Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
ஒரு தட்டு நிறைய பிரியாணி சாப்பிடும் நபரா நீங்க? அப்போ இது உங்களுக்கானது தான்...
இந்தியாவில் தற்போது இது ஒரு புகழ்பெற்ற உணவாக மாறி வருகிறது. பிரியாணி என்ற சொல் பாரசீக மொழியிலிருந்து உருவானது என்றும் இதை " சமைப்பதற்கு முன் வறுத்தது" என்ற பொருளையும் வழங்குவதாக கூறுகின்றனர்.
பிரியாணி என்றதும் வாயைப் பிளக்காதவர் என்று எவரும் கிடையாது. அந்தளவுக்கு பிரியாணி என்பது மிகவும் பிடித்தமான உணவும் கூட. இந்த பிரியாணியில் ஏகப்பட்ட வெரைட்டீஸ் இருக்குதாம். உலகளவில் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இருக்கிறது என்கிறார்கள் அதன் ரசிகர்கள்.

அதிலும் நம் இந்தியாவில் தற்போது இது ஒரு புகழ்பெற்ற உணவாக மாறி வருகிறது. பிரியாணி என்ற சொல் பாரசீக மொழியிலிருந்து உருவானது என்றும் இதை " சமைப்பதற்கு முன் வறுத்தது" என்ற பொருளையும் வழங்குவதாக கூறுகின்றனர். ஏகப்பட்ட காரசாரமான மசாலா கலவையுடன் தட்டு நிறைய சுடச்சுட சாதத்துடன் நடுவில் சிக்கன் பீஸ் வைத்து சாப்பிடுவதும் ஒரு அலாதி தான்.

ஊட்டச்சத்துள்ள உணவு
சுவையில் மட்டுமில்லைங்க ஊட்டச்சத்துக்களிலும் நம் பிரியாணியை யாராலும் அடிச்சிக்க முடியாது. அதனால் தான் ஷாஜகானின் மனைவி கூட ஊட்டச்சத்து குறைபாடுள்ள தன் முகலாய வீரர்களுக்கு பிரியாணி வழங்குவதை பரிந்துரைத்துள்ளாராம். இந்த பிரியாணி ஒன்னு தாங்க எல்லா சந்தர்ப்பங்களிலும், பண்டிகை காலத்திலும், சமூகக் கூட்டங்களிலும் நம் முன்னோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவாக இன்றளவும் திகழ்கிறது.

சைடு டிஷ்
பிரியாணி ஒரு சரிவிகித உணவு இதனுடன் தொட்டுக் கொள்ள கத்தரிக்காய் கிரேவி, ரெய்தா, இறைச்சி என்று எல்லா வகை ஊட்டச்சத்துகளும் உள்ளடங்கியுள்ளன. இது ஒரு மசாலா உணவு என்பதால் எளிமையாக சமைக்கப்பட்டு எல்லாக் காலங்களிலும் பரிமாறப்படுகிறது. பிரியாணி சாப்பிட்ட கையோட நீங்கள் இனிப்பையும் எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஒரு முழுமையான விருந்தாக அமையும்.
சரி வாங்க அப்படிப்பட்ட இந்த பிரியாணியில் அப்படி என்னதான் இருக்கிறது, வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து அளவுகள்
* அரிசி - 75 கிராம்
* இறைச்சி - 50 கிராம்
* நெய் - 10 கிராம்
* வெஜிடபுள் (வெங்காயம், தக்காளி) - 40 கிராம்
* மூலிகை
* தயிர் - 25 கிராம்
* உப்பு, காரம் மற்றும் ப்ளேவரிங் பொருட்கள்
இதன் ஊட்டச்சத்துக்களின் அளவு பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவை பொருத்து மாறுபடும்.

நன்மைகள்
பிரியாணி மிகவும் எளிமையாக மற்றும் விரைவாக சமைக்கக் கூடிய உணவாகும். உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
இதில் கலந்துள்ள நம் நாட்டு மசாலா பொருட்களைக் கண்டு மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூட ஈர்த்துள்ளனர். இதில் புளி, பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்துவது அழற்சி எதிர்ப்பு தன்மை, புற்றுநோய் எதிர்ப்பு தன்மை, இரத்த சர்க்கரை குறைவு மற்றும் இதர நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
பிரியாணியில் சமநிலையிலான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட்கள், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

வெஜிடேபிள் பிரியாணி
வெஜிடேபிள் பிரியாணியில் போதுமான அளவு காய்கறிகளை பயன்படுத்தும் போது, அதில் அடங்கியுள்ள நார்ச்சத்துகள் குடல் இயக்கத்திற்கும், எடை பராமரிப்புக்கும் பயன்படுகிறது.
காய்கறிகள் மூலம் தயாரிக்கும் பிரியாணி உடலுக்கு தேவையான வைட்டமின் பி12 ஊட்டச்சத்தை வழங்குகிறது. காய்கறிகளைச் சாப்பிடுபவர்கள் ஆல்கஹாலை தவிர்ப்பவர்களாக இருக்கின்றனர்.
பிரியாணி உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதில் கொழுப்புச் சத்து இருப்பதால் உங்களுக்கு முழுமையையும் திருப்தியையும் தருகிறது. பிரியாணி சாப்பிட்ட பிறகு தேவையில்லாமல் நொறுக்குவதையும் விடுவீர்கள்.

தீமைகள்
#1
நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ் க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு, உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எக்குத்தப்பாக அளவே இல்லாமல் தட்டு நிறையா பிரியாணி சாப்பிடும் போது, உங்கள் புரோட்டீன் அளவு குறைய வாய்ப்புள்ளது.

#2
பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்கள் இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

#3
உணவகங்களில் தயாரிக்கப்படும் வெஜிடேபிள் பிரியாணியில் உருளைக்கிழங்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் கார்ப் அளவை அதிகப்படுத்தி, உடல் எடையை அதிகரிக்கும்.

#4
அதிகளவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் குடலில் அல்சர், ஜாதிக்காய் நச்சுத்தன்மை, கல்லீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications