For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா? தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...!

நாம் சாப்பிடும் உணவுகள் எப்படி நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறதோ அப்படி சில பொருட்கள் நம் கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும்.

|

மனித உடலில் இருக்கும் பல முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல் ஆகும். கல்லீரல் பாதிப்பு உங்களின் ஆயுளை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக மது அருந்துவதுதான் கல்லீரல் பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் சாப்பிடும் சில உணவுப்பொருட்களும் நம்முடைய கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

Is Pineapple Good For Your Liver

நாம் சாப்பிடும் உணவுகள் எப்படி நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறதோ அதேபோல சில பொருட்கள் நம் கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும். நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியப்பங்கை வகிப்பது அன்னாசி பழமாகும். அன்னாசி பழத்திற்கும், கல்லீரலுக்கும் இருக்கும் தொடர்பு என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல்

கல்லீரல்

மனித உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல் ஆகும். உங்கள் கல்லீரல் நீங்கள் உட்கொள்ளும் அனைத்து உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை செயல்பட வைப்பதுடன் மற்றும் நச்சுகளாக செயல்படக்கூடிய பொருட்களை வடிகட்டுகிறது. கல்லீரலுக்கு சேதம் விளைவிக்கும் உணவுகளை நீங்கள் நிராகரிப்பது மிகவும் முக்கியம் மேலும் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுவதுடன் முடிந்தளவு தண்ணீர் குடிப்பது நல்லதாகும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடுவது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அன்னாசிப்பழம் என்பது வெப்பமண்டல பழமாகும், இது பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. அன்னாசி பழத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

MOST READ: இந்திய பெண்கள் வளையல் அணிவதற்கு பின்னால் இருக்கும் அதிசயமான காரணங்கள் என்ன தெரியுமா?

அன்னாசி பழம்

அன்னாசி பழம்

அன்னாசி பழத்தில் உங்கள் கல்லீரலுக்கு நன்மை வழங்கும் பல பொருட்கள் உள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் அதிகரிக்க உதவுகிறது. இது ப்ரோமலின் என்ற சேர்மத்தின் இருப்பு கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது மனித உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும் நொதியாகும். இது செரிமான செயல்முறைக்கு உதவுகிறது மற்றும் கல்லீரலை நச்சுகள் இல்லாமல் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தின் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கல்லீரலில் இருக்கும் கொழுப்பு

கல்லீரலில் இருக்கும் கொழுப்பு

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் கொழுப்பு கல்லீரல் என்னும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதுடன் அதிக நார்ச்சத்து இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். நார்ச்சத்துக்கள் உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், அன்னாசி பழச்சாறில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கல்லீரலில் கொழுப்பு இருப்பவர்கள் தினமும் இரண்டு முறை அன்னாசி பழச்சாறு குடிப்பது கல்லீரல் கொழுப்பை வெளியேற்றும்.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

எந்தவொரு பொருளையும் அளவிற்கதிகமாக சாப்பிடுவது ஆபத்தைத்தான் ஏற்படுத்தும், அதற்கு அன்னாசி பழமும் விதிவிலக்கல்ல. இந்த வெப்பமண்டல பழத்தை சாறு அல்லது பழ வடிவில் உட்கொள்வது உங்கள் கல்லீரலின் செயல்பாட்டையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இருப்பினும், அன்னாசிப்பழத்தின் அதிகப்படியான நுகர்வு சில சூழ்நிலைகளில் தீங்கு விளைவிக்கும். இதில் இருக்கும் மாங்கனீசு உடலில் அதிகரிக்கும்போது அது நச்சுப்பொருளாக மாற அதிக வாய்ப்புள்ளது. மேலும் அதிகளவு அன்னாசி நுகர்வு நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும்.

MOST READ: உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா?

எச்சரிக்கைகள்

எச்சரிக்கைகள்

நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் மாங்கனீசின் அளவை குறித்துக்கொள்ளுங்கள், ஏனெனில் நச்சுப்பொருட்களை வெளியேற்ற நீங்கள் சாப்பிடும் அன்னாசி பழம் உங்கள் உடலில் மேலும் நச்சுப்பொருட்களை அதிகரித்து விடக்கூடாது. முடிந்தளவு அன்னாசி பழச்சாறை வீட்டிலேயே தயாரித்து குடிப்பது நல்லது. அன்னாசி பிளேவர்களில் இருக்கும் செயற்கை குளிர்பானங்களை ஒருபோதும் குடித்து விடாதீர்கள். அன்னாசி பழத்தை பலமாக அல்லது சாறாக குடிப்பதுதான் அதிக பயன்களை வழங்கும், மாறாக சூடுபண்ணி சாப்பிடுவது அதிலிருக்கும் ப்ரோமோலினை சிதைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Pineapple Good For Your Liver?

Read to know is pineapple good for your liver or not.
Story first published: Friday, September 20, 2019, 11:00 [IST]
Desktop Bottom Promotion