Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சிறுநீரகம் பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
சிறுநீரக நோயின் அறிகுறிகளானது பெரும்பாலும் தினமும் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்றே இருக்கும். எனவே தான் சிறுநீரக நோயானது 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கப்படுகிறது.
மனித உடலில் சிறுநீரகங்கள் அவரை விதை வடிவில் வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றன. இந்த சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்களை பிரித்து, நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்றும் முக்கிய பணியை செய்கின்றன. சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வதால் சிறுநீரகங்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பல்வேறு வகையான சிறுநீரக நோய்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுள் பெரும்பாலானோருக்கு சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரிவதில்லை. ஏனெனில் சிறுநீரக நோயின் அறிகுறிகளானது பெரும்பாலும் தினமும் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்றே இருக்கும். எனவே தான் சிறுநீரக நோயானது 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலானோருக்கு சிறுநீரக நோய் தீவிரமாகும் வரை தங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பது தெரியாது. எனவே நீங்கள் உங்களுக்கு சிறுநீரக நோய் உள்ளதா என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ள விரும்பினால், முதலில் அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும். கீழே சிறுநீரக நோயின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

மிகுதியான உடல் சோர்வு
சிறுநீரகங்களின் செயல்பாடு குறையும் போது, இரத்தத்தில் நச்சக்கள் மற்றும் கழிவுகளின் தேக்கத்திற்கு வழிவகுக்கும். இதன் காரணமாக ஒருவர் கடுமையான உடல் சோர்வு, பலவீனம் மற்றும் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட நேரிடும். சிறுநீரக நோயின் மற்றொரு இரத்த சோகை. இதுவும் உடல் பலவீனம் மற்றும் சோர்வை உண்டாக்கும்.

தூங்குவதில் சிரமம்
சிறுநீரகங்களால் வடிகட்டும் பணியை சரியாக செய்ய முடியாத போது, இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்க ஆரம்பித்துவிடும். இதன் விளைவாக தூங்குவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் சமீப காலமாக தூங்குவதில் சிரமத்தை எதிர்கொண்டால், உங்கள் சிறுநீரகங்களில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது
நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? குறிப்பாக இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீர் கழிக்கிறீர்களா? அப்படியானால் அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகங்களால் சரியாக இரத்தத்தை வடிகட்ட முடியாமல் போகும் போது, அதிகமாக சிறுநீர் கழிக்கத் தூண்டும். எனவே கவனமாக இருங்கள்.

சிறுநீரில் இரத்தம்
ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்த செல்களில் உள்ள கழிவுகளைப் பிரித்து சிறுநீரை உருவாக்குகின்றன. ஆனால் சிறுநீரகங்களின் வடிகட்டும் பணியில் பிரச்சனை இருந்தால், அந்த இரத்த செல்கள் சிறுநீருடன் சேர்த்து கசிய ஆரம்பிக்கும். ஆகவே சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.

கண் வீக்கம்
சிறுநீரகங்கள் சேதமடைந்திருந்தால், சிறுநீரில் உள்ள புரோட்டீன் கசிய ஆரம்பித்து, கண்களைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் சமீப காலமாக உங்கள் கண்களில் வீக்கத்தைக் கண்டால், உங்கள் சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம்
சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும் போது, அது உடலில் சோடியத்தை தக்க வைத்து, பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். கால்களில் ஏற்படும் வீக்கம் இதய நோய், கல்லீரல் நோய் மற்றும் நாள்பட்ட கால் நரம்பு பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே உஷாராக இருங்கள்.

சரும வறட்சி மற்றும் அரிப்பு
ஆரோக்கியமான சிறுநீரகங்கள் பல முக்கியமான பணிகளை செய்கின்றன. அதில் அவை இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீரை உடலில் இருந்து வெளியேற்றுவதோடு, இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு உதவுகிறது மற்றும் இரத்தத்தில் சரியான அளவில் கனிமச்சத்துக்களை பராமரிக்க உதவுகிறது. ஆனால் சருமத்தில் திடீரென்று அதிகப்படியான அரிப்பு மற்றும் வறட்சியை உணர்ந்தால், அது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

பசியின்மை
உங்களுக்கு பசிக்கவே மாட்டீங்குதா? அப்படியானால் உங்கள் சிறுநீரகங்களின் செயல்பாடு குறைந்திருக்க வாய்ப்புள்ளது. சிறுநீரகங்களின் செயல்பாடு குறையும் போது, அது உங்கள் உடலில் நச்சுக்களை அதிகரித்து, அதன் விளைவாக பசி ஏற்படும் உணர்வை குறைக்கிறது. சிறுநீரக நோய் உள்ள பெரும்பாலானோர் இம்மாதிரியான பிரச்சனையை சந்திப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications