Just In
- 5 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 17 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 19 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Sports
ஒரு இன்னிங்சில் ஆடினால் போதுமா.. பொறுப்பின்றி விக்கெட்டை இழக்கும் மூத்த வீரர்.. கோபத்தில் பிசிசிஐ!
- Movies
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- News
கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நேபாள மக்கள் தொப்பை வராமல் இருக்க இத தான் சாப்பிடுறாங்க.. தெரியுமா?
உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் ஆயுர்வேதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. சிறப்பான வழியில் நோய்களை குணப்படுத்தக்கூடிய பல்லாயிரக்கணக்கான மூலிகைகள் ஆயுர்வேதத்தில் பொதிந்து உள்ளன. அவற்றுள் ஒரு முக்கிய மூலிகை கடுகுரோகிணி. இதற்கு முன்னர் இந்த மூலிகையைப் பற்றி பலரும் கேள்விப்பட வாய்ப்பில்லை. அதனால் எண்ணிலடங்கா சிறப்புகளை பெற்ற இந்த மூலிகை பற்றி இந்த பதிவில் நாம் இப்போது காணலாம்.
இமாலய மலைகளில் காணப்படும் ஒரு மூலிகையான கடுகுரோகிணி, உங்கள் உடல்நலம் மற்றும் செயல்பாட்டை பாதிக்கும் பல நோய்களிலிருந்து உங்கள் உடலை பாதுகாக்கக்கூடிய அரிய மூலிகைகளில் ஒன்றாகும். கசப்பு சுவையைக் கொண்டிருக்கும் இந்த மூலிகையை உங்கள் உணவு அட்டவணையில் இணைத்துக் கொள்வதால், உங்கள் உடலுக்கு மிகப்பெரிய நன்மைகள் உண்டாகும்.

எடை மேலாண்மை
உடல் பருமன் அல்லது எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்சனைகள் உலகளாவிய ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. உங்களுக்கு அதிக உடல் எடை இருந்தால் கடுகுரோகிணி உட்கொண்டு வருவதால் உங்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். இந்த மூலிகையில் இருந்து எடுக்கப்படும் சாறு செரிமானத்திற்கு உதவி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலின் தேவையற்ற கொழுப்புகள் விலகி எடை அதிகரிப்பைத் தடுக்கின்றது.

சுவாசப் பிரச்சனையைப் போக்கும்
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான மாசுபடுத்திகள் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் உண்டாகிறது. இதன் காரணமாக சுவாச கோளாறுகள் உடலை பாதிக்கின்றன. குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு மாசு, மிகுந்த மோசமான பாதிப்பை உண்டாக்குகிறது. நுரையீரல் பாதிக்கப்படாமல் இருக்க சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். கடுகுரோகிணியில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், மூக்கடைப்பு ஏற்படுவது குறைகிறது, சுவாசப் பாதையில் உள்ள அடைப்பு திறக்கப்பட்டு மாசுபடுத்திகளை வெளியேற்றுகிறது. ஆஸ்துமா நோயாளிகளைப் பொறுத்தவரை, இது அவர்களின் உடலில் நிலைமையை மோசமாக்கும் ஹிஸ்டமைனைக் கட்டுப்படுத்துவதால் இது மிகவும் நன்மை பயக்கும்.

உடல் வெப்பநிலையை நிர்வகிக்கிறது
பொதுவாக நமக்கு காய்ச்சல் வந்தால் உடனே ஒரு மாத்திரையை விழுங்குவது நம்முடைய பழக்கம். ஆனால் இந்த மாத்திரைகள் உடலுக்கு நல்லதல்ல. மாத்திரைக்கு மாற்றாக கடுகுரோகிணி உட்கொள்வதால் உங்கள் உடல் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையின் அற்புதமான ஆன்டிபிரைடிக் என்னும் வெப்பத்தைத் தணிக்கும் பண்புகள் உடல் வெப்பநிலையில் திடீர் மாற்றங்களை அகற்றி அழற்சியை எதிர்த்துப் போராடுகின்றன. மிதமான காய்ச்சல் இருக்கும் நாட்களில் கடுகுரோகிணி பொடியை உட்கொள்வதால் விரைந்த பலன் கிடைக்கும். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மூலிகை உதவுகிறது.

காயத்தை குணமாக்குகிறது
ஒரு காயம் அல்லது புண் மீது மஞ்சள் தடவுவதால் விரைவில் குணமாகும் என்பதை நாம் அறிவோம். கடுகுரோகிணியில் காயங்களை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடண்ட் பண்பு இருப்பதால் மஞ்சளைப் போல் இந்த மூலிகையும் காயங்களை உடனடியாக குணமாக்குகிறது. சில ஆய்வுகள் இந்த மூலிகை விட்டிலிகோ மற்றும் சொரியாசிஸ் போன்ற பாதிப்புகளைக் கூட திறம்பட போக்குகிறது என்று கூறுகின்றன.

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
இமய மலை மூலிகையை உட்கொள்வது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சமநிலைப்படுத்துவதன் மூலம் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும். கடுகுரோகிணியில் ‘குட்கின்' அல்லது ‘பிக்ரோலிவ்' என்சைம் உள்ளது, இது கல்லீரல் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது மற்றும் பித்த கோளாறுகள் போன்ற சிக்கல்களைத் தடுக்கிறது. மேலும் இது கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க அவற்றை சுத்தப்படுத்துகிறது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் கிருமித் தாக்குதலைத் தடுக்கிறது.