Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
உடற்பயிற்சி செய்யும் போது ஏன் கொட்டாவி வருகிறது தெரியுமா?
ஒருவர் மிகவும் களைப்பாக இருக்கும் போது கொட்டாவி வருகிறது என்றால் அது இயற்கையானதே. ஆனால் கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, கொட்டாவி வந்தால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது?
ஒருவர் மிகவும் களைப்பாக இருக்கும் போது கொட்டாவி வருகிறது என்றால் அது இயற்கையானதே. அதுப்போல் மதிய வேளையில் ஏற்படும் தூக்கக் கலக்கத்தில் கொட்டாவி வருகிறது என்றாலும் அதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் முழு உடலையும் ஈடுபடுத்தி, கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, கொட்டாவி வந்தால் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? அவ்வாறு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஏன் கொட்டாவி வருகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

களைப்பு அல்லது மயக்கம்
ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, அவருக்கு கொட்டாவி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் களைப்பு ஆகும். நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்காக விடியற்காலையிலேயே எழ வேண்டும் அல்லது மாலை வேலையில் அதற்காக நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அவ்வாறு தவறாமல் அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் போது உடலும், மனமும் களைத்துவிடுகிறது.

அதீத பரபரப்பு அல்லது அழுத்தம்
நம்மிடம் இருக்கும் அழுத்தம் அல்லது பரபரப்பு ஆகியவற்றுக்கும் கொட்டாவிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. குறிப்பாக ஒருவருக்கு உடற்பயிற்சி சம்பந்தமான போட்டிகள் நெருங்குகிறது என்றால், அவரை பரபரப்பும், மன அழுத்தமும் தொற்றிக் கொள்கிறது. அது இயற்கையானதும் கூட. இந்த பரபரப்பு அல்லது மன அழுத்தத்தில், அவர் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது இயல்பாகவே கொட்டாவி வருகிறது.
அதே நேரத்தில், மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதற்கு கொட்டாவி உதவி செய்வதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நமது கவனத்தை ஒருமுகப் படுத்துவதற்கும் கொட்டாவி உதவி செய்வதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடினமான உடற்பயிற்சிகள்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உடலை தயார்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுவர். அவ்வாறு ஈடுபடும் போது அவர்களுடைய மொத்த உடலும், தசைநார்களும் இயக்கத்தில் இருக்கும். அது அவர்களுடைய உடலின் வெப்பநிலையை பல மடங்கு அதிகரிக்கும். பின் உடற்பயிற்சியை முடித்து அவர்கள் ஓய்வெடுக்கும் போது தானாகவே கொட்டாவி வந்துவிடும்.

ஆர்வம் இல்லாமல் செய்யும் உடற்பயிற்சிகள்
திரும்ப திரும்ப ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளைத் தினந்தோறும் செய்து வரும் போது அவற்றில் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. மேலும் ஆர்வம் குறைந்துவிடுகிறது. அவ்வாறு ஆர்வம் இல்லாமலும், சலிப்புத் தன்மையுடனும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொட்டாவி வருகிறது. எனவே புதிய புதிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அப்போது சலிப்பு ஏற்படாமல் உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.

உடல் வெப்பநிலை அதிகரிப்பு
உடற்பயிற்சியின் போது கொட்டாவி வருவதற்கு மேலும் ஒரு காரணம் உடலின் வெப்பம் அதிகரிப்பதாகும். அதாவது உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உடலின் வெப்பம் அதிகரித்துவிடுகிறது. அது கொட்டாவி வருவதற்கு ஏதுவாகிறது. எனவே குளிர்ந்த காற்றை சுவாசிக்க வேண்டும். அப்போது உடலின் வெப்பமும், மூளையின் வெப்பமும் குறையும். அதன் மூலம் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கலாம்.

கொட்டாவியை எவ்வாறு தடுக்கலாம்?
உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொட்டாவி வந்தால், அதனால் எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை. மாறாக அது உடலை குளிர்வித்து, கவனத்தைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்துகிறது. மேலும் கொட்டாவி வருவதைத் தடுக்க முடியாது. எனவே உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் ஓய்வாகவோ அல்லது களைப்பில்லாமலோ இருக்க வேண்டும். அதோடு உடல் பலவீனமாகவோ அல்லது உடலில் காயமோ இருந்தால், உடற்பயிற்சிக்கு விடுமுறை கொடுக்க வேண்டும். அதன் மூலம் கொட்டாவியைத் தவிர்க்கலாம்.



Click it and Unblock the Notifications