For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! உங்களின் ஆயுளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கியமான நோய்கள் இதுதானாம்... உஷாரா இருங்க...!

|

ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான உணர்வுகளைக் கொண்டிருந்தாலும் அவர்களின் உடலமைப்புகள் என்பது முற்றிலும் வித்தியாசமானது. சில நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கும். பெண்களை மட்டும் பிரத்யேகமாக தாக்கும் சில நோய்களும் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நோய்கள் பெண்களை உடலளவில் வெகுவாக பாதிக்கும் சிலசமயம் அவர்களின் உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் பெண்களை அதிகம் தாக்கும் நோய்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்

இதய நோய்

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, மார்பக புற்றுநோய் பெண்கள் எதிர்கொள்ளும் சுகாதார ஆபத்தில் முதலிடத்தில் இல்லை. அனைத்து வகையான புற்றுநோய்களையும் விட இதய நோய் அதிகமான பெண்களைக் கொல்கிறது. அதிர்ஷ்டவசமாக, புகைபிடிக்காதது, இதய ஸ்மார்ட் உணவைப் பின்பற்றுவது மற்றும் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது போன்ற இதய நோய்களைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய வாழ்க்கை முறை மாற்றங்கள் நிறைய உள்ளன.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

உலகெங்கிலும் உள்ள பெண்களில் சுமார் 1 சதவிகித இறப்புகளுக்கு பொறுப்பான, மார்பக புற்றுநோய் என்பது ஒவ்வொரு பெண்ணையும் அச்சுறுத்தும் ஒரு தீவிரமான பிரச்சினையாகும். சமீபகாலமாக மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் பெண்களின் எண்ணிக்கை சற்று ஆறுதலான விஷயமாகும்.

PCOS

PCOS

இனப்பெருக்க வயதுடைய பெண்களில் 10 சதவிகிதத்தை பாதிக்கும் இந்த நிலை, அண்டவிடுப்பின் போது கருப்பையில் சிறிய நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இந்த நீர்க்கட்டிகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், நாளடைவில் இவை பக்க வலியை ஏற்படுத்துகின்றன அல்லது அவை தொற்று மற்றும் சிதைவாகி பெணகளின் கருப்பையை சேதப்படுத்தும், அதன் மூலம் பெண்களின் கருவுறுதலையும் பாதிக்கும். PCOS உள்ள பெண்கள் எடை அதிகரிப்பு, அசாதாரண பீரியட்ஸ், முகப்பரு மற்றும் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.

ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ்

இந்த நோய் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கக்கூடும் என்றாலும், இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது எலும்புகளின் வலிமை மற்றும் எதிர்காலத்தை பாதிக்கிறது, இது வாழ்க்கையின் பிற்பகுதியில் எலும்பு முறிவுகள் மற்றும் எலும்பு தேய்மானங்களுக்கும் வழிவகுக்கும். கால்சியம் அல்லது வைட்டமின் டி குறைவாக உள்ள உணவை உட்கொள்வது, புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் பயன்பாடு போன்றவை இதற்கு காரணமாக உள்ளது.

மனச்சோர்வு

மனச்சோர்வு

இந்த நோய் ஆண்களை விட 50 சதவிகிதம் அதிகமாக பெண்களை பாதிக்கிறது, பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்கள் உதாரணத்திற்கு கர்ப்பத்திற்கு பிந்தைய வளர்ச்சியை உருவாக்கும் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு அல்லது வாழ்க்கை முறை காரணிகள், குடும்ப பிரச்சினைகள், மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்றவை இதற்கு காரணமாக அமைகிறது.

அல்சைமர்

அல்சைமர்

அல்சைமர் என்னும் மூளைக்கோளாறு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. அல்சைமர் எளிமையான மறதி மற்றும் குழப்பத்துடன் தொடங்குகிறது என்றாலும், அது இறுதியில் மீளமுடியாத மனக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். வயதான பெண்களுக்கும் மட்டும்தான் அல்ஸைமர் நோய் வரும் என்று நினைத்தால் அது தவறாகும்.

சிறுநீரகக் கோளாறுகள்

சிறுநீரகக் கோளாறுகள்

சிறுநீரகங்கள் தங்கள் வேலையைச் செய்வதை நிறுத்தி, இரத்தத்தில் கழிவுகளை உருவாக்க அனுமதிக்கும் இந்த நோய், ஏராளமான பெண் இறப்புகளுக்கு காரணமாகிறது. சிறுநீரக நோயின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கக்கூடும், ஆனால் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பின் குடும்ப வரலாறு ஆகியவை முக்கியமான காரணங்களாகும்.

ஆட்டோ இம்யூன் நோய்கள்

ஆட்டோ இம்யூன் நோய்கள்

ஆட்டோ இம்யூன் நோய்கள் என்பது கோளாறுகளின் ஒரு குழுவாகும், இதில் நோயெதிர்ப்பு அமைப்பு உடலைத் தாக்கி திசுக்களை அழிக்கிறது அல்லது மாற்றுகிறது. லூபஸ், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் மற்றும் டைப் 1 நீரிழிவு உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கடுமையான நாட்பட்ட நோய்கள் இந்த பிரிவில் உள்ளன. 75% பெண்களுக்கு இந்த நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இரத்த சோகை

இரத்த சோகை

குடும்பம், வேலை மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு நாளும் சோர்வாக உணர்கிறார்கள். ஆனால் நாள் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? உங்கள் தோல் வெளிர் நிறத்தில் உள்ளதா? உங்களிடம் உடையக்கூடிய நகங்கள் இருக்கிறதா? நீங்கள் இரத்த சோகை மற்றும் உங்கள் இரத்தத்தில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாதிருக்க வாய்ப்புகள் உள்ளன. மாதவிடாயிலிருந்து இரத்த இழப்பு, கர்ப்ப காலத்தில் இரத்த வழங்கல் தேவை அதிகரித்தல், வைட்டமின்கள் குறைபாடு மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவான உணவுப் பழக்கம் காரணமாக இரத்த சோகை ஏற்படலாம்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

இந்திய பெண்களின் மரணத்திற்கு மார்பக புற்றுநோயை விட இந்த புற்றுநோயே முக்கிய காரணமாக அமைகிறது. இது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33,000 பெண்களைக் கொல்கிறது. பாலியல் தொடர்பு மூலம் பரவும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) என்ற வைரஸ் காரணமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதாக அறியப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Common Female Health Problems in Tamil

Here is the list of most common threats to every woman's health.