மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும்

Posted By:

Chana Masala Pulao Recipe in Tamil: ஒரே மாதிரி வெரைட்டி ரைஸ் செய்து போரடித்து விட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதுவரை செய்யாத வித்தியாசமான ஒரு உணவை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், சுண்டலும் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வீடே மணக்கும் அளவில் மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவை செய்து பாருங்கள்.

Chana Masala Pulao Recipe How to Make at Home in Tamil

இந்த சன்னா மசாலா புலாவ் ஒரு ஒன்பாட் ரெசிபி என்பதால், காலையில் குழந்தைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கும் செய்து கொடுக்கலாம். இந்த ஒரு சிம்பிளான மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் பிரியாணி சிக்கன் பிரியாணியே தோற்கும் அளவில் ருசியாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும் என்பதால் பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். மேலும் இதில் சுண்டல் சேர்த்து செய்யப்படுவதால் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சன்னா மசாலா புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் சுண்டல்
- 1 1/2 கப் பாசுமதி அரிசி
- 1 கேரட்
- 1 பெரிய வெங்காயம்
- 1/4 கப் பட்டாணி
- 1 சிட்டிகை மஞ்சள்
- தேவையான அளவு உப்பு
- 2 கப் தேங்காய் பால்
- 1 கப் தண்ணீர்

அரைக்க வேண்டியவை:

- ½ ஸ்பூன் எண்ணெய்
- 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
- 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
- 1 வர மிளகாய்

தாளிக்க:

- 1 ஸ்பூன் நெய்
- 1 பிரிஞ்சி இலை
- 1 ஏலக்காய்
- 1 இலவங்கப்பட்டை
- 2 கிராம்பு
- 1 ஸ்பூன் சோம்பு
- சிறிது கறிவேப்பிலை
- 2 பச்சை மிளகாய்

செய்முறை:

- சுண்டலை இரவு முழுவதும் ஊறவைத்து, குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேரட்டை நன்கு கழுவி, தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி வைத்துக்கொள்ளவும்.

- அரிசியை சமைப்பதற்கு முன் 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

- ஒரு வாணலியைச் சூடாக்கி, எண்ணெய் ஊற்றவும். அரைப்பதற்குத் தேவையான பொருட்களைச் சேர்த்து, பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த பொருட்களை எடுத்து, மிக்ஸியில் போட்டு நைசான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

- ஒரு வாணலியைச் சூடாக்கி, அதில் நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.

- அதேசமயம் ஊறவைத்த அரிசியிலிருந்து நீரை வடித்துத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். அடுத்து, நறுக்கிய கேரட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

- பின்னர் ​​அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- அதன்பின் வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் பட்டாணியைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பிறகு, அரிசியைச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் வேகவைக்க வேண்டும்.

- அடுப்பை அதிக தீயில் வைத்து, அரிசி மற்றும் நறுக்கிய காய்கறிகளை வேகவைக்கவும். தேங்காய்ப்பாலில் காய்கறி வெந்து முக்கால் பங்கு வற்றியதும், உப்பு சேர்த்து ஒருமுறை கிளறிவிடவும்.

- தண்ணீர் முழுவதுமாக வற்றிய பிறகு, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, மிதமான தீயில் மேலும் 20 நிமிடங்கள் வேகவைக்கவும். இந்த நேரத்தில், அரிசி முழுமையாக வெந்து, ஒன்றோடொன்று ஒட்டாமலும் குழையாமலும், உதிரியாக இருக்கும்.

- சமைக்கும்போது அரிசியை அடிக்கடி கிளறக்கூடாது; அவ்வாறு செய்தால், வெந்த அரிசி உடைந்து குழைந்துவிடும்.அரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்தால் சுவையான சன்னா மசாலா புலாவ் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Saturday, October 17, 2026, 10:20 [IST]
Desktop Bottom Promotion