Latest Updates
-
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?
உடல் அதிக அமிலத்தன்மையுடன் இருக்கிறது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
மனித உடலில் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை சமநிலையில் இருந்தால் தான் ஒட்டுமொத்த உடலின் இயக்கமும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக செயல்பட முடியும். இதைத் தான் pH பேலன்ஸ் என்று சொல்வார்கள்.
மூளை முதல் குடல் வரை, மனித உடலானது கெமிக்கல்கள், பாக்டீரியாக்கள் மற்றும் செல்கள் ஆகியவற்றின் சீரான அமைப்பாகும். இத்தகைய மனித உடலால் அமிலமாக மாற முடியுமா? மனித உடலில் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை சமநிலையில் இருந்தால் தான் ஒட்டுமொத்த உடலின் இயக்கமும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக செயல்பட முடியும். இதைத் தான் pH பேலன்ஸ் என்று சொல்வார்கள்.
ஒருவரது உடலில் pH அளவு சமநிலையில் இல்லாமல் இருந்தால், அதை எவ்வாறு அறிவது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு நமது உடலே ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். இக்கட்டுரையில் ஒருவரது உடலில் அமிலத்தன்மை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடல் உணர்த்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு அதை எவ்வாறு சரிசெய்வதென்றும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அதைப் பார்ப்போம்.

pH அளவு என்றால் என்ன?
pH அளவு என்பது ஒருவரது உடலில் உள்ள அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையின் அளவீடு ஆகும். இரண்டும் மிகவும் முக்கியமானவை. உதாரணமாக, உண்ணும் உணவுகளை ஜீரணிக்க வயிற்றிற்கு அதிக அமிலத்தன்மை தேவைப்படுகிறது. அதே நேரத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு காரத்தன்மையை சார்ந்துள்ளது. ஆகவே ஒருவரது உடலில் இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டியது என்பது மிகவும் அவசியம்.

எவ்வளவு pH இருக்க வேண்டும்?
pH அளவு 0 முதல் 14 வரை இயங்கும். ஒருவரது உடலின் சரியான pH அளவு என்றால் அது 7 ஆகும். இந்த அளவில் உடலை சமநிலையில் பராமரிக்க முடியும். இது தான் பல்வேறு அமைப்புகளுக்கு சரியான சூழலை வழங்கி சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஆனால் நமது உடல் அடிக்கடி அதிக அமிலத்தன்மைக்கு தள்ளப்படுகிறது. உடலில் அமிலத்தன்மை அதிகரித்தால், அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். எப்போது ஒருவரது pH அளவு 7-க்கு குறைவாக உள்ளதோ, அது உடல் அமிலத்தன்மையுடன் இருப்பதைக் குறிக்கிறது.
இப்போது ஒருவரது உடலில் அமிலத்தன்மை அளவுக்கு அதிகமாக இருந்தால் உடல் வெளிப்படுத்தும் சில முக்கியமான அறிகுறிகளைக் காண்போம்.

உடல் பருமன்
உடலில் அமிலத்தன்மை அளவுக்கு அதிகமாக இருந்தால், அது அதிகளவு இன்சுலினை உற்பத்தி செய்ய தூண்டி, கொழுப்புக்களை அதிகமாக தேங்க வைக்கிறது. இதனால் உடலை சுத்தம் செய்யும் அமைப்புக்களால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை சமாளிக்க முடியாமல், கொழுப்புத் திசுக்களை மீண்டும் தள்ளுகிறது. இந்நிலையில் இது செல்களில் ஒட்டிக் கொள்கிறது.
உடலின் மெட்டபாலிசம் காரத்தன்மையை சார்ந்துள்ளது. உடலில் காரத்தன்மை குறைவாக இருந்து, அமிலத்தன்மை அதிகம் இருக்கும் போது, உறுப்புக்களால் சரியாக செயல்பட முடியாமல் போய், உடலில் உள்ள கலோரிகள் கரைவது தடுக்கப்படுகிறது. ஆகவே உங்களால் எவ்வளவு முயன்றும் உடல் எடையைக் குறைப்பதில் சிரமத்தை கவனித்தால், உடலில் அமிலத்தன்மை அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

பலவீனமான எலும்பு
மனித உடல் மிகவும் புத்திசாலி மற்றும் ஸ்மாட்டானது. உடல் அதிக அமிலத்தை எதிர்கொள்ளும் போது, அது உடலில் காரத்தன்மையைத் தேட ஆரம்பிக்கும். அப்படி தேடும் போது, அது எலும்புகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும். நீண்ட காலமாக உடல் காரத்தன்மையைத் தேடி, அமிலத்தை எதிர்கொள்வதற்கு எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சும் போது, எலும்புகள் பலவீனமடைகிறது. இதன் விளைவாக எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகரிக்கிறது. ஆகவே தான் ஆஸ்டியோபோரோசிஸ் நோயாளிகளை காபி, டீயைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பல் கூச்சம்
2015 ஆம் ஆண்டு வேதியியல் பொறியியல் மற்றும் பயன்பாடுகளின் சர்வதேச இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. அதில் உடலின் அதிக அமிலத்தன்மை, பற்களின் எனாமல் வலிமையைக் குறைப்பதுடன் இணைத்து பேசப்பட்டது.
நீங்கள் சொத்தைப் பற்களைக் கொண்டிருந்தால் அல்லது குளிர்ச்சியான அல்லது சூடான பானத்தையோ அல்லது உணவுகளை உண்ணும் போது கூச்சத்துடன் வலியை உணர்ந்தால், அது அமிலம் தொடர்பான எனாமல் சிதைவால் பாதிக்கப்பட்டிருப்பற்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

தூக்க பிரச்சனை
கடைசியாக மிகவும் முக்கியமான ஒரு அறிகுறி என்றால் அது தூக்க பிரச்சனை. புள்ளிவிவரங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் தூக்க பிரச்சனையை சந்திப்பதற்கு, அவர்களது உடல் அதிகப்படியான அமிலத்தன்மையுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.
உடல் அமிலத்தன்மையை எதிர்கொள்வதற்கு எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சுகிறது என்பதை முன்பே பார்த்தோம். எப்போது ஒருவரது உடலில் கால்சியத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளதோ, அவர்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும் என்று வடக்கு டகோட்டாவில் உள்ள மனித ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உடலில் உள்ள அதிக அமிலத்தன்மையை சரிசெய்வது எப்படி?
உங்கள் உடலில் அதிக அமிலத்தன்மை இருப்பதை நீங்கள் உணர்ந்த பின், அதை எவ்வாறு சரிசெய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான அமில அளவை டயட் மூலமே சரிசெய்ய முடியும். இப்போது எந்த மாதிரியான உணவுகளை உட்கொண்டால், உடலில் இருக்கும் அதிகப்படியான அமில அளவைக் குறைத்து, அமில-கார தன்மையை சமநிலையில் பராமரிக்கலாம் என்பதைக் காண்போம்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:
* கேல்
* ப்ராக்கோலி
* வெள்ளரிக்காய்
* பசலைக்கீரை
* கொலார்டு கீரை
* சோயா பீன்ஸ்
* டோஃபு
* நட்ஸ்
* விதைகள்
* பருப்பு வகைகள்
* உலர் திராட்சை

குறைவாக சாப்பிட வேண்டிய உணவுகள்:
* பால் பொருட்கள்
* முட்டை
* இறைச்சி
* தானிய வகைகள்
* பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள்
* கேன் உணவுகள்
* காப்ஃபைன்



Click it and Unblock the Notifications











