Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கணுமா? அப்ப இத அதிகமா சாப்பிடுங்க...
பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க முடியும். அதுவும் இயற்கையாக ஒருசில உணவுகள் மற்றும் பானங்களின் உதவியுடன் எளிதில் வலிமையாக்கலாம்.
ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். வலிமையான நோயெதிர்ப்பு சக்தி உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும். ஆனால் பல்வேறு காரணிகள் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கி பலவீனமாக்குகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் விஷயங்கள் எவையென்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இப்படி தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலம், அந்த விஷயங்களில் கவனமாக இருந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம். அதே சமயம் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க முடியும். அதுவும் இயற்கையாக ஒருசில உணவுகள் மற்றும் பானங்களின் உதவியுடன் எளிதில் வலிமையாக்கலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் விஷயங்கள்
* மன அழுத்தம்
* மோசமான வாழ்க்கை முறை
* ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள்
* அதிகளவு மது அருந்துவது
* தூக்கமின்மை
* உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும். இதில் உள்ள வைட்டமின் சி, இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்திக்கு உதவும். இரத்த வெள்ளையணுக்கள் உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும். எனவே ஒருவரது உடலில் வைட்டமின் சி போதுமான அளவில் இருந்தால், சளி மற்றும் இதர தொற்றுக்களின் அபாயத்தைத் தடுக்கலாம். எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளான அரஞ்சு, கிவி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுங்கள்.

மஞ்சள்
மசாலாப் பொருட்களுள் ஒன்றான மஞ்சளில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே அன்றாட உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அவ்வப்போது மஞ்சள் கொண்டு டீ தயாரித்தும் குடியுங்கள்.

யோகர்ட்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று யோகர்ட். இதில் உள்ள புரோபயோடிக்குகள், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும். எனவே அன்றாடம் யோகர்ட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் அத்துடன் சிறிது நற்பதமான பழங்களையும் சேர்த்து உட்கொள்ளுங்கள். ஆனால் ப்ளேவர் அல்லது கொழுப்பு அதிகம் நிறைந்த யோகர்ட்டை தேர்ந்தெடுத்து உண்ணாதீர்கள்.

டீ
டீ பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி கிருமிகளை எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரியும். ஒருவர் காலையில் எழுந்ததும் டீயைக் குடித்தால், அந்நாள் நன்கு புத்துணர்ச்சியுடன் சிறப்பாக இருக்கும். டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் டீ வகைகளாவன, க்ரீன் டீ, ப்ளாக் டீ, இஞ்சி டீ, பட்டை டீ, மஞ்சள் டீ அல்லது சீமைச்சாமந்தி டீ போன்றவை.

பட்டை
மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டை, உணவுகளுக்கு நல்ல மணத்தைக் கொடுக்கக்கூடியது. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. பட்டை சர்க்கரை நோய், PCOD, தொற்றுகள் மற்றும் இதய ஆரோக்கியம் போன்றவற்றைப் பராமரிக்க உதவும். அதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். எனவே அன்றாட டயட்டில் பட்டையை சேர்த்துக் கொண்டு, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கிக் கொள்ளுங்கள்.

பூண்டு
பூண்டு, உணவிற்கு நல்ல சுவையைக் கொடுக்கும் உணவுப் பொருள். மேலும் இது அனைத்து சமையலறையிலும் இருக்கும் பொருளும் கூட. பூண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இது ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. இதில் உள்ள சல்பர் தான் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.

பசலைக்கீரை
கீரைகளுள் பசலைக்கீரை மிகவும் ஆரோக்கியமானது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த கீரையில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன்கள் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதோடு இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.



Click it and Unblock the Notifications