For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு தொடர்ந்து இருமல் & சளி இருக்கா? அப்ப இந்த ஒரு பொருள் கலந்த தண்ணீரை குடிச்சா போதுமாம்!

முலேத்தியின் பலன்களை பெற செய்ய முலேத்தி தேநீர் ஒரு சூடான மற்றும் சுவையான வழியாகும். நீங்கள் ஒரு நாளைக்கு 2-3 முறை முலேத்தி தேநீர் அருந்தலாம், அது உங்கள் இருமலைக் குறைக்கும்

|

இருமல் மற்றும் சளி ஆகியவை குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகளாகும். மேலும் நாம் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்படுகிறோம். ஆனால் தொடர்ந்து இருமல் இருப்பது சோர்வாகவும் தொந்தரவாகவும் இருக்கும். இது நம்மை அசெளகாரியமாக உணர வைக்கும். எனவே, தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? நம் பாட்டி மற்றும் அம்மா இருமலை நிறுத்த முலேத்தியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருப்பார்கள். ஆம், அதிமதுரம் என்றும் அழைக்கப்படும் முலேத்தி, இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றுக்கான பழைய வீட்டு வைத்தியம் மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நன்மைகளையும் கொண்டுள்ளது.

Mulethi is magical for treating cough and cold in tamil

முலேத்தி இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவ முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது ஒரு நபரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சளி மற்றும் இருமலுக்கு முலேத்தியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிமதுரத்தின் நன்மைகள்

அதிமதுரத்தின் நன்மைகள்

* செரிமானத்தை மேம்படுத்துகிறது

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

* மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

* நல்ல வாய் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது

* நினைவாற்றலை அதிகரிக்கிறது

* சருமத்திற்கு நல்லது

* பொடுகு மற்றும் முடி உதிர்தல் போன்ற முடி பிரச்சனைகளுக்கு உதவும்

எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்?

எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்?

அதிமதுரம் கசப்பாக இல்லாவிட்டாலும், இனிப்புச் சுவையுடன் இருந்தாலும், நேரடியாக மென்று சாப்பிடத் தொடங்குவது பலருக்குக் கடினமாக இருக்கும். இது ஒரு நீண்ட செயல்முறையாகும். ஏனெனில் நீங்கள் அதை சிறிது நேரம் மெல்ல வேண்டும். எனவே, நீங்கள் அதிமதுரம் எடுத்துக்கொள்வதை எளிதாக்கும் வேறு சில வழிகளைப் பற்றி இங்கே காணலாம்.

முலேத்தி தண்ணீர்

முலேத்தி தண்ணீர்

உங்களுக்கு தொண்டை புண் இருந்தால், உங்கள் தொண்டைக்கு சிறிது நிவாரணம் அளிக்க தினமும் காலையில் முலேத்தி தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளிக்கலாம். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி மூலப்பொடியைச் சேர்த்து, அதனுடன் வாய் கொப்பளிக்கவும். உங்களிடம் தூள் இல்லையென்றால், நீங்கள் சில அதிமதுர குச்சிகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை ஆறவைத்து, பின்னர் அதை அருந்தலாம்.

முலேத்தி தேநீர்

முலேத்தி தேநீர்

முலேத்தியின் பலன்களை பெற செய்ய முலேத்தி தேநீர் ஒரு சூடான மற்றும் சுவையான வழியாகும். நீங்கள் ஒரு நாளைக்கு 2-3 முறை முலேத்தி தேநீர் அருந்தலாம், அது உங்கள் இருமலைக் குறைக்கும். இதற்கு, நீங்கள் ஒரு கப் தண்ணீரில் சில நொறுக்கப்பட்ட முலேத்தி வேர்களை கொதிக்க வைக்க வேண்டும். அது கொதித்ததும், அதை வடிகட்டி சுவைக்கலாம் அல்லது சிறிது இஞ்சி, துளசி மற்றும் தேன் சேர்க்கலாம்.

முலேத்தி தூள்

முலேத்தி தூள்

நீங்கள் சில முலேத்தி குச்சிகளை மிக்ஸி ஜாரில் அரைத்து தூளாக சேமித்து வைக்கலாம். இது முலேத்தி தண்ணீர் அல்லது தேநீர் தயாரிப்பதை எளிதாக்கும். நீங்கள் சிறிது வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் முலேத்தி பொடியை சேர்த்து அருந்தலாம். இந்த முறைகளை முயற்சி செய்து, உங்கள் இருமல் மற்றும் தொண்டை வலியை போக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mulethi is magical for treating cough and cold in tamil

Here we are talking about the Mulethi is magical for treating cough and cold in tamil
Desktop Bottom Promotion