Just In
- 2 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்த்திட வேண்டாம்...
- 21 hrs ago
பாதாம் சிக்கன்
- 1 day ago
வார ராசிபலன் (14.08.2022-20.08.2022) - இந்த வாரம் இந்த ராசிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்..
- 1 day ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்...
Don't Miss
- News
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம்- இன்று டெல்லியில் தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர்
- Finance
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா எனது பள்ளி தோழர்... பிரபல வங்கியின் நிர்வாகி அதிகாரி டுவிட்!
- Sports
ஒரே சூரியன்.. ஒரே பாட்ஷா.. ஒரே டிராவிட்..! நியூசி வீரர் ராஸ் டைலர் சொன்ன மாஸ் தகவல்
- Movies
வைன் பிளஸ் டின்னர்.. வின்னராம்.. இன்னும் அந்த பிரசாந்த் படத்தை மறக்காம இருக்காரே கிரண்!
- Technology
WhatsApp வழியாக தேசப்பற்று: நெகிழ வைக்கும் 2022 சுதந்திர தின வாழ்த்துக்கள்!
- Automobiles
விலை தான் அதிகம் மத்தபடி எல்லாம் சூப்பர்... ஹோண்டா CB300F பைக் - ரிவியூ
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஒளிந்திருக்கும் விபரீதம் என்ன தெரியுமா?
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்பாதவர்கள் அதற்கு முயற்சி எடுக்காதவர்கள் என்று இந்த உலகத்தில் யாருமேயில்லை. யாருக்குதான் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்காது. ஆரோக்கிய வாழ்வு என்றால் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது ஆரோக்கிய உணவுகள்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் விரும்பி சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகளே நமக்கு ஆபத்தாய் முடிய வாய்ப்புள்ளது.
நாம் சாப்பிடும் பல ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஆரோக்கியம் என நினைத்து நாம் சாப்பிடும் உணவுகளுக்கு பின்னாலும் மோசமான உணவு அரசியலும், நமது மடைமையும் உள்ளது. எப்போது விளம்பரங்களை பார்த்து சாப்பிடுவதை நாம் நிறுத்துகிறோமோ அப்போதுதான் நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை தொடர முடியும். இந்த பதிவில் நாம் விரும்பி சாப்பிடும் சில உணவுகளுக்கு பின்னால் இருக்கும் விபரீதங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆப்பிள்
ஆப்பிள் ஒரு உலகளாவிய ஆரோக்கியமான பொருள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆப்பிள் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் மிகவும் ஆபத்தானவை. ஆப்பிளின் தோல் மீது இருக்கும் பூச்சிக்கொல்லிகள் அதற்கு கீழ்புறம் இருக்கும் சதையால் ஈர்க்கப்படுகிறது. இதனை நாம் சாப்பிடும் போது அது பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் இல்லை என்பது உறுதி செய்தால் மட்டும் ஆப்பிளின் தோலை சாப்பிடவும். இதுமட்டுமின்றி ஆப்பிள் பளபளப்பாக இருக்க பல வேதியியல் பொருட்கள் வேறு சேர்க்கப்படுகிறது.

குடைமிளகாய்
பெரும்பாலான பூச்சிகளுக்கு குடைமிளகாய் பிடித்த காயாக இருக்கிறது. இயற்கையாக விளைவிக்கப்பட்ட குடைமிளகாயை நீங்கள் வாங்கவில்லை என்றால் நீங்கள் ஆபத்தான அனைத்து பூச்சிக்கொல்லிகளையும் சாப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கிட்னி பீன்ஸ்
கிட்னி பீன்ஸில் பல ஆபத்தான நச்சுப்பொருட்கள் உள்ளது. இது உங்களுக்கு பல நோய்களை உண்டாக்கும் மேலும் சிலசமயங்களில் உயிரைக் கூட கொல்லும். இந்த பீன்ஸை சமைக்கும் முன் 10 நிமிடம் கண்டிப்பாக வேகவைக்க வேண்டும். ஒருபோதும் இதனை வேகவைக்காமல் உணவுகளில் சேர்க்காதீர்கள், ஏனெனில் இது ஆபத்தை இருமடங்காக்கும்.

திராட்சை
திராட்சை என்பது மிகவும் ஆரோக்கியமான ஒரு பழமாகும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் திராட்சையின் வேகமான வளர்ச்சிக்கு குளோரோபிரிப்ஸ் என்னும் பூச்சிக்கொல்லி அதிகளவில் தெளிக்கப்படுகிறது. இது கடுமையான மூளைச்சிதைவை ஏற்படுத்தும்.

தக்காளி
தக்காளி செடிகளின் இலைகள் மற்றும் கொடிகளில் தலைச்சுற்றல், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் அட்ரோபின் போன்ற ஆல்கலாய்டு விஷங்கள் உள்ளன. பச்சைத் தக்காளி மிகவும் ஆபத்தான ஒரு பொருளாகும், இது மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம். அதிகளவு டோமடைன் உடலுக்கு பல ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தும். தக்காளியின் இலைகளை எதற்காகவும் பயன்படுத்தாதீர்கள்.

உருளைக்கிழங்குகள்
முதலாவதாக, உருளைக்கிழங்கு "கண்" விதைகளை பூச்சிக்கொல்லிகளில் ஊற்றி பூச்சிகள் முளைகளை சாப்பிடுவதைத் தடுக்கின்றன. அதன்பின்னர் அதனைச்சுற்றி களைக்கொல்லிகள் தெளிக்கபபடுகிறது, இதனால் இதற்கு பக்கத்தில் எந்த செடிகளும் வளராது. இவை முழுமையாக வளரும் ஒவ்வொரு வாரமும் பூச்சிக்கொல்லிகளுக்கு ஆளாகிறது.
MOST READ:பிப்ரவரி மாதத்தில் பிறந்தவங்ககிட்ட என்னென்ன மோசமான குணங்கள் இருக்கும் தெரியுமா?

சாக்லேட்
பெரும்பாலான மக்கள் சாக்லேட்டில் காணப்படும் புரோமைனுக்கு ஒருபோதும் மோசமான எதிர்வினையை எதிர்கொள்ள மாட்டார்கள், ஆனால் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை கொண்டவர்களுக்கு இதனால் உடல்நிலை மோசமாகலாம். பூனை மற்றும் நாய்களுக்கு சாக்லேட் ஆபத்தை ஏற்படுத்தும், எனவே ஒருபோதும் உங்களின் செல்லப்பிராணிகளுக்கு சாக்லேட் கொடுக்காதீர்கள்.

பச்சை உருளைக்கிழங்கு
நீங்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உருளைக்கிழங்கை சாப்பிட்டால் , அவை பச்சை நிறமாகத் தொடங்கும் வரை அவை உங்களுக்கு முற்றிலும் நல்லது. ஸ்பட்ஸ்கள் பச்சை நிறத்தில் செல்லத் தொடங்கும் போது, கிழங்குகளில் சோலனைன் இப்போது உள்ளது என்பதற்கான எச்சரிக்கையாகும், அவற்றை சாப்பிடுவது உங்களை கடுமையாக நோய்வாய்ப்படுத்தும்.

ராஸ்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி
பெர்ரி பழங்கள் மிகவும் மென்மையானவை. இயற்கையாகவே, அவை வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக உரங்களில் நனைக்கப்படுகின்றன, மேலும் பூச்சிகளைத் தடுக்காமல் இருக்க பூச்சிக்கொல்லிகளின் பல்வேறு விதமான கலவைகள் இவற்றின் மீது தெளிக்கப்படுகிறது.

காளான்
சந்தையில் நீங்கள் காணும் காளான்கள் பூஞ்சைக்கு ஒவ்வாமை உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தீங்கு விளைவிக்காது, ஆனால் சிலர் காடுகளில் உள்ள காட்டு காளான்களைப் போன்றவற்றை விரும்புவர். காட்டு காளான்களை பார்க்கும் போது உங்களால் அது சாப்பிடக்கூடியதா என்பதை உங்களால் கண்டறிய முடியாவிட்டால் அதனை தொட்டுவிடாதீர்கள். ஏனெனில் இது உங்களின் உயிரையே கூட பறிக்கலாம்.