For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் பார்ட்டி கொண்டாட போறீங்களா? அப்போ இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க...

2020 ஆம் ஆண்டு முடிவடையப் போகிறது. மக்கள் எல்லாரும் நியூ இயர், கிறிஸ்மஸ் போன்ற ஏராளமான கொண்டாட்டங்களை கொண்டாட தயாராகி வருகிறார்கள். பார்ட்டி கொண்டாட்டங்களின் போது வேண்டாம் என்றும் சொல்ல முடியாது.

|

2020 ஆம் ஆண்டு முடிவடையப் போகிறது. மக்கள் எல்லாரும் நியூ இயர், கிறிஸ்மஸ் போன்ற ஏராளமான கொண்டாட்டங்களை கொண்டாட தயாராகி வருகிறார்கள். எல்லாரும் சந்தோஷமாக இதை கொண்டாட வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என்று சேர்ந்து குதூகலமாக கொண்டாட விருப்பம் இருக்கும்.

Planning A Christmas Party? Keep These 4 Tips In Mind For Complete Health And Wellness

பார்ட்டி, ஏகப்பட்ட விருந்துகள், இனிப்புகள், கிறிஸ்துமஸ் கேக் என்று ஏராளமாக சாப்பிட நேரிடும். பார்ட்டி கொண்டாட்டங்களின் போது வேண்டாம் என்றும் சொல்ல முடியாது. இப்படி சாப்பிடுவதே டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு, உடல் பருமன் உள்ளவர்கள் போன்ற வர்களுக்கு சிக்கலாகி விடும். எனவே இந்த மாதிரியான கொண்டாட்ட சமயங்களில் உங்கள் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

MOST READ: செக்ஸியான பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்!

கிறிஸ்துமஸ் ரெசிபிகளில் சேர்க்கப்படும் சில பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடுயதாக இருக்கலாம். எனவே இந்த கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு நீங்கள் செல்லும் முன் நாங்கள் சொல்லும் டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளைசெமிக் குறியீட்டை சரிபார்க்கவும்

கிளைசெமிக் குறியீட்டை சரிபார்க்கவும்

கிறிஸ்துமஸ் பார்ட்டியின் போது அதிக கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகளை தவிர்க்க பாருங்கள். ஏனெனில் இவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கிறிஸ்துமஸ் விருந்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதே மாதிரி உடல் பருமன் உடையவர்கள் கலோரி அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் கவனமாக இருங்கள்.

சமையல் எண்ணெய்யை சரியாக தேர்ந்தெடுங்கள்

சமையல் எண்ணெய்யை சரியாக தேர்ந்தெடுங்கள்

கிறிஸ்துமஸ் பார்ட்டியை ஏற்பாடு செய்பவர் நீங்கள் என்றால் சமையல் எண்ணெய்யை சரியாக தேர்ந்தெடுங்கள். அதிக எண்ணெய் பயன்படுத்துவதை தவிருங்கள். மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. ஒரு தடவை பயன்படுத்திய எண்ணெய்களை திரும்பத் திரும்ப பயன்படுத்தாதீர்கள். முழு ஆரோக்கியத்தையும் கொடுக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். வேர்க்கடலை, கடுகு மற்றும் கனோலா எண்ணெயைப் பயன்படுத்தலாம். இந்த சமையல் எண்ணெய்கள் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இது தமனிகளில் ஏற்படும் அடைப்பை போக்க வழிவகுக்கும்.

கீரையை சேருங்கள்

கீரையை சேருங்கள்

அதிக எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் நிறைந்த டிஷ் ஒரு சிறந்த சுவை கொடுக்க முடியும் என்பது ஒரு கட்டுக்கதை. அதற்குப் பதிலாக எளிய ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டே சுவையை கூட்டலாம். இறைச்சி மட்டுமல்லாமல் பச்சை காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். கிறிஸ்துமஸின் போது உட்கொள்ளும் பெரும்பாலான இறைச்சிகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே ஒவ்வொரு உணவின் போதும் நார்ச்சத்துக்கள் உள்ள கீரைகளை சேர்க்கும் போது நல்ல ஜீரணமாக வாய்ப்புள்ளது. மேலும் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை நீங்கள் சாப்பிடும் போது வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் நிறைய சாப்பிடுவது குறைக்கப்படுகிறது.

குறைந்தளவு சர்க்கரை மற்றும் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

குறைந்தளவு சர்க்கரை மற்றும் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

கிறிஸ்துமஸ் விருந்துகளில் மக்கள் ஸ்வீட்ஸ், குக்கீஸ், கேக்குகளை அதிகம் சாப்பிடுவார்கள். இத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை குறைந்தளவு சேர்த்துக் கொள்ளுங்கள். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் அதிக உப்பு போட்டு சாப்பிடக் கூடாது. சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் வெல்லத்தைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட டிப்ஸ்களை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் குறைந்தளவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியம் கெடாமல் இருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Planning A Christmas Party? Keep These 4 Tips In Mind For Complete Health And Wellness

With the party season here already, it is essential to take care of their health and not get carried away amid the festive cheer...
Desktop Bottom Promotion