For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள்!

நம்முடைய நாளமில்லா சுரப்பி அமைப்பு ஹார்மோன்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்கிறது மற்றும் இவற்றில் உண்டாகும் சிறிதளவு தொந்தரவுகள் கூட பல உடல்நலப் பிரச்சினைகளை வரவழைக்கின்றன.

|

நமது உடலின் ஆரோக்கியத்தை நிர்வகிக்கவும், சீரான உடல் செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இன்சுலின், ஈஸ்ட்ரோஜென், டோபமைன் , FSH மற்றும் TSH போன்றவை உடலில் இயற்கை ரசாயனங்களாக செயல்புரிகின்றன. இவை முடி வளர்ச்சி, மனநிலை , உடல் எடை, கருவுறுதல் அளவு, ஆற்றல் மற்றும் பதற்றம் போன்றவற்றிற்கு முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன.

Natural Home Remedies To Balance Hormones

நம்முடைய நாளமில்லா சுரப்பி அமைப்பு ஹார்மோன்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்கிறது மற்றும் இவற்றில் உண்டாகும் சிறிதளவு தொந்தரவுகள் கூட பல உடல்நலப் பிரச்சினைகளை வரவழைக்கின்றன. இதனால் மக்கள் மருத்துவ உதவியை நாடுகின்றனர்.

MOST READ: தீவிரமான மூட்டு அழற்சியால் அவஸ்தைப்படுறீங்களா? அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

ஆனால் கவலை வேண்டாம். சில இயற்கை முறையில் இந்த ஹார்மோன்களை சமச்சீராக வைத்து உடல் செயல்படுகளை சீராக்க முடியும். இப்போது உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான உணவை உண்ணுங்கள்

சரியான உணவை உண்ணுங்கள்

நீங்கள் சரியாக உணவு உட்கொண்டால் அது உங்கள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்றால் அதன் முதல் அறிகுறியாக உங்கள் நாளமில்லா சுரப்பிகளில் சேதம் உண்டாகிறது. சரியான ஊட்டச்சத்துகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வதால் உங்கள் ஹார்மோன்கள் சீரான செயல்பாட்டுடன் இருக்க முடியும். இதற்கு உங்களுக்குத் தேவை அதிக அளவு புரதம், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், குறைந்த அளவு கார்போ உணவுகள் மற்றும் அதிகமான சர்க்கரை அளவை உங்கள் உணவில் இருந்து நீக்க வேண்டும். இதற்கிடையில் ஆரோக்கியமான கொழுப்புகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ள வேண்டும். இதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்.

அதிகமாக சாப்பிடுவது மற்றும் குறைவாக சாப்பிடுவது

அதிகமாக சாப்பிடுவது மற்றும் குறைவாக சாப்பிடுவது

எடை மேலாண்மையில் திறன் இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவை ஹார்மோன் மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். அதிகமான அளவு உணவு உட்கொள்ளுதல் அல்லது மிகக் குறைவான அளவு உணவு உட்கொள்ளுதல் ஆகியவை அதிகரித்த இன்சுலின் அளவு, கார்டிசோல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்ற கோளாறு ஆகிய பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. அதனால் சரியான கலோரி சமநிலையை கையாள்வதும், வயது, பாலினம் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதும் மிகவும் முக்கியம்.

வழக்கமான உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதால் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சரியான ஹார்மோன் சமநிலையையும் தருகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதால் அதிகரித்த கொழுப்பைக் கரைக்க போராட முடிகிறது, அழற்சி எதிர்ப்பு ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்கிறது, இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கிறது. ஹார்மோன் அளவு மேம்பட மற்றும் வாழ்க்கை தரம் முன்னேற ஏரோபிக் பயிற்சி மிகவும் உதவியாக உள்ளது.

ஆழமான உறக்கம்

ஆழமான உறக்கம்

சீரான உடல் செயல்பாடுகளுக்கு ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம். போதுமான அளவு உறக்கம் இல்லாமை ஹார்மோன்களை சேதப்படுத்துகிறது. எந்த ஒரு தடையுமின்றி முழுமையான தூக்கம் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம். தூக்கத்தில் குறட்டை விடும்போது உங்கள் உடல் நச்சுகளை எதிர்த்து போராடுகிறது மற்றும் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படலாம்.

மூலிகைகளை தேர்ந்தெடுங்கள்

மூலிகைகளை தேர்ந்தெடுங்கள்

உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். ஆகவே உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில மூலிகைகள் மற்றும் செடிகள் உங்களுக்குத் தேவை. மேலும் மனஅழுத்தத்தை எதிர்த்து போராடவும், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தவும் இந்த மூலிகைகள் உதவுகின்றன. அஸ்வகந்தா, மஞ்சள், துளசி, ஜின்செங், அதிமதுரம் போன்றவை சில மூலிகை செடிகளாகும். இவற்றை உங்கள் இல்லங்களில் வளர்ப்பதால் அவ்வப்போது இதன் நுகர்வு உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Home Remedies To Balance Hormones

Here are some natural home remedies to balance hormones. Read on to know more...
Desktop Bottom Promotion