Latest Updates
-
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
இந்த பிரச்சனை இருக்குறவங்க முந்திரி சாப்பிட்டால் நிலைமை ரொம்ப மோசமாயிடுமாம்.. உஷார்....
ஏராளமான நன்மைகளைக் கொண்ட முந்திரி, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். அதுவும் சில உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் முந்திரியை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது அப்பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.
நட்ஸ், உலர் பழங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் குளிர்காலத்தில் தினமும் உலர் பழங்களை சாப்பிடுவது இன்னும் நல்லது. ஒவ்வொரு உலர் பழங்களும் வெவ்வேறு குணங்களைக் கொண்டுள்ளன. அதில் நாம் இன்று பார்க்கப் போவது பலரும் வீட்டு சமையலறையில் அம்மாவிற்கு தெரியாமல் திருடி சாப்பிடும் ஓர் சுவையான உணவுப் பொருளான முந்திரியைப் பற்றி தான்.

முந்திரியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதன் நன்மைகளைப் பற்றி கூற வேண்டுமானால், இது உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும், முடிக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முந்திரியில் இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் அதிகமாக உள்ளன. இதை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் இதில் வைட்டமின் சி, மக்னீசியம், செலினியம் போன்றவையும் உள்ளன.
ஏராளமான நன்மைகளைக் கொண்ட முந்திரி, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். அதுவும் ஒருவர் எப்போது அளவுக்கு அதிகமாக முந்திரியை சாப்பிடுகிறாரோ, அவர் முந்திரியினால் கிடைக்கும் நன்மைகளுக்கு பதிலாக தீமையையே பெறுவார். இது தவிர, சில உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் முந்திரியை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது அப்பிரச்சனையை தீவிரமாக்கிவிடும். இப்போது யாரெல்லாம் முந்திரியை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

வயிற்று பிரச்சனைகள்
உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், முந்திரி பருப்பை சாப்பிடாதீர்கள். ஒருவேளை சாப்பிட்டால், அது வயிற்று பிரச்சனையை தீவிரமாக்கிவிடும். மேலும் ஒருவர் முந்திரியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அஜீரண கோளாறு, வயிற்றுப் போக்கு, வாயு மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதாக நம்பப்படுகிறது. ஆகவே வயிற்று பிரச்சனை இருப்பின், முந்திரியை அறவே தொட வேண்டாம்.

உடல் பருமன்
முந்திரியில் கலோரிகள் அதிகமாக உள்ளன. எனவே முந்திரியை அளவுக்கு அதிகமாக ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமனை உண்டாக்கும். மேலும் ஏற்கனவே உடல் பருமன் பிரச்சனையை சந்திப்பவர்கள், முந்திரியை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. எனவே நீங்கள் உங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், முந்திரியை உணவில் சேர்க்காதீர்கள்.

அலர்ஜி
சிலருக்கு முந்திரி சாப்பிட்டால் அலர்ஜி பிரச்சனை வரும். அதுவும் சருமத்தில் அரிப்பு அல்லது தடிப்புகள் ஏற்படலாம். எனவே உங்களுக்கு இம்மாதிரியான சரும பிரச்சனை இருந்தால், முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது அலர்ஜியை மேலும் அதிகரித்து தீவிரமாக்கிவிடும்.

தலைவலி
முந்திரியில் உள்ள தைரமின் மற்றும் பீனைல்எத்திலமைன் என்னும் அமினோ அமிலங்கள், தலைவலியை உண்டாக்குவதாக கூறப்படுகிறது. ஆகவே அடிக்கடி தலைவலி அல்லத ஒற்றை தலைவலி பிரச்சனை கொண்டவர்கள், முந்திரியை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், தீவிரமான தலைவலியால் அவதிப்பட நேரிடும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிடலாம்?
ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸிற்கு அதிகமாக முந்திரியை சாப்பிடக்கூடாது. ஒரு அவுன்ஸ் என்பது 18 முழு முந்திரி இருக்கும். நீங்கள் முந்திரியின் முழு பலனையும் பெற நினைத்தால், மேலே கொடுக்கப்பட்ட பிரச்சனைகள் இல்லாவிட்டால், ஒரு அவுன்ஸ் முந்திரியை தினமும் சாப்பிட்டு, அதன் பலனைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications