இந்தியாவில் புதிதாக அனுமதி பெற்றுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் கோவிட் தடுப்பூசி பற்றிய சில முக்கியமான விஷயங்கள்!

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் கூற்றுப்படி, ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதலை (EUA) பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி உலகெங்கிலும் முழு வீச்சில் நடந்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இருப்பினும் பெருகி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாடு வழக்குகளால், அனைவருமே அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் கொண்டால், அது தொற்றுநோய்க்கான ஆபத்தை இன்னும் அதிகரிக்கும்.

Johnson & Johnsons Single Shot COVID Vaccine Approved In India: Things You Need To Know

இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை ஒரு பெரிய கவலையாக உள்ளதால், பல சர்வதேச தடுப்பூசிகள் இந்தியாவில் சமீப காலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் கூற்றுப்படி, ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதலை (EUA) பெற்றுள்ளது.

மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் இவர், "இந்தியா தனது தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துகிறது. அதற்காக ஜான்சன் அண்ட் ஜான்சனின் டோஸ் கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதலை (EUA) அளித்துள்ளது. இப்போது இந்தியாவில் 5 EUA தடுப்பூசிகள் உள்ளன. இது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு நமது இந்திய நாட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்" கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியாவில் வந்துள்ள 5 ஆவது தடுப்பூசி

இந்தியாவில் வந்துள்ள 5 ஆவது தடுப்பூசி

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசி தவிர, இந்தியாவில் ஏற்கனவே நான்கு தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசிகளாவன ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி மற்றும் அமெரிக்காவின் மாடர்னா ஆகியவை ஆகும்.

அறிக்கைகளின் படி, இந்தியாவில் தற்போது 50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. எவ்வளவு தடுப்பூசிகள் இருந்தாலும், பற்றாக்குறை அல்லது தடுப்பூசி தயக்கம் காரணமாக இன்னும் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

மற்ற தடுப்பூசிகளுடன் இது எவ்வாறு வேறுபட்டது?

மற்ற தடுப்பூசிகளுடன் இது எவ்வாறு வேறுபட்டது?

இப்போதைக்கு, ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசி மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசியாக உள்ளது. அதனால் இது கொரோனாவை எதிர்க்க சற்று உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மற்ற கோவிட் தடுப்பூசிகளைப் போல் இல்லாமல், ஒரு டோஸ் தடுப்பூசியாக இருப்பதால், இது மற்ற தடுப்பூசிகளில் இருந்து மிகவும் சிறப்பானது மற்றும் வித்தியாசமானது.

முந்தைய மருத்துவ பரிசோதனைகளில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசி பெரும்பாலான மக்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது கண்டறியப்பட்டது. ஆகவே தான் இது ஒரு டோஸ் தடுப்பூசியாக மாறியது. மேலும் ஒப்பீட்டளவில் அமெரிக்க தயாரித்த தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் ஒரு டோஸுக்குப் பிறகு குறைவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது. அதனால்தான் அவற்றின் இரண்டாவது டோஸ் அவசியமானது.

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசி எவ்வாறு உருவாக்கப்பட்டது?

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசி எவ்வாறு உருவாக்கப்பட்டது?

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசி ஒரு வைரல் வெக்டர் தடுப்பூசி. வைரல் வெக்டர் தடுப்பூசிகளானது கொடிய நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க மற்றொரு வைரஸைப் பயன்படுத்துகின்றன. கொரோனா வைரஸைப் பொறுத்தவரை, ஜே & ஜே குழு அடினோவைரஸ் என்ற ஒரு வகை ஜலதோஷ வைரஸைக் கொண்டு தயாரித்தது. இந்த தடுப்பூசியை ஒருவரது கையில் செலுத்தும் போது, அதில் உள்ள அடினோவைர​​ஸ் SARs-COV-2 ஸ்பைக் புரதத்தை உருவாக்கத் தேவையான மரபணு வழிமுறைகளைப் படிக்கும் செல்களுடன் தன்னை இணைக்கிறது. ஸ்பைக் புரதத்தின் உற்பத்தியைத் தொடர்ந்து, நோயெதிர்ப்பு அமைப்பு இந்த ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டறிந்து ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள்

ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள்

ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளானது மெசஞ்சர் ஆர்என்ஏ (எம்ஆர்என்ஏ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. கொடிய நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான செல்களை செயல்படுத்துவதன் மூலம் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தூண்டுகின்றன. கொரோனா வைரஸைப் பொறுத்தவரை, இந்த வகை தடுப்பூசி உடலில் உள்ள செல்களுக்கு ஒரு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஒரு புரதம் அல்லது கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியை உருவாக்குமாறு அறிவுறுத்துகிறது. இது கொடிய SARS-COV-2 வைரஸை எதிர்த்துப் போராடத் தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசி பயனுள்ளதா?

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசி பயனுள்ளதா?

ஜான்சன் & ஜான்சனின் கோவிட் தடுப்பூசி கிளையான ஜான்சன் பார்மசூட்டிகல்ஸ், கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 40,000 க்கும் அதிகமான மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை ஆராய்ந்தது மற்றும் இந்த தடுப்பூசி லேசான முதல் மிதமான மற்றும் கடுமையான கோவிட் -19 நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கும் என்ற முடிவுக்கு வந்தது. அதுவும் இந்த தடுப்பூசி SARS-COV-2 வைரஸின் அனைத்து வடிவங்களையும் தடுப்பதில் 72% பயனுள்ளதாகவும், நோயின் தீவிர நிகழ்வுகளைத் தடுப்பதில் 86% பயனுள்ளதாகவும் இருந்தது.

அதோடு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றவர்கள் இன்னும் தொற்றுநோயை சமாளிக்க முடியும் என்றாலும், அவர்களுக்கு கடுமையான தொற்றுநோயை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் குறையும்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும்?

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும்?

கோவிட் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், தடுப்பூசிகள் நம்மை எவ்வளவு காலம் பாதுகாக்கும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் முந்தைய மருத்துவ பரிசோதனைகள் தடுப்பூசியின் ஒரு டோஸ் பெரும்பாலான மக்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியது என்று பரிந்துரைத்துள்ளன. தடுப்பூசி செலுத்த 71 நாட்களுக்குப் பிறகும், ஆன்டிபாடி நில நிலையாகவும், அதிகரித்தும் உள்ளன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசி தற்போது வரை பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் ஒரு பூஸ்டர் ஷாட் தேவைப்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion