Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
National Vaccination Day 2023: இன்னும் எந்த நோய்களுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவில்லை என்று தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் இன்னமும் ஒருசில கொடிய நோய்களுக்கு தடுப்பூசிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
National Vaccination Day 2023: இன்று குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் உயிர்கொல்லி நோய்களால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதுவும் போலியோ என்ற கொடிய நோயால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த போலியோ நோயில் இருந்து மக்களைக் காப்பாற்ற சொட்டுமருந்து வடிவில் தடுப்பூசி முதலில் மக்களுக்கு போடப்பட்டன.

அப்படி முதன்முதலாக போலியோ சொட்டு மருந்து 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி போடப்பட்டது. இந்த போலியோ தடுப்பு மருந்தானது பல உயிர்களை காத்ததால், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மற்றும் தடுப்பூசியின் விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதுவரை எத்தனையோ தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளை தவறாமல் போட்டுக் கொள்வதனால் தான், நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிகிறது. இருப்பினும் இன்னமும் ஒருசில கொடிய நோய்களுக்கு தடுப்பூசிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது எந்த நோய்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதைக் காண்போம்.

தடுப்பூசி இல்லாத நோய்கள்
மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் பல கடுமையான நோய்களுக்கு நமது விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் என்ன தான் மருத்துவ துறையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஒருசில நோய்களுக்கு தடுப்பூசிகளை கண்டுபிடிக்க முடியவில்லை மற்றும் இன்றும் அந்த நோய்களுக்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதுவரை முழுமையாக சரிசெய்ய முடியாத மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்காத நோய்கள் பின்வருமாறு:
* எய்ட்ஸ்/எச்.ஐ.வி
* எபோலா
* ஆஸ்துமா
* அல்சைமர்
* சிக்கன்குனியா
* ஆஸ்டியோபோரோசிஸ்
* அரிவாள் செல் இரத்த சோகை
* ட்ரைஜெமினல் நியூரோசிஸ்
* அட்ரினோகார்டிகல் கார்சினோமா
* டோக்ஸோபிளாஸ்மோசிஸ்

எய்ட்ஸ்
உலகிலேயே எஸ்ட்ஸ் மிகவும் கொடிய நோய். இந்த எய்ட்ஸிற்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், தீவிரமாகாமல் தடுக்கலாம்.

எபோலா வைரஸ்
எபோலா வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவக்கூடியது. இந்த வகை வைரஸ் ஆப்பிரிக்காவில் உள்ள விலங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. இந்த வைரஸை முற்றிலும் அழிக்க தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆஸ்துமா
ஏராளமானோர் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த ஆஸ்துமா பிரச்சனையை முழுமையாக சரிசெய்ய தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சிகிச்சைகளின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ்
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோயானது கடுமையான மூட்டு வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும். இந்நோயால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நோயைத் தடுக்கவும் எந்த ஒரு தடுப்பு மருந்தும் இல்லை. வேண்டுமானால் இதன் அறிகுறிகளுக்கு ஏற்ப சில வைத்தியங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அல்சைமர்
அல்சைமர் என்பது ஒரு ஞாபக மறதி நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாற்றல் பலவீனமாக இருக்கும். இந்நோயானது ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். இந்த அல்சைமர் நோய்க்கு என்று பிரத்யேக தடுப்பு மருந்து எதுவும் இல்லை. ஆனால் இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சைகளின் மூலம் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம்.

சிக்கன்குனியா
சிக்கன்குனியா என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்று. இதன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் மூட்டு வலி. இந்த சிக்கன்குனியாவிற்கு தடுப்பூசி எதுவும் இல்லை. ஆனால் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை வழங்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
இதுப்போன்று பல நோய்கள் அல்லது பிரச்சனைகளுக்கு தடுப்பூசிகளோ அல்லது முழுமையான தீர்வோ இல்லை. நாம் கவனமாக இருந்தால், இவற்றின் அபாயத்தைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications