீரையும், நற்பதமான ஜூஸ்களையும் தவறாமல் குடிக்க வேண்டும். ஆனால் இந்த உப்பு நீரை உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவற்ற தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம் பெருங்குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஆளி விதையை அரைத்து பொடி செய்து, அவற்றை செரில்கள், தயிர், பழங்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம். விரைவான தீர்வைப் பெற, ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த ஆளி வியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, அந்நீரை காலை உணவு உண்பதற்கு மற்றும் இரவு தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.

தயிர்

தயிர்

தயிரை தினமும் உட்கொள்வது பெருங்குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழியாகும். ஏனெனில் தயிரில் புரோபயோடிக் என்னும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, குடல் நோய்களை எதிர்த்துப் போராடும். அதோடு தயிரில் கால்சியம் நல்ல அளவில் உள்ளது. எனவே பெருங்குடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தயிரை தினமும் சாப்பிடுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உண்பது பெருங்குடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் கழிவுகளை அதிகம் இறுக்கமடையவிடாமல், உடலில் இருந்து எளிதில் வெளியேற்றச் செய்கிறது. அதே வேளையில் நார்ச்சத்துள்ள உணவுகள் அனைத்து வகையான குடல் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவுகிறது. எனவே ராஸ்ப்பெர்ரி, பேரிக்காய், ஆப்பிள் போன்ற நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் சாப்பிடுவதோடு, பட்டாணி, ப்ராக்கோலி போன்ற காய்கறிகளையும் அதிகம் சாப்பிடுங்கள். இது தவிர செரில்கள், முழு தானியங்கள், நட்ஸ், பீன்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றையும் சாப்பிடுங்கள்.

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ்

பெருங்குடலை சுத்தம் செய்யும் போது, சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் திட உணவுகளுக்கு பதிலாக, நற்பதமான காய்கறி ஜூஸ்களை ஒரு நாளைக்கு பல முறை குடியுங்கள். இதனால் பச்சை காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் நச்சுக்களை நீக்க உதவுகிறது. அதோடு இதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் உடலை ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் வைத்துக் கொள்ளும். எனவே பெருங்குடலில் உள்ள நச்சுக்களை நீக்க கேரட், பீட்ரூட், பசலைக்கீரை, கேல் போன்றவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடியுங்கள்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது செரிமான மண்டலத்திற்கு நல்லது. அதே வேளையில் எலுமிச்சை ஜூஸ் குடலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு எலுமிச்சை சாற்றினை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அத்துடன் ஒரு சிட்டிகை கல் உப்பு மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 3-4 முறை குடிக்க வேண்டும்.

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸ்

நற்பதமான ஆப்பிள் ஜூஸ் பெருங்குடலை சுத்தம் செய்ய உதவும் ஒரு அற்புதமான பானம். ஆப்பிள் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அது குடலியக்கத்தை மேம்படுத்துவதோடு, நச்சுக்களை உடைத்தெறிய உதவுகிறது மேலும் இது கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆப்பிள் ஜூஸ் என்றதும் டப்பாவில் அடைத்து விற்கப்படும் ஆப்பிள் ஜூஸை வாங்கிக் குடிக்கக்கூடாது. நற்பதமான ஆப்பிளை எடுத்து, அதை அரைத்து வடிகட்டாமல் குடியுங்கள். இப்படி 3 நாளைக்கு தொடர்ந்து குடித்து வந்தால், பெருங்குடல் சுத்தமாகும். குறிப்பாக இந்த 3 நாட்களும் திட உணவுகளையும், ஜங்க் உணவுகளையும் சாப்பிடக்கூடாது.

தண்ணீர்

தண்ணீர்

பெருங்குடலை சுத்தம் செய்ய உதவும் ஒரு எளிய வழி என்றால் அது தினமும் போதுமான அளவு நீரைக் குடிப்பது தான். ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 டம்ளர் நீரை ஒருவர் குடிக்க வேண்டியது அவசியம். இப்படி தினமும் போதுமான அளவு நீரை குடித்து வந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் சீராக நடைபெறும். முக்கியமாக தினமும் நிறைய தண்ணீரைக் குடிப்பது செரிமான மண்டலத்தில் உணவுகள் எளிதில் நகர உதவியாக இருக்கும். அதோடு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Remedies For Colon Cleansing In Tamil

Here are some simple remedies for colon cleansing. Read on to know more...
Story first published: Wednesday, August 3, 2022, 17:41 [IST]
Desktop Bottom Promotion