For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பானை போன்ற வயிறை வேகமாக குறைக்க உதவும் விஞ்ஞானரீதியாக நிருபிக்கப்பட்ட வழிகள் என்னென்ன தெரியுமா?

பானை போன்று வீங்கிய வயிறு, வாயுத்தொல்லை மற்றும் வலி என நாம் அனைவரும் வயிறு வீக்கத்தின் இந்த பொதுவான அறிகுறிகளை நன்கு அறிவோம்.

|

பானை போன்று வீங்கிய வயிறு, வாயுத்தொல்லை மற்றும் வலி என நாம் அனைவரும் வயிறு வீக்கத்தின் இந்த பொதுவான அறிகுறிகளை நன்கு அறிவோம். இந்த பொதுவான செரிமான சிக்கல்களை அவ்வப்போது நாம் அனுபவிக்கிறோம், இது நமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக்குகிறது.

Proven Ways To Reduce Bloating

இது நாம் வெளியே செல்லும் போது பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது, மேலும் இறுக்கமான உடைகள் அணியும்போது நமது தோற்றத்தை மோசமானதாக மாற்றுகிறது. இந்த நிலை கடினமானதாக இருந்தாலும், இது தற்காலிகமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வீக்கத்தை விரைவில் குறைக்க உதவும் விஞ்ஞானரீதியாக நிருபிக்கப்பட்ட சில வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

அதிகமான உணவை உட்கொண்ட பிறகு வீங்கியிருப்பது பொதுவானது, குறிப்பாக நீங்கள் அவசரமாக சாப்பிடும்போது. நீங்கள் வேகமாக சாப்பிடும்போது, நீங்கள் எவ்வளவு உணவை உட்கொண்டீர்கள் என்பதை நீங்கள் உணரமாட்டிர்கள், மேலும் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவீர்கள். இதன் விளைவாக, நீங்கள் வீங்கியதாகவும் பின்னர் மூச்சு விட கடினமாகவும் உணர்கிறீர்கள். உங்கள் தட்டை உணவைக் கொண்டு நிரப்ப வேண்டாம், கவனமாக சாப்பிடுவதைப் பயிற்சி செய்யுங்கள்.

உணவு ஒவ்வாமை மற்றும் சகிப்புத்தன்மையை கவனியுங்கள்

உணவு ஒவ்வாமை மற்றும் சகிப்புத்தன்மையை கவனியுங்கள்

உணவு ஒவ்வாமை மற்றும் சகிப்பின்மை ஆகியவை அசௌகரியத்தை ஏற்படுத்தி உங்களுக்கு வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்ட பிறகு வீக்கத்தை உணர்ந்தால், அது உணவு சகிப்பின்மை அல்லது ஒவ்வாமையின் அறிகுறியாக இருக்கலாம். லாக்டோஸ், பிரக்டோஸ், முட்டை மற்றும் பசையம் ஆகியவை சகிப்புத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய சில பொதுவான பொருட்கள். வயிற்று வலிக்கு வழிவகுக்கும் இந்த உணவுப் பொருட்களை ஜீரணிக்க சிலர் சிரமப்படுகிறார்கள்.

காற்று மற்றும் வாயுவை விழுங்குவது

காற்று மற்றும் வாயுவை விழுங்குவது

உண்மைதான், கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிப்பது அல்லது சூயிங்கம் மெல்லுவது மற்றும் ஸ்ட்ரா உபயோகப்படுத்தி பானங்களை குடிக்கும் போது நாம் நிறைய காற்று மற்றும் வாயுக்களை விழுங்குகிறோம். நீங்கள் கம் மெல்லும்போது அல்லது ஸ்ட்ரா வழியாக குடிக்கும்போது, நீங்கள் நிறைய காற்றை விழுங்குகிறீர்கள், இது அடிவயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

MOST READ: கொரோனாவை ஒழிக்க விரைவில் வரவிருக்கும் நாசி தடுப்பூசி... இதன் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

நார்சத்து உணவுகள்

நார்சத்து உணவுகள்

நீங்கள் அடிக்கடி வீக்கத்தின் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், அதிக அளவு நார்ச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது கவனமாக இருங்கள். அதிக அளவு நார்ச்சத்து கொண்ட சில உணவுகள் அதிக அளவு வாயுவை உற்பத்தி செய்யலாம். பீன்ஸ் மற்றும் பயறு போன்ற பருப்பு வகைகள் இதில் முக்கியமானவை. கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் ஏற்கனவே வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சரியான இடைவெளியில் சாப்பிடவும்

சரியான இடைவெளியில் சாப்பிடவும்

உணவு நேரத்திற்கு இடையில் பெரிய இடைவெளிகள் குடல் பாக்டீரியாவால் வாயு உருவாக வழிவகுக்கும். உங்கள் செரிமான அமைப்பை சீராக வைத்திருப்பதற்கு நாள் முழுவதும் சிறிய உணவை உட்கொள்ளுங்கள். உங்கள் உணவுக்கு இடையில் சிலநட்ஸ்கள் அல்லது பழங்கள் கூட வீக்கம் மற்றும் வயிற்றின் வீக்கத்தைத் தடுக்க உதவும்.

புரோபயாடிக்குகள் உதவலாம்

புரோபயாடிக்குகள் உதவலாம்

மோசமான குடல் ஆரோக்கியம் வீக்கத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எனவே உங்கள் உணவில் புரோபயாடிக்குகள் உணவுகளை சேர்ப்பதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை பராமரியுங்கள். தயிர், கேஃபிர் மற்றும் ஊறுகாய் போன்ற புரோபயாடிக்குகள் நல்ல குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செரிமான செயல்முறையை விரைவுபடுத்தவும் உதவுகின்றன. புரோபயாடிக்குகள் செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களில் வாயு உற்பத்தியையும் வீக்கத்தையும் குறைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

MOST READ: இந்த 6 ராசிக்காரங்க எளிதில் ஏமாறக்கூடிய ஏமாளிகளாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?

சோடியம் அளவை குறைக்கவும்

சோடியம் அளவை குறைக்கவும்

உப்பு அதிகமுள்ள தின்பண்டங்கள் அல்லது அதிக அளவு சோடியம் கொண்ட உணவுகள் உங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். சோடியம் உடலில் நீர் தக்கவைக்க வழிவகுக்கிறது, இது உங்கள் வயிறு வீங்கியதாக உங்களை உணரவைக்கும். உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க முயற்சிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Proven Ways To Reduce Bloating

Here are some scientifically proven ways to reduce bloating quickly.
Desktop Bottom Promotion