ஆண்களே! விந்தணு குறைவாக இருந்தால், அது தீவிர நோயின் எச்சரிக்கை அறிகுறியாம்... உஷாரா இருங்க...

குறைவான விந்தணுக்களை ஒரு ஆண் கொண்டிருந்தால், அது உடலில் உள்ள தீவிர பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போது பல ஆண்களும் சந்திக்கும் ஓர் முக்கிய பிரச்சனை என்றால் அது குறைவான விந்தணுக்கள் தான். இந்த பிரச்சனையைக் குறித்து வெளியே பேசுவதற்கு பல ஆண்கள் தயக்கம் கொள்வதுண்டு. ஆனால் குறைவான விந்தணுக்களை ஒரு ஆண் கொண்டிருந்தால், அது உடலில் உள்ள தீவிர பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Low Sperm Count Indicates Presence of Serious Illness

சமீபத்திய ஆய்வுகளின் படி, குறைவான விந்தணுக்களைக் கொண்ட ஆண்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகள் இருப்பதற்கான அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்தது. குறைவான விந்தணுக்களைக் கொண்ட 5,000-த்திற்கும் அதிகமான ஆண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில், 20% பேருக்கு உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பது தெரிய வந்தது. அவர்களுள் பெரும்பாலானோர் குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்டிருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைவான விந்தணுக்கள் உருவாக்கும் அபாயங்கள்

குறைவான விந்தணுக்கள் உருவாக்கும் அபாயங்கள்

வழிகாட்டுதல்களின் படி, குறைவான விந்தணுக்களைக் கொண்ட ஆண்கள் மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான சோதனைகளையும் அவசியம் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். பொதுவாக கருத்தரிக்க முடியாமல் அவதிப்படும் தம்பதியர்களுள் பலருக்கு குறைவான விந்தணு மற்றும் மோசமான விந்தணுக்களின் தரம் ஆகியவை காரணங்களாக உள்ளது.

குறைவான விந்தணுக்களைக் கொண்ட ஆண்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறிகள் மற்றும் உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட ஆபத்துக் காரணிகள் இருந்தது. இந்த ஆபத்துக் காரணிகள் பக்கவாதம், இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை.

தீவிர நோயின் அறிகுறி

தீவிர நோயின் அறிகுறி

ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை பாலியல் அல்லது இனப்பெருக்க ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பவை அல்ல. குறைவான விந்தணுக்களின் எண்ணிக்கையானது இதயம், சர்க்கரை நோய், இனப்பெருக்க புற்றுநோய்கள் போன்ற பல நோய்கள் இருப்பதற்கான அறிகுறியும் கூட. இத்தகைய பிரச்சனையைக் கொண்டவர்கள் இளமையிலேயே இறக்கக்கூடும்.

விந்தணு சோதனை மிகவும் அவசியம்

விந்தணு சோதனை மிகவும் அவசியம்

எனவே எப்படி இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது கொழுப்பு ஆகிய பரிசோதனைகளை சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டுமோ, அதேப்போல் ஆண்கள் அவ்வப்போது தங்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை வழக்கமான முறையில் சோதிக்க வேண்டியது அவசியம்.

குறைவான விந்தணு வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும்

குறைவான விந்தணு வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும்

டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருக்கும் ஆண்கள் சதையின்றி ஒல்லியாவதோடு, எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புகள் மற்றும் மூட்டுகள் பலவீனமடைந்து எளிதில் உடையக்கூடிய நோயாலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் மலட்டுத்தன்மை உள்ள ஆண்கள் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே கருவுறுதல் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அவ்வப்போது மதிப்பீடு செய்வது, ஆண்களை பல நோய்களில் இருந்து தடுக்க உதவுகிறது.

ஒலிகோஸ்பெர்மியா

ஒலிகோஸ்பெர்மியா

பொதுவாக ஒரு ஆணின் சாதாரண விந்து எண்ணிக்கை ஒரு மில்லி மீட்டர் விந்துவில் 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். குறைவான விந்து எண்ணிக்கை ஒலிகோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்களில் கருவுறாமைக்கு பொதுவான காரணமாகும். எப்போது ஒரு ஆணிக் விந்துவில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை விட குறைவான விந்தணுக்கள் இருக்கிறதோ, அதுவே ஒலிகோஸ்பெர்மியா ஆகும்.

ஆண் கருவுறாமைக்கான காரணிகள்

ஆண் கருவுறாமைக்கான காரணிகள்

ஆண் கருவுறாமை பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். அதில் மன அழுத்தம், ஆல்கஹால், போதைப் பழக்கம், டெஸ்டிகல்ஸ் மற்றும் வெரிகோசெல்லின் முந்தைய அறுவை சிகிச்சைகள், உடல் பருமன், நீரிழிவு போன்றவை குறிப்பிடத்தக்கவை. சாதாரண விந்தணுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, குறைவான விந்தணுக்களை கொண்ட ஆண்களுக்கு பி.எம்.ஐ, இடுப்பு சுற்றளவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோபீனியா ஆகியவை ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, June 29, 2021, 13:35 [IST]
Desktop Bottom Promotion