For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா? அப்ப யாராவது இப்படி சொன்னா அத நம்பிடாதீங்க...

உலகளவில் மலச்சிக்கல் பிரச்சனையால் சுமார் 15 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையானது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும்.

|

நம் வாழ்வில் ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையை அனுபவித்திருப்போம். ஒருவருக்கு மலச்சிக்கல் வருதற்கு பின் பல காரணங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொருவருக்கும் இது வருவதற்கான காரணங்கள் வேறுபட்டிருக்கும். மலச்சிக்கல் என்பது உடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்ற முடியாத நிலை ஆகும். இப்பிரச்சனையில் மலமானது மிகவும் வறண்டு இறுக்கமடைந்திருக்கும்.

Myths About Constipation In Tamil

உலகளவில் மலச்சிக்கல் பிரச்சனையால் சுமார் 15 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையானது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும். மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரால் வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாது. எந்நேரமும் ஒருவித டென்சனுடனேயே இருக்க நேரிடும். இப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை குறித்து பல தவறான கருத்துக்கள் மக்கள் மனதில் உள்ளது. இப்போது அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 மலச்சிக்கல் ஏற்பட டயட் தான் காரணம்.

#1 மலச்சிக்கல் ஏற்பட டயட் தான் காரணம்.

ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உணவுமுறை காரணமாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே காரணமாகிவிட முடியாது. நிபுணர்களின் கூற்றுப்படி, வலி மற்றும் மன இறுக்கத்திற்காக ஒருவர் உட்கொள்ளும் மருந்துகளும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது என்று உணவுகளை உண்பதை தவிர்ப்பதை நிறுத்திவிட்டு, நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் காரணமாக இருக்கலாமா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

#2 நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்

#2 நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்

இது மக்களிடையே உள்ள மிகவும் பொதுவான ஒரு கட்டுக்கதை. குறைவான நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று. ஆனால் அதற்காக அதிகளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், அதுவும் மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கும் போது உட்கொண்டால், அதனால் எந்த பயனும் கிடைக்காது. பொதுவாக நார்ச்சத்துக்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவை கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து. இவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து தான் நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே மலச்சிக்கல் ஏற்படக்கூடாதெனில் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

#3 புரோபயோடிக்குகள் மாயங்களை ஏற்படுத்தும்

#3 புரோபயோடிக்குகள் மாயங்களை ஏற்படுத்தும்

புரோபயோடிக்குகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் இது வயிற்றில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் அறிகுறிகளை போக்கி, ஓரளவு மலச்சிக்கலையும் போக்கலாம். ஆனால் மலச்சிக்கலைப் போக்குவதில் புரோபயோடிக்குகளின் பயன்பாட்டை நிரூபிக்க போதுமான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகின்றன.

#4 நிறைய தண்ணீர் குடித்தால் மலச்சிக்கல் வராது

#4 நிறைய தண்ணீர் குடித்தால் மலச்சிக்கல் வராது

தினமும் போதுமான அளவு நீரைக் குடிப்பது நல்ல பழக்கம் தான். ஆனால் வெறும் தண்ணீரை மட்டும் அதிகம் குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும் என்று எந்த ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை. எனவே மலச்சிக்கல் ஏற்படக்கூடாது என்று நினைத்தால் அல்லது அதன் அபாயத்தைக் குறைக்க விரும்பினால், தினமும் போதுமான நீருடன், கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

#5 தயிர் மலச்சிக்கலை சரிசெய்யும்

#5 தயிர் மலச்சிக்கலை சரிசெய்யும்

தயிர் ஒரு நேச்சுரல் புரோபயோடிக் உணவுப் பொருளாகும். எனவே தயிரை உட்கொண்டால், அது குடலில் நல்ல பாக்டீரியாக்களைத் தூண்டுவதற்கு உதவி புரியும். அதற்காக தயிர் மலச்சிக்கலைப் போக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள், போதுமான நீர் மற்றும் தயிர் ஆகியவற்றை தினமும் உட்கொள்ளும் போது, அது மலச்சிக்கலின் அபாயத்தைக் குறைக்கும்.

#6 தினமும் கட்டாயம் மலம் கழிக்க வேண்டும்

#6 தினமும் கட்டாயம் மலம் கழிக்க வேண்டும்

ஒவ்வொருவரும் வித்தியாசமான உடலமைப்பு மற்றும் உடல் செயல்பாட்டைக் கொண்டவர்கள். சிலர் ஒரு நாளைக்கு 3 முறை மலம் கழிக்கலாம். சிலர் வாரத்திற்கு 3 முறை மட்டுமே மலம் கழிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை மலம் கழிப்பது பொதுவானது. ஆனால் எப்போது ஒருவர் வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக மலம் கழிக்கிறாரோ, அவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதுவே வாரத்திற்கு ஒருமுறை என்றால் கடுமையான மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths About Constipation In Tamil

In this article, we shared some myths about constipation. Read on to know more...
Desktop Bottom Promotion