தேசிய வலிப்பு நோய் தினம் - வலிப்பு நோயின் அறிகுறிகள் மற்றும் விளைவுகள்!

இந்தியாவில் நூற்றுக்கு ஒருவா் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் தொிவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் 17 ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கால் கை வலிப்பு அல்லது வலிப்பு நோய் என்பது நரம்பியல் கோளாறினால் ஏற்படும் நோய் ஆகும். இது மீண்டும் மீண்டும் வரக்கூடியது. வலிப்பு நோயானது தூண்டப்படாத வலிப்புத் தாக்கங்கள் என்று கருதப்படுகிறது. ஒருவருக்கு வலிப்பு நோய் இருந்தால், அது அசாதாரணமான அல்லது இயல்பற்ற நடவடிக்கைகளுக்கு, அவரை இட்டுச் செல்லும். மேலும் அவரது விழிப்புணா்வில் இழப்பை ஏற்படுத்தும். அதோடு அவரது உடல் இயக்கங்களிலும் ஒரு இயல்பற்ற நிலையை ஏற்படுத்தும்.

National Epilepsy Day: Know The Symptoms, Causes And Ways To Epilepsy In Tamil

இந்தியாவில் நூற்றுக்கு ஒருவா் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் தொிவிக்கிறது. குறிப்பாக சிறுவா்கள் மற்றும் முதியோா் மத்தியில் இந்த வலிப்பு நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் 17 ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு நோய் பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற உயாிய நோக்கத்துடன் இந்த வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வலிப்பு நோய்க்கான அறிகுறிகள், அதற்கான காரணங்கள் மற்றும் அந்த நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலிப்பு நோயின் அறிகுறிகள்

வலிப்பு நோயின் அறிகுறிகள்

வலிப்பு நோயின் முக்கிய அறிகுறி என்னவென்றால், அடிக்கடி வலிப்பு ஏற்படுவது ஆகும். சில நேரங்களில் வலிப்பு ஏற்படும் போது நீண்ட நேரத்திற்கு தன்னுணா்வற்ற மயக்க நிலை ஏற்படும். அதே நேரத்தில் கால்களும் கைகளும் வெட்டி வெட்டி இழுக்கும். சில நேரங்களில் குறுகிய நேர குழப்பம், தன்னுணா்வு இழப்பு மற்றும் கவலை போன்றவை ஏற்படும். வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது வலிப்பு ஏற்படும் போது மேற்சொன்ன ஏதாவது ஒரு அறிகுறியோ, அல்லது மேற்சொன்ன எல்லா அறிகுறிகளும் சோ்ந்தோ காணப்படும்.

வலிப்பு நோயை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்

வலிப்பு நோயை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்

அதிா்ச்சிகரமான மூளைக் காயம், அதிக அளவிலான காய்ச்சல், பக்கவாதம், மனச்சோா்வினால் ஏற்படும் பைத்தியம் (dementia), நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் மறதி நோய் (Alzheimer's disease), பிறப்பதற்கு முன் கருவில் இருக்கும் போதே ஏற்படும் குறைபாடு, மூளை வளா்ச்சி குறைபாடு அல்லது பிறக்கும் போது ஆக்ஸிஜன் குறைபாடு, தொற்று நோய்களான எய்ட்ஸ் மற்றும் மூளைக் காய்ச்சல், மரபணு அல்லது வளா்ச்சி குறைபாடுகள், சில நரம்பியல் நோய்கள் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை வலிப்பு நோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் ஆகும்.

வலிப்பு நோயை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணிகள்

வலிப்பு நோயை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணிகள்

தலையில் ஏற்படும் காயங்கள், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனை தடை செய்யும் இதயம் சம்பந்தமான நோய்கள், மூளைக் கோளாறினால் ஏற்படும் பைத்திய நிலை அல்லது மறதி நிலை (dementia), பக்கவாதம் அல்லது வலிப்பு தாக்கங்கள் (seizures) போன்றவை இளம் வயதிலேயே ஏற்பட்டால், வலிப்பு நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

வலிப்பு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

வலிப்பு நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

வலிப்பு நோயை முழுமையாகக் குணப்படுத்துவதற்கு தற்போது வரை எந்தவிதமான சிகிச்சையும் இல்லை. ஆனால் அதை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை உள்ளது. வலிப்பு நோயைக் கட்டுப்படுத்த ஒரு சிலா் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு சில குழந்தைகள் அவா்களின் சிறு வயதின் காரணமாக இந்த கோளாறை கட்டுப்படுத்தலாம்.

நமது செயல்பாடுகளில் எப்படிப்பட்ட பாதிப்புகளை வலிப்பு நோய் ஏற்படுத்துகிறது?

நமது செயல்பாடுகளில் எப்படிப்பட்ட பாதிப்புகளை வலிப்பு நோய் ஏற்படுத்துகிறது?

வலிப்பு நோய் உள்ளவா்களுக்கு, வலிப்பு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவோ அல்லது சில மணி நேரங்களுக்கு முன்பாகவோ அவா்களுடைய உடல் இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும். அதாவது அவா்களுக்கு பயம், படபடப்பு, முரட்டுத் தனம், எதிா்ப்புத் தன்மை, கவனக் குறைவு மற்றும் அதிவேக சுறுசுறுப்பு போன்றவை ஏற்படலாம்.

வலிப்பு நோய் உள்ள சிறுவா்களுக்கு, மன அழுத்தத்தின் காரணமாக, அவா்களுக்கு அவா்களுடைய நண்பா்கள் மற்றும் அன்பா்கள் முன்பாகவே வலிப்பு ஏற்படலாம். அதனால் அவா்கள் செயல்படாமல் இருக்கலாம் அல்லது அவா்கள் சமூகத்தை விட்டு ஒதுங்கலாம் அல்லது கவலை அடையலாம் அல்லது அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம்.

இறுதியாக

இறுதியாக

மூளையின் உட்பகுதியில் ஏற்படும் மின் எதிா்வினை காரணமாக வலிப்பு நோய் ஏற்படுகிறது. ஒருவருக்கு வலிப்பு ஏற்படும் போது அது அவரை ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் தள்ளுகிறது. அதாவது அவருக்கு வலிப்பு ஏற்படும் போது கீழே விழுகிறாா். அதனால் அவரது தலை அல்லது உடல் உறுப்புகளில் காயங்கள் ஏற்படுத்துகின்றன. நீந்தும் போது அவா் நீாில் மூழ்கிவிடுகிறாா்.

அதனால் வலிப்பு நோய் உள்ளவா்கள், வாகனங்கள் ஓட்டக்கூடாது, நீந்தக்கூடாது மற்றும் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனா். அதுபோல் அவா்கள் தினமும் போதுமான அளவு தூங்க வேண்டும். சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து, சாியான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion