Latest Updates
-
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.!
பெண்களே! பீரியட் அப்போ 4 மணிநேரத்துக்கு ஒருமுறை பேடு மாத்துங்க.. இல்லன்னா இந்த பிரச்சனைகளை சந்திப்பீங்க..
இரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ, ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் பெண்கள் தங்களின் சானிட்டரி பேடுகளை அவசியம் மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சியை சந்திப்பார்கள். நிறைய பெண்கள் மாதவிடாய் காலத்தில் செய்யும் மிகப்பெரிய தவறு என்றால், சரியான கால இடைவெளியில் சானிட்டரி பேடுகளை மாற்றாமல் இருப்பது தான். பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் இருந்து பாக்டீரியாக்கள் இரத்தத்தின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. இந்நிலையில் மோசமான சுகாதாரத்துடன் இருந்தால், குறிப்பாக சானிட்டரி பேடுகள் அவ்வப்போது மாற்றாமல் இருந்தால், அதுவே பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் ஒருமுறை தங்கள் சானிட்டரி பேடுகளை மாற்ற வேண்டும்.

பல பெண்கள் இரத்தப்போக்கு குறைவாகவே உள்ளது என்று சானிட்டரி பேடுகளை, அது நிரம்பும் வரை வைத்திருப்பார்கள். ஆனால் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ, ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் பெண்கள் தங்களின் சானிட்டரி பேடுகளை அவசியம் மாற்ற வேண்டும். இதனால் பாக்டீரியல் தொற்றுக்களின் அபாயம் குறையும். ஒருவேளை மாற்றாமல் இருந்தால், அதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் அது நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். இப்போது 4 மணிநேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி பேடுகளை மாற்றாமல் இருந்தால், சந்திக்கும் பிரச்சனைகளைக் காண்போம்.

லுகோரியா
லுகோரியா என்பது யோனியில் இருந்து அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படும் நிலையாகும். இப்பிரச்சனையைக் கொண்ட பெண்கள் மிகவும் பலவீனமாகவும், சோர்வாகவும் உணர்வார்கள். பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி பேடுகளை சீரான இடைவெளியில் மாற்றாமல் இருந்தால், இப்பிரச்சனையை சந்திக்கலாம்.

பிறப்புறுப்பு அரிப்பு
மாதவிடாய் காலத்தில் நீண்ட நேரம் பேடுகளை மாற்றாமல் பயன்படுத்தி வந்தால், அதன் விளைவாக அதில் உள்ள பாக்டீரியாக்களால் தாங்க முடியாத அரிப்பு மற்றும் எரிச்சலை சந்திக்க நேரிடும்.

சரும தடிப்புகள்
பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதியில் கடுமையான அரிப்புக்கள் அல்லது தடிப்புகள் இருந்தால், அதற்கு முதன்மையான காரணமாக இருப்பது மாதவிடாய் காலத்தில் மோசமான சுகாதாரத்துடன் இருப்பது. அதுவும் குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சானிட்டரி பேடுகளை சரியான இடைவெளியில் மாற்றாமல் இருப்பது முக்கிய காரணமாகும்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று
ஆம், மாதவிடாய் காலத்தில் பெண்கள் சானிட்டரி பேடுகளை சரியான இடைவெளியில் மாற்றாமல் இருந்தால், அதன் விளைவாக சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சிறுநீர் பாதை நோய்த்தொற்றில், சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை போன்ற அனைத்திலும் தொற்றுகள் ஏற்பட்டிருக்கும். இத்தொற்று இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல், அடிவயிற்றில் வலி மற்றும் யோனியில் துர்நாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

தோல் உரிவது
மாதவிடாய் காலத்தில் யோனிப்பகுதி நீண்ட நேரம் ஈரப்படத்துடன் இருந்தால், அதாவது ஈரமான பேடுகளை அதிக நேரம் வைத்திருந்தால், அதன் விளைவாக சருமத்தில் எரிச்சல்/அரிப்பு ஏற்படுவதோடு, தொடர்ச்சியான உராய்வினால், பிறப்புறுப்பில் உள்ள தோல் உரிய ஆரம்பிக்கும். இதனால் சில சமயங்களில் சரும தொற்றுகளும் ஏற்படலாம்.

கடுமையான துர்நாற்றம்
நீண்ட நேரம் சானிட்டரி பேடுகளை வைத்திருந்தால், அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கும். இப்படியே தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால், பிறப்புறுப்பு பகுதியில் அதிக துர்நாற்றம் வீசும். அதுவும் ஒருவித அழுகிய நாற்றம் வீசத் தொடங்கி, மற்றவர்களுக்கும் இந்த துர்நாற்றம் வீசும் வகையில் நிலைமை மோசமாகிவிடும். எனவே சீரான இடைவெளியில் தவறாமல் சானிட்டரி பேடுகளை மாற்றுங்கள்.

நினைவில் கொள்ள வேண்டியவை
மாதவிடாய் கால சுகாதாரம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. என்ன தான் இரத்தப்போக்கு அதிகமாக அல்லது குறைவாக இருந்தாலும், சானிட்டரி பேடுகளை 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தவறாமல் மாற்ற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு பேடுகளால் அசௌகரியமான உணர்வு ஏற்பட்டால், அப்போதும் உடனே பேடுகளை மாற்றிவிட வேண்டும்.



Click it and Unblock the Notifications











