For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Langya Virus: சீனாவில் புதிதாக பரவும் லாங்யா வைரஸ்.. இது கொரோனாவை விட கொடியதாம்...

தற்போது சீனாவில் லாங்யா என்னும் புதிய வைரஸ் தோன்றியுள்ளது. அதுவும் இந்த வைரஸ் சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது.

|

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கொரோனா என்னும் வைரஸ் பரவ ஆரம்பித்து, இன்று வரை இதை முற்றிலும் ஒழிக்க முடியவில்ல. இந்நிலையில் தற்போது சீனாவில் லாங்யா என்னும் புதிய வைரஸ் தோன்றியுள்ளது. அதுவும் இந்த வைரஸ் சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் சீனாவில் 35 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

New Langya virus reported in China causing liver, kidney failure symptoms, Transmission and Prevention in Tamil

இந்த நோயாளிகள் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பையோ அல்லது பொதுவான வெளிப்பாட்டு வரலாற்றையோ கொண்டிருக்கவில்லை. தைவானின் நோய்க்கட்டுப்பாட்டு மையங்கள், இந்த வைரஸ் பரவுவதை கண்டறிவதற்கு நியூக்ளிக் அமில சோதனை முறையை நிறுவியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாங்யா ஹெனிபாவைரஸ் என்றால் என்ன?

லாங்யா ஹெனிபாவைரஸ் என்றால் என்ன?

லாங்யா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஜூனோடிக் நோயாகும். இந்த வைரஸ் நிபா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் முதன்முதலில் வடகிழக்கு மாகாணங்களான ஷான்டாங் மற்றும் ஹெனானில் 2018 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் கடந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது.

லாங்யா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

லாங்யா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

லாங்யா வைரஸ் பரவல் குறித்து வீட்டு விலங்குகள் மீது சோதனை நடத்தப்பட்டது. வீட்டு விலங்குகள் மீது நடத்தப்பட்ட செரோலாஜிக்கல் கணக்கெடுப்பில், பரிசோதிக்கப்பட்ட ஆடுகளில் 2 சதவீதமும், நாய்களில் 5 சதவீதமும் பாசிட்டிவ் என்று வந்தது.

இது தவிர வன விலங்கு இனங்களின் மீது நடத்தப்பட்ட சோதனை முடிவில், எலி போன்ற தோற்றமளிக்கும் சிறு பூச்சியை உண்ணும் பாலூட்டியான ஷ்ரூவில், 27 சதவீதம் இந்த வைரஸ் இருப்பது தெரிய வந்தது. ஆகவே இந்த லாங்யா வைரஸ் இந்த உயிரினத்திடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

லாங்யா வைரஸின் அறிகுறிகள் என்ன?

லாங்யா வைரஸின் அறிகுறிகள் என்ன?

லாங்யா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சிலர் காய்ச்சல், உடல் சோர்வு, இருமல், பசியின்மை, தசை வலி, குமட்டல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை சந்தித்தனர். இது தவிர அவர்களின் உடலில் இரத்த வெள்ளையணுக்கள் குறைவாக இருப்பதும் தெரிய வந்தது. இந்த வைரஸ் தொற்று அதிதீவிரமானால் அது குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை, கல்லீரல் செயலிழப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். முக்கியமாக இந்த வைரஸால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

லாங்யா வைரஸ் முதன்முதலாக எங்கு கண்டறியப்பட்டது?

லாங்யா வைரஸ் முதன்முதலாக எங்கு கண்டறியப்பட்டது?

லாங்யா வைரஸ் சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இப்பகுதியில் 35 நோயாளிகள் கடுமையான லாங்யா ஹெனிபாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில், 26 பேர் லாங்யா ஹெனிபவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதாவது வேறு எந்த நோய்க்கிருமிகளும் இவர்களின் உடலில் இல்லை. இந்த வைரஸ் தொற்றிற்கு பிரத்யேக மருந்து எதுவும் இல்லை. இருப்பினும், தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

New Langya virus reported in China causing liver, kidney failure symptoms, Transmission and Prevention in Tamil

New Langya virus reported in China causing liver, kidney failure. Know its symptoms, Transmission and Prevention in tamil.
Story first published: Thursday, August 11, 2022, 12:43 [IST]
Desktop Bottom Promotion