For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்னி வெயில் காலத்தில் மாம்பழத்தை ஏன் கட்டாயம் சாப்பிடணும் தெரியுமா?

கோடைக்காலத்தில் தானே மாம்பழ சீசன் வருகிறது. அந்தந்த சீசனில் அந்தந்த பழங்களை சாப்பிட வேண்டுமென்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.

|

ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலம் என்றால் அது கோடைக்காலம். அதிலும், அக்னி நட்சத்திரத்தில் சொல்லவே தேவையில்லை. காலை முதலே வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்து விடும். இது போன்ற காலங்களில் வீட்டிலேயே அடைந்திருப்பது நல்லது என்றாலும், பணி நிமித்தமாக வெளியே செல்பவர்கள் வெயிலை தவிர்க்க முடியாது அல்லவா? அப்படிப்பட்டவர்களுக்காக தான் இப்போது ஒரு இனிப்பான செய்தி கூற போகிறேன்.

Mango Can Help Protect Against Radiation Damage

இனிப்பு என்று இங்கே குறிப்பது மாம்பழத்தை பற்றி தான். உங்களுக்கு மாம்பழம் ரொம்ப பிடிக்குமா? கோடையில் சாப்பிட யோசிக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையை கட்டாயம் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

கோடைக்காலத்தில் தானே மாம்பழ சீசன் வருகிறது. அந்தந்த சீசனில் அந்தந்த பழங்களை சாப்பிட வேண்டுமென்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். மாம்பழத்தில், அதிகப்படியான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி6, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் என நீண்ட பட்டியலிடும் வகையில் சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், பல்வேறு ஆரோக்கிய கேடுகள் ஏற்படுவதையும் தடுத்திட முடியும். அதாவது, உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான ஆபத்தை இது குறைத்திடும். அதனால் தான் என்னவோ மாம்பழத்தை பழங்களின் ராஜா என்று அழைக்கிறோம்.

புறஊதாக் கதிர்களின் பாதிப்பு

புறஊதாக் கதிர்களின் பாதிப்பு

சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் பல்வேறு வகையான சரும பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் தான் வெயிலில் செல்வதற்கு முன்பு சன் ஸ்கிரீன் போட்டுக் கொண்டு செல்ல சொல்கிறார்கள். அந்த வகையில், சருமத்தை புறஊதாக்கதிர்களின் தாக்குதலில் இருந்து மாம்பழம் காக்கும் என்றால் அதை சாப்பிட கசக்குமா என்ன? யாருக்கு தான் மாம்பழம் பிடிக்காது? அதிலும் இப்படி ஒரு அட்டகாசமான பலன் இதிலுள்ளது என்றால் இன்னும் அதிகம் சாப்பிட தானே தோன்றும்.

வெயிலில் இருந்து பாதுகாக்கும் மாம்பழம்

வெயிலில் இருந்து பாதுகாக்கும் மாம்பழம்

சூரியனால் ஏற்படக்கூடும் பாதிப்பு என்பது புற ஊதா ஒளியால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தைக் குறிக்கிறது. சூரியனில் இருந்து வரும் புற ஊதா ஒளியானது கதிர்வீச்சை உருவாக்குகிறது. அதுவே புற ஊதா கதிர்வீச்சு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான மின்காந்த கதிர்வீச்சாகும். புற ஊதா கதிர்வீச்சின் தாக்கம் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கருமையான புள்ளிகள் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆய்வின் முடிவு

ஆய்வின் முடிவு

ஒரு ஆய்வின் முடிவில், மாம்பழங்களில் இயற்கையாகவே உருவாகும் ஆக்ஸிஜனேற்றிகள் புறஊதாக்கதிர்களால் சருமத்தில் ஏற்படக்கூடும் தாக்கத்தை குறைக்க உதவும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முடி இல்லாத எலிகளின் மீது யு.வி.பி-தூண்டப்பட்ட வயதான சருமத்திற்கு எதிராக மா சாற்றின் பாதுகாப்பு பங்கை மதிப்பிடுவதற்கான ஒரு நோக்கத்துடன் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் நன்கு பழுத்த மாம்பழங்கள் பயன்படுத்தப்பட்டன.

மாம்பழங்களில் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் இம்யூனோமோடூலேட்டரி பண்புகள் நிரம்பியுள்ளன. மேலும் ஆய்வானது, மாம்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சூரியனால் ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து பாதுகாப்பதை வெளிப்படுத்துகிறது. அதேபோல், பழத்தில் உள்ள வைட்டமின் சி, சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாப்பதன் மூலம் குறைக்க உதவுகிறது.

மாம்பழம் மட்டுமல்ல, மாம்பழத் தோலும் உதவும்

மாம்பழம் மட்டுமல்ல, மாம்பழத் தோலும் உதவும்

மற்றொரு ஆய்வு மாம்பழ தோலுக்கும், புற ஊதா கதிர்களுக்கும் இடையிலான தொடர்பை சுட்டிக்காட்டியது. மாம்பழ தோலானது மாங்கிஃபெரின், நோராதிரியோல், ரெஸ்வெராட்ரோல் மற்றும் குர்செடின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. இது புற ஊதா கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவதிலும், இளமையிலேயே வயதான தோற்றத்திற்கான அறிகுறிகள் ஏற்படாமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒவ்வாமை இல்லாதவர்களுக்கு ஏற்றது

ஒவ்வாமை இல்லாதவர்களுக்கு ஏற்றது

இருப்பினும், ஒவ்வாமை பண்புகளைக் கொண்ட கரிம சேர்மங்களின் எண்ணெய் கலவையான யூருஷியோல் இருப்பது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, ஒவ்வாமை இல்லாதவர்களுக்கு, சருமத்தை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்க மாம்பழ தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாம்பழங்களை எப்படி சாப்பிடுவது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், உணவில் மாம்பழ தோல்களை எப்படி சேர்ப்பது என்று சற்று குழப்பமாகவோ அல்லது புதியதாகவோ தோன்றலாம். உங்கள் உணவுகளில் மாம்பழ தோல்களை எப்படியெல்லாம் சேர்ப்பது என்பதற்கான சில வழிகள் இங்கே:

* ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம்

* மாம்பழ தோலை நறுக்கி பேக் செய்து அல்லது வறுத்து மாம்பழ சிப்ஸ்களாக செய்து சாப்பிடலாம்

* மாம்பழத் தோலை துருவி சாலடுகள், ஸ்மூத்தி மற்றும் பல உணவுகளில் சேர்க்கலாம்

* மாம்பழத் தோலில் ஊறுகாய் செய்யலாம்

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

மாம்பழங்கள் சன்ஸ்கிரீனாக பயன்படுத்த முடியாது என்றாலும், புற ஊதா சேதத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க மிகவும் உதவக்கூடும். மாம்பழத்திலிருந்து அனைத்து நன்மைகளைப் பெற வேண்டுமென்றால், குறிப்பிட்ட அளவுகளில் தவறாமல் உட்கொள்ளுங்கள். மாம்பழம் குறித்த ஆய்வுகளானது இன்னும் மனித சோதனைகளில் முயற்சிக்கப்படவில்லை.

இருப்பினும், தற்போது வரை நடத்தப்பட்ட ஆய்வு மிகவும் சாதகமான முடிவையே காட்டுகிறது. எனவே, இப்போது மாம்பழங்கள் நிறைய கிடைக்கும் என்பதால், தவறாமல் உணவில் சேர்த்துக் கொண்டு புறஊதாக் கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து கொள்ளுங்கள். மாம்பழத்தின் சுவை மட்டுமே இனிப்பல்ல, அதன் பலன்கள் கேட்பதற்கு இனிமையாக தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mango Can Help Protect Against Radiation Damage

Mangoes are rich in protein, fibres, vitamin C, vitamin A, folic acid, vitamin B-6, vitamin K and potassium. They are packed with antioxidant & immunomodulatory properties and the study links the antioxidant property of mango to that of protection from sun damage.
Desktop Bottom Promotion