Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
உடலில் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அது ஒருசில பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் வெளிப்படும் சில முக்கிய மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
Low Immunity Symptoms: கோவிட்-19 பெருந்தொற்று உலகளவில் பில்லியன் கணக்கான மக்களை பாதித்ததோடு, பல உயிர்களையும் காவு வாங்கியது. ஆனால் இந்த வைரஸ் தொற்றிற்கு பின் மக்களிடையே நல்ல பழக்கங்களை மேற்கொள்ளும் வழக்கம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக இதுவரை ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டாத பலரும், தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏனெனில் கொரோனா வைரஸ் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டோரை எளிதில் தாக்கியதோடு, அவர்களின் உயிரையும் பறித்தது. இன்னும் கொரோனா வைரஸ் முற்றிலும் அழியவில்லை.

இந்நிலையில் நிறைய பேருக்கு தங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக உள்ளதா அல்லது பலவீனமாக உள்ளதா என்பது தெரியவில்லை. உங்களுக்கும் உங்களின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளதா என்பது தெரியவில்லையா? ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அது ஒருசில பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் வெளிப்படும் சில முக்கிய மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம். அந்த அறிகுறிகள் உங்களிடம் தெரிந்தால், உடனே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.

தொடர்ச்சியான உடல் சோர்வு
உங்களுக்கு எந்நேரமும் உடல் சோர்வுடன் இருப்பதை உணர்கிறீர்களா? தினசரி வேலைகளைக் கூட செய்ய முடியாமல் அவதிப்படுகிறீர்களா? எவ்வளவு தான் நல்ல தூக்கத்தை மேற்கொண்டாலும், உடல் சோர்வை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முயல வேண்டும்.

சளி, இருமல்
ஒரு வருடத்தில் 2-3 முறை சளி பிடிப்பது என்பது சாதாரணம். மேலும் சளி பிடித்தால், அதிலிருந்து விடுபட ஒரு வாரம் முதல் 10 நாட்கள் ஆகும். ஆனால் அடிக்கடி தொடர்ச்சியாக சளி பிடித்தால், அதுவும் குணமாகி 10 நாட்களுக்கு மேலானால், உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சரியாக வேலை செய்வதில்லை என்று அர்த்தம். இந்நிலையில் உஷாராகிக் கொள்ளுங்கள்.

அடிக்கடி வயிற்று வலி
ஒருவர் மலச்சிக்கல், வாயு தொல்லை அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் அடிக்கடி சிரமப்பட்டால், அவரது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம். நோயெதிர்ப்பு மண்டலத்தின் பெரும்பகுதி அதாவது 70%, வயிற்றுப்பகுதியில் தான் உள்ளது. எனவே நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டுமானால், வயிற்றுப் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.

அதிகப்படியான மன அழுத்தம்
அதிகளவிலான மன அழுத்தம் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியுடன் தொடர்பு கொண்டுள்ளது. நீண்ட நேரம் ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது, அது உடலை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் லிம்போசைட்டுகளை பாதிக்கும். எனவே லிம்போசைட்டுகள் பாதிக்கப்படும் போது, உடலில் நோய்த்தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கும்.

காயங்கள் அல்லது வாய்ப்புண் குணமாவதில் தாமதம்
உடலில் காயங்கள்/புண்கள் ஏற்பட்டால், அதை சரிசெய்ய உடல் ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும். புண்கள்/காயங்களை சரிசெய்வதில் நோயெதிர்ப்பு மண்டலம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், காயங்கள்/புண்கள் குணமாக நிறைய நாட்கள் எடுத்துக் கொள்ளும். இதைக் கொண்டு நோயெதிர்ப்பு சக்தியின் திறனை தெரிந்து கொள்ளலாம்.

திடீர் காய்ச்சல்
நமது உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஒரு முக்கியமான பணியை நோயெதிர்ப்பு மண்டலம் செய்கிறது. ஆனால் எப்போது ஒருவருக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறதோ, அவரது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே கவனம் செலுத்த வேண்டும்.

தசை மற்றும் மூட்டு வலி
பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி தசை மற்றும் மூட்டு வலிகளுக்கு வழிவகுக்கும். நமது நோயெதிர்ப்பு மண்டலமானது ஒரு அழற்சி எதிர்ப்பு கெமிக்கலை உற்பத்தி செய்தும், இரத்த வெள்ளையணுக்களின் மூலமும், உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. ஆனால் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக அல்லது பலவீனமாக இருக்கும் போது, இரத்த வெள்ளையணுக்கள் அழிக்கப்பட்டு, தசை மற்றும் மூட்டு வலியை உண்டாக்கும். இதைக் கொண்டும் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியின் திறனை அறியலாம்.



Click it and Unblock the Notifications