Latest Updates
-
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க..
இந்த பிரச்சனை இருந்தா காபி குடிக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப அவஸ்தைப்படுவீங்க...
காபி என்ன தான் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், சில வகையான ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் காபியைக் குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது அவர்களின் ஆரோக்கிய பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.
உலகளவில் பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கும் ஓர் பானம் தான் காபி. காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால் தான் பலருக்கு அந்நாளின் தொடக்கமே சிறப்பாக இருப்பது போன்று இருக்கும். சொல்லப்போனால் சோர்வாக இருக்கும் போது ஒரு டம்ளர் காபி குடித்தால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். இது தவிர காபியை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.

வெளிநாடுகளில் காபி மக்களால் அதிகமாக அருந்தப்படும் ஓர் பானமாகும். அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களின் படி, ஒரு 8 அவுன்ஸ் கப் காய்ச்சிய காபியில் 96 மிகி காப்ஃபைன் உள்ளது. ஒரு நாளைக்கு ஒருவர் சராசரியாக 400 மிகி காப்ஃபைன் உட்கொள்ளலாம். அதாவது 3-4 கப் காபி குடிக்கலாம். பல்வேறு ஆய்வுகளில் காபி புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம், இதய செயலிழப்பு அபாயம் மற்றும் பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயங்களைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
காபி என்ன தான் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், சில வகையான ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் காபியைக் குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது அவர்களின் ஆரோக்கிய பிரச்சனையை தீவிரமாக்கிவிடும். இப்போது யாரெல்லாம் காபியைக் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள்
ஓஏபி என்று அழைக்கப்படும் அதிக சுறுசுறுப்பான சிறுநீர்ப்பையைக் கொண்டவர்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் மற்றும் இவர்களால் சிறுநீரை கட்டுப்படுத்துவது என்பது சிரமமாக இருக்கும். இம்மாதிரியான பிரச்சனையைக் கொண்டவர்கள் பகலில் மட்டுமின்றி, இரவிலும் அடிக்கடி சிறநீர் கழிக்க வேண்டியிருக்கும். இந்த பிரச்சனையைக் கொண்டவர்கள் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, பலமுறை சிறுநீர் கழிக்க செய்யும்.

எரிச்சல் கொண்ட குடல்நோய்க்குறி (IBS)
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியானது வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலுடன் அடிவயிற்று வலியை உண்டாக்கும். மேலும் இது வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்புகள், எரிச்சலுணர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும். இந்நிலையில் இப்பிரச்சனை இருக்கும் போது, காபியைக் குடித்தால், அது வயிற்றுப்போக்கை இன்னும் அதிகரிக்கும்.

கர்ப்பிணி பெண்கள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகளவு காப்ஃபைனை உட்கொண்டால், அது கருச்சிதைவு, குறைவான எடையில் குழந்தை மற்றும் பிற கர்ப்ப கால சிக்கல்களின் அபாயத்தை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் காப்ஃபைன் கருப்பை மற்றும் நஞ்சுக் கொடியில் இருக்கும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து, சிசுவிற்கு இரத்த ஓட்டத்தைக் குறைத்து, சிசுவின் வளர்ச்சியைத் தடுப்பதாக நம்பப்படுகிறது.

குளுக்கோமா/கண் அழுத்த நோய்
குளுக்கோமா என்பது பார்வை நரம்பை சேதப்படுத்தும் ஒரு கண் பிரச்சனையாகும். கண்களில் உள்ள பார்வை நரம்புகள் கண்ணில் இருந்து மூளைக்கு காட்சி தகவலை அனுப்புகின்றன. எனவே பார்வை நரம்புகளின் ஆரோக்கியமானது மிகவும் இன்றியமையாதது. ஆனால் காபியை ஒருவர் தினமும் அதிகளவில் குடித்து வந்தால், அது குளுக்கோமா அபாயத்தை அதிகரிக்கலாம் என்று சர்வதே ஆய்வு ஒன்று கூறுகிறது.

தூக்க பிரச்சனை
காப்ஃபைன் என்பது ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் ஒருவரின் விழிப்புணர்வை மேம்படுத்தும் ஒரு பொருளாகும். இந்த காபியை ஒருவர் சோர்வான சமயத்தில் உட்கொண்டால், அது நல்ல பலனைத் தரும். ஆனால் தூக்க பிரச்சனையை அதாவது இரவு நேரத்தில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், காபியைக் குடித்தால், அது நிலைமையை இன்னமும் மோசமாக்கத் தான் செய்யும். ஆகவே தூக்கமின்மை பிரச்சனையைக் கொண்டவர்கள் காபியைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications