Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
காதலுக்கு பெயர்போன ரோஜா...உங்கள் இதயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன தெரியுமா?
ரோஸ்ஷிப் டீ இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
ரோஜா என்றால் எல்லாருக்குன் நினைவில் வருவது காதல்தான். காதலர்கள் அனைவரும் அழகான ரோஜா பூவை கொடுத்துதான் அவர்களுடைய அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள். ரோஜா ஒரு மென்மையான மலர் மற்றும் இனிமையான சுவை கொண்டது. ரோஜா பூவை, பெண்கள் தலையில் சூடிக்கொள்ளவும், பூஜையில் சாமிக்கு மாலையாக சூடவும் பயன்படுத்துகிறோம். ரோஜா என்றால் அழகான பூ என்றுதான் பலர் நினைக்கிறார்கள். ஆனால், ரோஜாவில் உள்ள மருத்துவமும், மகத்துவமும் நம்மில் பலருக்கு தெரியாது.

பல காலங்களுக்கு முன்பே மூலிகை தேநீர் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இதில், துளசி, இஞ்சி, புதினா, இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் பல பொதுவான மூலிகை தேநீர்களும் அடங்கும். அந்த வகையில், ரோஸ்ஷிப் தேநீரும் ஒரு மூலிகை தேநீர்தான். ரோஸ்ஷிப் என்பது காட்டு ரோஜாவின் ஒருவகை ஆகும். உலர்ந்த ரோஜா மொட்டுக்கள் மற்றும் ரோஸ்ஷிப் பழங்களிலிருந்து ரோஸ்ஷிப் டீ தயாரிக்கப்படுகிறது. ரோஸ்ஷிப் தேநீர் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதய பாதுகாப்பு
ரோஸ்ஷிப் டீ இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரோஸ்ஷிப்பில் ஃபிளாவனாய்டுகள் அதிகம் உள்ளன. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 40 கிராம் ரோஸ்ஷிப் தூள் கொண்ட ஒரு பானத்தை உட்கொண்டால், இரத்த அழுத்தம் மற்றும் மோசமான கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயைத் தடுக்கிறது
ஒரு ஆய்வின்படி, ரோஸ்ஷிப் பவுடர் இன்சுலின் அளவைத் தூண்டுவதற்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் சாதகமான விளைவைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயை தடுக்கிறது. ரோஸ்ஷிப் சாற்றில் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
ரோஸ்ஷிப்பில் வைட்டமின் சி உள்ளது. இது நீரில் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்றியாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரோஸ்ஷிப் டீ அருந்துவதால், உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமும், வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது
ரோஸ்ஷிப் தேநீர் எடை குறைக்க உதவும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ரோஸ்ஷிப்பில் டிலிரோசைடு எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை கொழுப்பை கரைக்கும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. இதனால் உடல் பருமன் அபாயத்தை குறைக்கிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ரோஸ்ஷிப்பில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. இது சூரிய கதிர் பாதிப்புகளுக்கு எதிராக தோல் செல்களைப் பாதுகாக்கிறது. இதனால், ரோஸ்ஷிப் தேநீர் குடிப்பதால் உங்கள் சருமம் இறுக்கமாகவும் இளமையாகவும் இருக்க உதவும். கூடுதலாக, ரோஸ்ஷிப் தேநீரில் அஸ்டாக்சாண்டின் எனப்படும் கீட்டோ கரோட்டினாய்டு உள்ளது. இது சருமம் இளமையாக இருக்க உதவுகிறது.

வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது
ரோஸ்ஷிப் டீயில் கேலக்டோலிப்பிட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளிட்ட அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள் அதிகமாக உள்ளது. கேலக்டோலிப்பிட்கள் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன என்றும் அவை மூட்டு வலியைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரோஸ்ஷிப் டீயின் பக்க விளைவுகள்
ரோஸ்ஷிப் டீ எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், நீங்கள் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் என்ற மருந்தை உட்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் ரோஸ்ஷிப் டீயைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ரோஸ்ஷிப்கள் ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டிருக்கின்றன. இது உடலில் லித்தியத்தின் செறிவை அதிகரிக்கக்கூடும். இதனால் உடலில் பல கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ரோஸ்ஷிப் டீ செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
4 தேக்கரண்டி உலர்ந்த அல்லது நொறுக்கப்பட்ட ரோஸ்ஷிப்
4 கப் தண்ணீர்
4-5 புதினா இலைகள்
1 தேக்கரண்டி தேன்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, உலர்ந்த அல்லது நொறுக்கப்பட்ட ரோஸ்ஷிப்பை சேர்க்கவும். மெதுவாக அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதை வடிகட்ட வேண்டும். அதில் தேனை கலந்து, புதினா இலைகளை மேலே தூவலாம். இப்போது சுவையான ஆரோக்கியமான ரோஸ்ஷிப் டீ ரெடி.



Click it and Unblock the Notifications