இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது ஹூக்கா பழக்கம் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

கொரோனா வைரஸ் பல நாடுகளில் புகுந்து பல உயிர்களை பறித்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் இருந்து வந்தாலும், அந்நாட்டை விட அங்கிருந்து பரவிய மற்ற நாடுகளில் தான், குறிப்பாக இத்தாலியில் தான் கொத்து கொத்தாக உயிர்களைப் பறிக்கிறது கொரோனா வைரஸ். அப்படிப்பட்ட கொடூர வைரஸிற்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்களை மிகவும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Quit Smoking To Keep Coronavirus Risk At Bay

அதோடு கொரோனா வைரஸ் ஒருவரின் தும்மல் மற்றும் இருமலின் மூலம் பரவுவதால், மக்கள் கூட்டமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவின் வழக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசாங்கம் ஊடரங்கு பிறப்பித்துள்ளது. நம் பாதுகாப்பிற்காக அரசாங்கம் இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது என்பதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் நடந்து கொண்டால், கொரோனா வைரஸை நம் நாட்டில் இருந்தே அப்புறப்படுத்திவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நுரையீரல் நோய்

நுரையீரல் நோய்

கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கும் ஒரு கொடிய வைரஸ். இந்த வைரஸ் தாக்கினால் ஒருவரது சுவாச மண்டலம் தான் கடுமையாக பாதிக்கப்படும். இந்த வைரஸ் தாக்கத்தின் ஆரம்ப காலத்தில் காய்ச்சல், இருமல், சளி இருந்தாலும், இது முற்றிய நிலையில் சுவாசிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி, நுரையீரலை மோசமாக பாதித்து, பின் மரணத்தை உண்டாக்கும்.

எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது ஹூக்கா பழக்கம் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் பொதுவாக புகைப்பிடிப்பதால், அதில் உள்ள உட்பொருட்கள் நுரையீரலை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் கொரோனா வைரஸ் இத்தகையவர்களை தாக்கினால், அது கடுமையான சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்புக்களை அதிகரிக்கும். எனவே இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால், இன்றே அதை கைவிடுங்கள்.

புகைப்பிடிப்பவர்களை எவ்வாறு தாக்கும்?

புகைப்பிடிப்பவர்களை எவ்வாறு தாக்கும்?

புகைப்பிடிப்பவர்கள் கொரோனா வைரஸிற்கு அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடும். ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, விரல்கள் அசுத்தமான சிகரெட்டுகளைப் பிடித்து உதடுகளுடன் தொடர்பு கொண்டிருப்பதால், கொடிய வைரஸை கையில் இருந்து வாய்க்கு பரப்புவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

நுரையீரல் நோய் அல்லது மோசமான நுரையீரல் ஆரோக்கியம்

நுரையீரல் நோய் அல்லது மோசமான நுரையீரல் ஆரோக்கியம்

புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்பனவே நுரையீரல் நோய் அல்லது நுரையீரல் ஆரோக்கியம் மோசமானதாக இருக்கலாம் என்பதால், கொரோனா வைரஸ் தாக்கினால் அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

சிகரெட் அல்லது புகைப்பிடிப்பது ஒரு கெட்ட பழக்கம் என்பதால், இதைக் கைவிட யோசிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை நினைவில் கொண்டாவது, இந்த கெட்ட பழக்கத்தை உடனே கைவிட முயற்சி செய்யுங்கள்.

ஆதாரம் இல்லை

ஆதாரம் இல்லை

இருப்பினும், புகைப்பிடிப்பவர்கள் நிச்சயமாக சுவாசக்குழாய் தொற்றுநோய்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவர். ஆனால் கொரோனா வைரஸிற்கு புகைப்பிடிப்பவர்கள் தான் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனினும், இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு நிச்சயம் நுரையீரல் செயல்பாடு மோசமாக இருக்கும் என்பதால், இவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றின் அபாயமும் இருக்கலாம்.

எனவே தற்போது நாம் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் உள்ளோம். இதைப் பயன்படுத்தி, புகைப்பிடிக்கும் கெட்ட பழக்கத்தைக் கைவிட முயற்சித்து, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யுங்கள்.

இப்போது புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட உதவும் உணவுகள் மற்றும் பானங்களைக் காண்போம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

சிகரெட் முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், வைட்டமின் சி மற்றும் டி போன்றவற்றை உறிஞ்சுவதில் தடையை உண்டாக்கும். உதாரணமாக, ஒரு சிகரெட் பிடித்தால், உடலில் இருந்து 25 மிகி வைட்டமின் சி-யை இழக்கக்கூடும். ஒருவர் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட ஆரம்பித்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டால், அது சிகரெட்டின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்க உதவும் என சில ஆய்வுகளும் பரிந்துரைக்கின்றன. எனவே நல்ல சுவையான பழங்களை வாங்கி, அவ்வப்போது சாப்பிடுங்கள்.

ஜின்செங் டீ

ஜின்செங் டீ

சில ஆராய்ச்சி ஜின்செங் நிக்கோட்டின் போதைக்கு சிகிச்சையளிக்கும் என்று கூறுகிறது. ஏனெனில் இது மூளையில் உள்ள நரம்பியக்கடத்தியான டோபமைனின் விளைவை பலவீனப்படுத்தக்கூடும். இந்த டோபமைன் இன்பத்துடன் தொடர்புடையது மற்றும் புகையிலை புகைக்கும் போது வெளியிடப்படுகிறது. ஜின்செங் டீ குடிப்பதால் புகைப்பழக்கத்தின் ஈர்ப்பைக் குறைத்து, அதன் சுவாரஸ்யத்தையும் குறைக்கலாம்.

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள்

புகைபிடிப்பவர்கள் பால் குடிப்பதால் சிகரெட்டுகளின் சுவை மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பெரும்பாலான புகைப்பிடிப்பவர்கள் இது தங்கள் சிகரெட்டுகளுக்கு கசப்பான சுவை கொடுப்பதாகவும் கூறுகின்றனர். ஆகவே நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட நினைத்தால், புகைப்பிடிக்க வேண்டுமென்ற ஆவல் எழும் போது, பால் மற்றும் பிற பால் பொருட்களை உட்கொள்ளுங்கள். இதனால் இந்த மோசமான பழக்கத்தை கைவிடலாம் அல்லவா?

சுகர்-ப்ரீ சூயிங் கம் மற்றும் புதினா

சுகர்-ப்ரீ சூயிங் கம் மற்றும் புதினா

சூயிங் கம் மற்றும் புதினா வாயை மிகவும் பிஸியாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே நீங்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட நினைத்தால், இவற்றை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். சிகரெட் பிடிக்க வேண்டுமென்று தோன்றும் போது, இவற்றை வாயில் போட்டு மெல்லுங்கள்.

தவிர்க்க வேண்டியவைகள்

தவிர்க்க வேண்டியவைகள்

சிகரெட் அல்லது புகைப்பழக்கத்தைக் கைவிட முயற்சிக்கும் போது ஒருசில உணவுகள் மற்றும் பானங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில சிகரெட் பிடிக்க வேண்டுமென்ற ஆவலை அதிகரிக்கும். அதில் சிகரெட் ஆவலைத் தூண்டுபவைகளாவன ஆல்கஹால், காப்ஃபைன், இறைச்சி, சர்க்கரை உணவுகள் அல்லது மிகவும் காரமான உணவுகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion