For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களை உண்டாக்குமாம்... ஜாக்கிரதை!

வைட்டமின் பி 12 குறைபாடு உங்கள் உடலில் பல வழிகளில் உடல், மன மற்றும் நரம்பியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

|

வைட்டமின் பி 12 குறைபாடு உங்கள் உடலில் பல வழிகளில் உடல், மன மற்றும் நரம்பியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரத்த சிவப்பணுக்கள், நரம்பு செல்கள் மற்றும் டிஎன்ஏவை உருவாக்க ஒரு அத்தியாவசிய வைட்டமினான, வைட்டமின் பி 12 பெரும்பாலும் இறைச்சி, பால் மற்றும் முட்டை போன்ற விலங்கு பொருட்களில் காணப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள் தேவையான வைட்டமின் பி12 அளவைப் பூர்த்தி செய்ய வைட்டமின் பி12 செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடலாம், ஏனெனில் உடல் இந்த முக்கியமான ஊட்டச்சத்தை சொந்தமாக உருவாக்காது. முதியவர்கள் குறிப்பாக வைட்டமின் பி 12 அளவைப் பரிசோதிக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு இந்த குறைபாடு ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

Serious Illnesses That Can Be Caused Due to Low Vitamin B12 in Tamil

பால் பொருட்களிலிருந்து விலகி, கடுமையான சைவ உணவுகளை உட்கொள்ளும் நமது சமூகத்தில் ஏற்படும் பல உணவுமுறை மாற்றங்களால் வைட்டமின் பி12 குறைபாடு இன்றைய உலகில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலை இந்திய சைவ உணவு உண்பவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது, அவர்கள் இறைச்சி/மீன்/முட்டை/பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை உட்கொள்ளாதவர்கள், இவை வைட்டமின் பி12-ன் முக்கிய ஆதாரங்களாகும். பலவீனம், மூச்சுத் திணறல், வாய் புண், தளர்வான மலம், விரல்களின் நிறமி, மறதி, சிறுநீர் எரிச்சல், அடிக்கடி மனச்சோர்வு, வேலையில் கவனம் செலுத்த முடியாமல் முடி உதிர்தல் போன்றவை இந்த வைட்டமின் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளாகும். இந்த பதிவில் எந்தெந்த ஆபத்தான நோய்கள் இதனால் உருவாகலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்கள்

இதய நோய்கள்

கரோனரி தமனி நோய் மற்றும் பெரிஃபெரல் வாஸ்குலர் நோய்கள் போன்ற பல இதய நோய்கள், வைட்டமின் பி12 அளவு குறைவாக இருக்கும் போது இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்தை உள்வாங்காதது அல்லது வைட்டமின் பி12 நிறைந்த உணவை உண்ணாதது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

நரம்பியல் பிரச்சினைகள்

நரம்பியல் பிரச்சினைகள்

பலவீனம் மற்றும் கை கால்களின் உணர்வு குறைதல், டிமென்ஷியா, சுவை குறைதல், பார்வை மற்றும் சிறுநீர் கோளாறுகள் போன்ற நரம்பியல் கோளாறுகள் காணப்படுகின்றன.

இரத்த சோகை

இரத்த சோகை

வைட்டமின் பி12 குறைபாடு இரத்த சோகைக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். மேலும் சோதனைகள் செய்யப்பட வேண்டும் மற்றும் சரியான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

 கர்ப்ப கால சிக்கல்கள்

கர்ப்ப கால சிக்கல்கள்

அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் வைட்டமின் பி 12 இன் அளவை பரிசோதிக்க வேண்டும், ஏனெனில் இந்த வைட்டமின் குறைபாடு கர்ப்பகாலத்தில் பல் சிக்கலைகளை ஏற்படுத்தும்.

இரைப்பைத் தொற்று

இரைப்பைத் தொற்று

ஹெல்மின்திக் நோய்த்தொற்றுகள் ஹைபராக்ஸியா மற்றும் வயிற்றுப்போக்கிலிருந்து அதிகரித்த இரைப்பை இயக்கம் காரணமாக வைட்டமின் பி 12 இன் உறிஞ்சுதலைக் குறைக்கலாம்.

வைட்டமின் பி12 குறைபாட்டை எவ்வாறு கண்டறிவது?

வைட்டமின் பி12 குறைபாட்டை எவ்வாறு கண்டறிவது?

வைட்டமின் குறைபாட்டிற்கு முக்கியக் காரணம், போதிய அளவு உட்கொள்ளாததை விட, பெரும்பாலானவை குடலில் மீண்டும் உறிஞ்சப்படுவதுதான். எலும்பு மஜ்ஜை பரிசோதனை, காஸ்ட்ரோ-எண்டோஸ்கோபி மற்றும் கூடுதல் இரத்த பரிசோதனைகள் போன்ற சோதனைகள் வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணத்தைக் கண்டறிய உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Serious Illnesses That Can Be Caused Due to Low Vitamin B12 in Tamil

Here is the list of serious illnesses that can be caused due to low Vitamin B12.
Desktop Bottom Promotion