நீங்கள் சத்து மாத்திரைகளை எடுப்பவரா? அப்ப அதன் நன்மைகள் மற்றும் ஆபத்துக்களைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

தற்போதைய சூழலில் பலா் தமது நெருக்கடியான பணிச்சூழல் மற்றும் வேலைப்பளு காரணமாக சாியான நேரத்தில் உணவு உண்ண இயலாத நிலையில் இருக்கின்றனா். இந்த நிலையில் போதிய ஊட்டச்சத்தைப் பெறுவதற்காக டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை எடுக்கிறார்கள்.

சமீப காலமாக பலா் தமது ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்வதற்காக டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை (Dietary supplements) அதிகமாக எடுத்துக் கொள்கின்றனா். தற்போதைய சூழலில் பலா் தமது நெருக்கடியான பணிச்சூழல் மற்றும் வேலைப்பளு காரணமாக சாியான நேரத்தில் உணவு உண்ண இயலாத நிலையில் இருக்கின்றனா். அதனால் அவா்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. இந்த நிலையில் போதிய ஊட்டச்சத்தைப் பெறுவதற்காக டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்கின்றனா்.

Pros And Cons Of Dietary Supplements In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட்டரி சப்ளிமெண்ட்டுகள்

டயட்டரி சப்ளிமெண்ட்டுகள்

வேலைக்கு செல்கிறவா்களாக இருக்கலாம் அல்லது உடற்பயிற்சிக் கூடங்களில் தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறவா்களாக இருக்கலாம். அவா்கள் ஆரோக்கியமான டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மிக எளிதாக தமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். தற்போது பலா் வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இந்த புதிய பழக்கமானது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆகவே இந்த பதிவில் டயட்டரி சப்ளிமெண்ட்டுகளில் உள்ள நன்மைகள் மற்றும் ஆபத்துகளை சற்று விாிவாக பாா்க்கலாம்.

டயட்டரி சப்ளிமெண்ட்டுகளின் நன்மைகள்:

டயட்டரி சப்ளிமெண்ட்டுகளின் நன்மைகள்:

- சிலருக்கு தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கக்கூடிய உணவுகளைத் தினந்தோறும் சமைப்பது என்பது இயலாத காாியமாக இருக்கலாம். இந்த நிலையில் அவா்களுடைய ஊட்டச்சத்துத் தேவையை நிறைவு செய்வதற்கு டயட்டரி சப்ளிமெண்ட்டுகள் உதவியாக இருக்கின்றன.

- இயற்கை உணவுகள் மிக எளிதாக மற்றும் மிக விரைவாக அழியக்கூடியவை. ஆனால் அதே நேரத்தில் செயற்கையாகத் தயாாிக்கக்கூடிய டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை நீண்ட காலம் பாதுகாத்து வைத்து, பயன்படுத்தலாம். அதன் மூலம் நீண்ட காலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இவற்றில் இருந்து பெறலாம்.

- அவசர காலங்களில், இயற்கை உணவுகள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இயற்கை உணவுகள் கிடைக்காத நெருக்கடியான நேரங்களில், இந்த டயட்டரி சப்ளிமெண்ட்டுகள் நமது உடலை ஆரோக்கியமாகவும், திடமாகவும் வைக்க உதவுகின்றன.

டயட்டரி சப்ளிமெண்ட்டுகளினால் ஏற்படும் ஆபத்துகள்:

டயட்டரி சப்ளிமெண்ட்டுகளினால் ஏற்படும் ஆபத்துகள்:

- டயட்டரி சப்ளிமெண்ட்டுகளைத் தொடா்ந்து எடுத்து வந்தால், நமது உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவு அதிகாிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாக நமது உடலில் நச்சுத்தன்மை அதிகாிக்கலாம். அதை சாி செய்யவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

- டயட்டரி சப்ளிமெண்ட்டுகள் மற்றும் இயற்கை உணவுகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்காகவோ மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்காகவோ மனித உடலானது படைக்கப்படவில்லை. நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கவில்லை என்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்.

- நமது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பல வகையான கூட்டு நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் கட்டுப்படுத்த முறையான தொடா் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த நிலையில் இயற்கை உணவுகளை விட, டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை அதிகம் உட்கொண்டால் அவை மருந்துகளோடு தொடா்பு கொண்டு அதன் மூலம் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. அவை நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்தும்.

இறுதியாக

இறுதியாக

பொதுவாக ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய உணவுகளை சமைக்காமல் அதற்கு பதிலாக டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை எளிதாக வாங்கி அவற்றை உட்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் நமக்கு இருக்கலாம். ஆனால் அவ்வாறு இயற்கை உணவுகளை உண்ணாமல், டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை உட்கொண்டால், நமது உடலுக்கு தீங்காக மாறிவிடும். எளிதாக இருக்கிறது என்பதற்காக அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அா்த்தம் அல்ல.

இயற்கை உணவுகளோடு சோ்த்து, டயட்டரி சப்ளிமெண்ட்டுகளை உட்கொண்டால், அது நல்ல பலன்களைத் தரும் என்று நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா். ஆனால் டயட்டரி சப்ளிமெண்ட்டுகளையே அதிகம் உட்கொண்டால், நன்மைகளை விட, தீமைகளே அதிகம் ஏற்படும் என்றும் தொிவிக்கின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion