For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் வறட்சி அடையாமல் நாள்முழுவதும் ஆற்றலுடன் செயல்பட வேண்டுமா? அப்ப இத குடிங்க...

பொதுவாக கோடையில் அதிக தாகம் எடுக்கும். இந்த தாகத்தைத் தணிக்க மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டியது முக்கியம்.

|

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சூரியன் ஆரம்பத்திலேயே சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் வெயிலில் சுற்றும் போது, உடலில் உள்ள ஆற்றல் முழுவதும் உறிஞ்சுப்படுவதோடு, அதிக தாகமும் எடுக்கும். இந்த தாகத்தைத் தணிக்க நாம் தண்ணீரைக் குடிப்போம். பொதுவாக கோடையில் அதிக தாகம் எடுக்கும். இந்த தாகத்தைத் தணிக்க மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டியது முக்கியம்.

Most Hydrating Drinks Besides Water During Summer

அதுவும் கோடைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது என்பது மிகவும் முக்கியம். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதற்கு தண்ணீர் மட்டுமின்றி, ஒருசில ஆரோக்கியமான பானங்களும் உதவும். நம்மால் எப்போதும் வெறும் நீரை மட்டும் குடித்துக் கொண்டிருக்க முடியாது. நிச்சயம் ஒரு கட்டத்தில் தண்ணீர் குடிப்பது வெறுத்துவிடும். எனவே உடல் வறட்சி அடையாமல் நீரேற்றத்துடன் இருக்க ஒருசில சுவையான மற்றும் ஆரோக்கியமான பானங்களைக் குடிப்பது சிறந்த வழி. கீழே நீருக்கு சிறந்த மாற்றாக இருக்கும் சில ஆரோக்கிய பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை குடித்து உங்கள் உடலை கோடையில் நீரேற்றத்துடன் வைத்திருங்கள்.

MOST READ: எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது-ன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர் மிகவும் பிரபலமான மற்றும் பெரும்பாலானோர் விரும்பி பருகும் அற்புத பானம். அதற்கு ஒரு டம்ளர் நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அத்துடன் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் சி சத்தும் உடலுக்கு கிடைக்கும்.

பால்

பால்

இதை பெரும்பாலானோர் அறிந்திருக்கமாட்டீர்கள். ஆனால் பால் உண்மையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும், நீரிழப்பை எதிர்ப்பதற்கும் தண்ணீரை விட சிறந்தது. ஏனெனில் இதில் உடலில் திரவங்களைத் தக்க வைக்க உதவும் நல்ல தரமான கார்ப்ஸ், புரோட்டீன் மற்றும் சோடியம் போன்றவை உள்ளன. எனவே நீங்கள் பாலைப் பயன்படுத்தி பல்வேறு மில்க் ஷேக்குகள் மற்றும் ஸ்மூத்திகள் அல்லது தயிரைக் கொண் மோர் அல்லது லஸ்ஸியைத் தயாரித்துக் குடிக்கலாம்.

இளநீர்

இளநீர்

இது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும் சிறந்த பானம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இதில் கலோரிகள் குறைவு மற்றும் பொட்டாசியம் அதிகம் என்பதால், இது சாதாரண நீரை விட சிறந்த பானமாக கருதப்படுகிறது. மேலும் இது இயற்கையாகவே உடலுக்கு ஆற்றலை வழங்கும் என்பதால், இது எனர்ஜி பானங்களுக்கு சிறந்த மாற்று பானமும் கூட.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயில் 90% நீர்ச்சத்து உள்ளது மற்றும் இது காய்கறிகளிலேயே நீரேற்றமிக்க காயும் கூட. உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள பழச்சாறுகளை விட காய்கறி சாறுகள் சிறந்தவை. ஏனெனில் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை நீரேற்றத்தைத் தடுக்கும். அதோடு பழச்சாறுகள் சர்க்கரையின் செறிவான வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் நீங்கள் பழச்சாறுகளை விரும்பினால், ஆரஞ்சு சாறுகளை குடியுங்கள். ஏனெனில் இதில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ளது. பீட்ரூட் சாறு கூட நீரேற்றத்திற்கு சிறந்தது மற்றும் இது இயற்கையான இரத்த சுத்திகரிப்பு போல செயல்படுகிறது.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

செம்பருத்தி டீ, ரோஸ் டீ அல்லது சீமைச்சாமந்தி டீ போன்ற மூலிகை தேநீர் மிகவும் சிறந்த நீரேற்றும் பானங்கள். இவற்றில் காப்ஃபைன் எதுவும் இல்லை என்பதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மட்டுமின்றி, சோர்வடைந்த நரம்புகளை அமைதிப்படுத்தும் மற்றும் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

கற்றாழை நீர் அல்லது கற்றாழை ஜூஸ்

கற்றாழை நீர் அல்லது கற்றாழை ஜூஸ்

கற்றாழை சமீபத்தில் ஒரு சூப்பர்ஃபுட் அந்தஸ்தை பெற்றது. ஏனெனில் இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் நிரம்பியதோடு, சில சக்திவாய்ந்த மீளுருவாக்கம் பண்புகளையும் கொண்டுள்ளது. இது குடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுவதோடு, பொலிவான மற்றும் பளிச்சென்ற சருமத்தைப் பெறவும் செய்கிறது. அதற்கு சிறிது கற்றாழை ஜெல்லை நீரில் போட்டு கலந்து, வேண்டுமானால் சுவைக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

சியா நீர்

சியா நீர்

சியா விதைகளை சாப்பிட சிறந்த வழி, அதை நீரில் ஊற வைத்து குடிப்பது தான். சியா விதைகள் நீரில் அவற்றின் எடையை பத்து மடங்கு வரை அதிகரிக்கும் மற்றும் இந்த விதைகள் சில நிமிடங்களில் வீங்கி ஒரு நீரேற்ற பானமாக உருவாகிறது. மேலும் இந்த விதைகள் உடலை குளிர்ச்சி அடையச் செய்து, கோடையில் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதற்கு சியா விதைகளை நீரில் ஊற வைத்து, பால் அல்லது தேங்காய் பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லாவிட்டால், ஊற வைத்த சியா விதைகளை தேன் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் சேர்த்தும் குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Hydrating Drinks Besides Water During Summer

Here are some of the most hydrating drinks besides water that you must have to keep yourself energized and active through the day.
Story first published: Saturday, April 10, 2021, 14:13 [IST]
Desktop Bottom Promotion