Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்க கை விரலில் இப்படி தோல் உரியுதா? அப்ப உடம்புல இந்த சத்து கம்மியா இருக்க வாய்ப்பிருக்கு..
பலரும் தங்கள் கை விரல் நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரிவதைக் காணலாம். இப்படி உரியும் தோலானது சில சமயங்களில் கடுமையான வலியை ஏற்படுத்தும். அதோடு எதையும் சாப்பிட முடியாத அளவில் எரிச்சலையும் உண்டாக்கும்.
பலரும் தங்கள் கை விரல் நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரிவதைக் காணலாம். இப்படி உரியும் தோலானது சில சமயங்களில் கடுமையான வலியை ஏற்படுத்தும். அதோடு எதையும் சாப்பிட முடியாத அளவில் எரிச்சலையும் உண்டாக்கும். சரி, எந்த காரணத்தினால் இப்படி தோல் உரிகிறது என்று தெரியுமா?

பெரும்பாலும் விரல் நகங்களைச் சுற்றி உரியும் தோலானது, நமது ஒருசில பழக்கங்கள் அல்லது கெமிக்கல் கொண்ட பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படலாம். இந்த காரணங்களால் ஏற்பட்டால், அது ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் சரியாகாமல் நீண்ட நாட்களாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் அது உடலில் உள்ள சத்து குறைபாட்டினால் இருக்கலாம். இப்போது எந்த காரணங்களுக்கு எல்லாம் கை விரல் நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரியும் என்பதைக் காண்போம்.

நகம் கடிப்பது
நகங்களைக் கடிக்கும் போது க்யூட்டிகிள்கள் மற்றும் நகங்கள் சேதமடையும். சேதமடைந்த க்யூட்டிகல்கள் சரும தொற்றுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாகவே நகங்களைக் கடிப்பவரின் விரல் நகங்களைச் சுற்றியுள்ள தோல் அடிக்கடி உரிந்து, வலியை ஏற்படுத்துகிறது. எனவே நகம் கடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள், தானாக இது சரியாகிவிடும்.

கெமிக்கல் நிறைந்த பொருட்கள்
சோப்பு, ஷாம்பு மற்றும் பிற அழகு சாதன பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் கூட சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம் மற்றும் விரல் நங்களைச் சுற்றியுள்ள தோல் உரியவும் காரணமாக இருக்கலாம். ஏனெனில் அழகு கலை நிபுணர்களும் இந்த காரணங்களுக்காக இப்பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு
வைட்டமின் அல்லது கால்சியம் குறைபாடு உடலில் இருந்தாலும், நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரியும். ஏனெனில் இந்த சத்துக்களின் குறைபாடு வறட்சியை அதிகம் ஏற்படுத்தும். இதன் விளைவாக தோல் உரிய வாய்ப்புள்ளது. குறிப்பாக உடலில் அதிகளவில் வைட்டமின் ஏ இருந்தாலும் அல்லது நியாசின் குறைபாடு இருந்தாலும், நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரிய வாய்ப்புள்ளது.

அதிகமாக கை கழுவுவது
சோப்பு பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யும் போது, சருமத்தில் உள்ள பாதுகாப்பு படலமாக இருக்கும் எண்ணெய்பசை நீக்கப்படுவதோடு, சோப்பானது சருமத்தின் உணர்திறன் அடுக்குகளில் சோப்பை உறிஞ்சி, எரிச்சல் மற்றும் தோல் உரிய வழிவகுக்கும்.

காலநிலை
பொதுவாக சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக வறண்ட காலநிலை, குளிர்காலம் மற்றும் குளிர்ச்சியான காலநிலை போன்றவையும் விரல் நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரிய காரணங்களாக இருக்கலாம்.

அலர்ஜி
அலர்ஜிகளும் ஒருவரது விரல் நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரிவதற்கு காரணமாக இருக்கலாம். அதுவும் அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்களை தொடர்ந்து தொடும் போது, அது எதிர்வினையை ஏற்படுத்தி தோல் உரிவதற்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க சிறந்த வழி, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை தொடாமல் இருப்பது தான்.



Click it and Unblock the Notifications