Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
காய்ச்சலுக்கு போடும் டோலோ 650-ஐ அதிகமா யூஸ் பண்ணுவீங்களா? அதோட பக்க விளைவை தெரிஞ்சுக்கோங்க...
கொரோனா காலத்தில், மக்களுள் பலர் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். அதில் காய்ச்சல், கை மற்றும் கால் வலிக்கு அதிகம் பயன்படுத்துவது டலோ 650.
காய்ச்சல் வந்தால், உடனே மருத்துவரிடம் செல்கிறோமோ இல்லையோ, மெடிக்கல் கடைக்கு சென்று ஒரு டோலே 650 வாங்கி சாப்பிடுவோம். அந்த அளவில் டோலோ 650 அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் ஒரு மருந்துப் பொருள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு கொரோனா பல உருமாற்றமடைந்தும் வருகின்றன. இந்த கொரோனா தொற்று ஏற்பட்டால், சளி, இருமல், காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாக பல நோயாளிகளும் தெரிவித்துள்ளனர்.
இன்று வரை கொரோனாவிற்கு என்று எந்த ஒரு சரியான சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படாததால், கொரோனா தொற்றால் சந்திக்கும் அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த கொரோனா காலத்தில், மக்களுள் பலர் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். அதில் காய்ச்சல், கை மற்றும் கால் வலிக்கு அதிகம் பயன்படுத்தும் ஓர் மருந்து தான் டோலோ 650 மாத்திரை. இந்த மாத்திரையை மருத்துவ ஆலோசனையின்றி ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த மருந்து பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எத்தகைய சூழ்நிலையிலும் இந்த மருந்தை மருத்துவ ஆலோசனையின்றி எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டோலோ 650 மாத்திரை
டோலோ 650 என்பது ஒரு லேசான வலி நிவாரணி மாத்திரை. இது காய்ச்சலுக்கு மட்டுமின்றி, வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டோலோ 650 பல சாதாரண உடல் உபாதைகளால் ஏற்படும் வலியைத் தணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

டோலோ 650 பயன்பாடுகள்
vடோலோ 650-ல் பாராசிட்டமால் உள்ளது. இது காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது. கொரோனாவின் முக்கிய அறிகுறிகளுள் காய்ச்சலும் ஒன்றாகும். அதோடு, இது பல் வலி, தலை வலி, முதுகு வலி, நரம்பு வலி, தசை வலி போன்றவற்றிற்கு நிவாரணமும் அளிக்கிறது. அதனால் தான் இந்த மருந்து அனைவராலும் மருத்துவரின் ஆலோசனையின்றி கடுமையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தைப் பயன்படுத்திய பிறகு, மூளைக்கு அனுப்பப்படும் PAN சிக்னல்கள் குறைந்து, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும் இந்த மருந்து நம் உடலில் வெளிப்படும் ப்ரோஸ்டாக்லாண்டின் என்ற வேதிப்பொருளையும் தடுக்கிறது. இந்த ப்ரோஸ்டாக்லாண்டின் தான் வலியை அதிகரிக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது.

யாரெல்லாம் டோலோ 650 எடுக்கக்கூடாது
* அழற்சி பிரச்சனை உள்ளவர்கள் டோலோ 650 மாத்திரையை எடுக்கக்கூடாது.
* தீவிரமான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், டோலோ 650 எடுக்கக்கூடாது.
* மேலும் மது பானங்களைக் குடித்ததும், டோலோ 650 மாத்திரையை எடுக்கக்கூடாது.

டோலோ 650-யின் பொதுவான பக்க விளைவுகள்
* குமட்டல்
* குறைந்த இரத்த அழுத்தம்
* தலைச்சுற்றல்
* உடல் பலவீனம்
* அதிகப்படியான தூக்கம்
* உடல்நலம் சரியில்லாமை
* மலச்சிக்கல்
* மயக்கம்
* வாய் வறட்சி
* சிறுநீர் பாதை தொற்று

தீவிரமான பக்க விளைவுகள்
* மெதுவான இதயத் துடிப்பு
* குரல் நாண்களில் வீக்கம்
* நுரையீரல் தொற்று
* மூச்சுத் திணறல்
* நரம்பு மண்டல பாதிப்பு
* வேகமான இதயத் துடிப்பு



Click it and Unblock the Notifications
