For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாடி பில்டிங்கில் இவ்வளவு பிரச்சனையா?

பாடி பில்டிங் என்பது ஒரு காட்சி விளையாட்டு. பாடி பில்டிங்கில் தீவிரமாக, மேற்பார்வையின்றி ஈடுபடும் பொழுது எண்ணிலடங்கா பிரச்சனைகள் ஒருவருக்கு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

|

தற்பொழுது உள்ள இளைஞர்களிடம் உடற்பயற்சி கூடத்திற்கு சென்று உடலை கட்டுமஸ்தாக வைத்து கொள்வதில் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. இளைஞர்கள் மட்டுமில்லை, முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கூட இப்பொழுது உடற்பயற்சி கூடத்திற்கு சென்று உடற்பயற்சி செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

Is bodybuilding healthy?

சொல்லப்போனால், இவ்வாறு செல்வது தற்பொழுது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஏன், நீங்கள் கூட ஒரு முறை உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று இருக்கலாம். சாதாரணமாக உடற்பயற்சி செய்வதற்கும் உடலமைப்பை பெருக்குவதற்கும் (பாடி பில்டிங்) நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

பாடி பில்டிங் என்பது ஒரு காட்சி விளையாட்டு. பாடி பில்டிங்கில் தீவிரமாக, எந்தவொரு கண்காணிப்பு அல்லது மேற்பார்வையின்றி ஈடுபடும் பொழுது எண்ணிலடங்கா பிரச்சனைகள் ஒருவருக்கு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாடி பில்டிங்கால் வரும் நன்மைகள்

பாடி பில்டிங்கால் வரும் நன்மைகள்

பாடி பில்டிங்கில் உள்ள பாதகங்களைப் பற்றி அலசுவதற்கு முன்பு, அதில் உள்ள முக்கிய நன்மைகளைப் பற்றி பார்த்துவிடுவோம். பாடி பில்டிங் செய்வதால் நம் தசைகள் அடர்த்தியாகி கடினமாகிறது. லைப் ஸ்ட்ராங் என்ற அமெரிக்க தன்னார்வு நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில், பாடி பில்டிங் செய்வோருக்கு, முதிய காலத்தில் திசு சேத நோய் அல்லது சர்கோபிணியா என்பதன் தாக்கம் மிக குறைவாக காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பாடி பில்டிங் செய்வதால் எலும்புகளும் வலுப்பெறுகின்றன. எனவே பாடி பில்டிங் செய்யும் ஒருவர் அவரின் முதிய பருவத்தில் எந்தவொரு நபரின் தயவில்லாமல் இருக்க முடியும்.

இதய திசுக்கள் சேதமடைதல்

இதய திசுக்கள் சேதமடைதல்

நல்ல உடற்பயற்சி ஒருவரின் இதயத்தை உறுதிப்படுகிறது. ஆனால், ஒரு வரம்பு மீறி போகும் போது இதயத்திற்கு செல்லும் பெருநாடி ரத்த குழாயின் திசுக்கள் சேதாரம் அடைகிறது, இதனால் ஒருவருக்கு இதய பாதிப்பு ஏற்படலாம். பொதுவாக சிலர் உடலை வெகு சீக்கிரம் தயார்படுத்துவதற்கு ஸ்டெராய்டு போன்ற ஊக்கமூட்டிகளை எடுத்துக்கொள்கின்றனர். இது பின்னாளில் இதயத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரத்தம் செல்வதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை, ஒருவர் தன் எடையில் பாதிக்கு மேற்பட்ட எடையை தூக்கினாலே, இதயம் பல்வேறு பாதிப்புகளுக்கு உண்டாவதாக கூறுகிறது. ஆனால் இதுபோன்று ஊக்கமூட்டிகளை எடுத்துக்கொண்டு உடற்பயற்சி செய்வோருக்கு தங்களால் முடிந்ததை விட மிக அதிகமான எடையை தூக்க இயலும். இதனால் நாளடைவில் இதய தசை நார்கள் பாதிப்புக்குள்ளாகும்.

சத்து குறைபாடு

சத்து குறைபாடு

பாடி பில்டிங்கில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் புரதம் நிறைந்த உணவையே எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஏனைய பிற சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. முக்கியமாக கார்போஹைட்ரேட் உணவுகளை அறவே தவிர்ப்பதால், நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒருவருக்கு புரத சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவில் கார்போஹைட்ரேட் சத்தும் மிக அவசியமான ஒன்று. சரிவிகித உணவு உண்ணாமல், பாடி பில்டிங் மட்டுமே குறிக்கோளாக இருந்து தசையை பெருக்குவதற்காக அதிகப்படியான புரத உணவு எடுக்கும் ஒருவருக்கு, சிறுநீரக பாதிப்பில் இருந்து இதய பாதிப்பு வரை பெரும்பாலான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

ஸ்டெராய்டின் பக்க விளைவுகள்

ஸ்டெராய்டின் பக்க விளைவுகள்

ஊக்கமூட்டிகள் அல்லது ஸ்டெராய்டுகள் என்பவை, நேரடியாக உடலினுள் செலுத்தப்படும் சத்துக்கள். பொதுவாக நம் உடல் உணவிலிருந்து தேவையான பல சத்துக்களை பிரித்தெடுத்துக் கொள்கிறது. ஆனால் இந்த மருந்துகள் அப்படி அல்ல. இவற்றில் ஒன்று அல்லது இரண்டு சத்துக்கள் அதிகபட்சமாக இருக்கும். இவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் இயற்கைக்கு மாறாக வளர்ச்சிதை மாற்றம் அடைந்து திசுக்களை பெருகுகிறது. இதனால் ஆண்களின் விந்து வெளியேறும் தன்மை குறைகிறது, புற்றுநோய் கூட சிலருக்கு ஏற்படுகிறது. தவறாக உபயோகிக்கும் ஸ்டெராய்டு ஊசிகளால் HIV பரவிய சம்பவங்களும் இதற்கு முன் நடந்திருக்கின்றன.

பெண்களுக்கு வரும் பிரச்சனை

பெண்களுக்கு வரும் பிரச்சனை

பாடி பில்டிங் துறையில் உள்ள பெண்களிடம் நடத்திய ஆய்வில், பெரும்பாலான பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. டெஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனானது ஆண்களுக்கு பொதுவாக அதிகம் சுரப்பது, அது மட்டுமில்லாமல், திசு வளர்ச்சிக்கு இந்த ஹார்மோன் மிக அவசியம். பெண் பாடி பில்டர்கள், அதிகப்படியான ஊக்கமருந்தை எடுத்துக் கொளவதன் மூலம் தங்கள் டெஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து, உடல் திசுக்களை அதிகரிக்கிறார்கள். டெஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால், இயல்பாகவே அவர்களின் பெண் தன்மை நாளடைவில் குறைந்து விடுகிறது.

பாடி பில்டிங் செய்ய கூடாதா?

பாடி பில்டிங் செய்ய கூடாதா?

ஒவ்வொரு பாடி பில்டரும் மணிக்கணக்காக நேரத்தை உடற்பயற்சி கூடத்தில் கடினமாக செலவிடுவதன் மூலமும், தங்கள் உணவு பழக்க வழக்கத்தை கண்டிப்பான முறையில் பின்பற்றுவதன் மூலமும் தங்கள் உடலினை கட்டுகோப்பாக பேணிக் காக்கிறார்கள். எனவே அவர்களை நாம் யாரும் குறைத்து மதிப்பிட போவதில்லை. இருப்பினும் எந்தவொரு விளையாட்டிலும் சில பாதகங்கள் இருக்கத் தான் செகின்றன. அதை விவாதிப்பது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம். அதுமட்டுமில்லை, உங்களுக்கும் பாடி பில்டிங்கில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். நீங்கள் அதை தாராளமாக தொடரலாம், ஆனால் மேற்சொன்ன நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதற்குரிய தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெச்செரிக்கையாக எடுக்க வேண்டும்.

வரும்முன் காப்பதே சிறந்த மருந்து

வரும்முன் காப்பதே சிறந்த மருந்து

உணவே மருந்து என்று சொல்வார்கள், எனவே எப்பொழுதும் சரிவிகித உணவையே உட்கொள்ளுங்கள். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, எனவே புரதம் நிறைந்த உணவை மட்டும் எடுப்பதை விடுத்து, மற்ற சத்துக்களில் கவனம் செலுத்த வேண்டும். எப்பொழுதும் ஸ்டெராய்டு போன்ற ஊக்கமூட்டிகளை எடுக்காதீர்கள். இதனால் உங்களுக்கு கிடைக்கப்போகும் பலன்களை விட பாதிப்புதான் அதிகமாகும். மிகவும் முக்கியமான ஒன்று, இன்று பட்டி தொட்டியெல்லாம் மூலைக்கொரு உடற்பயற்சி கூடங்கள் இருக்கின்றன. சரியான முறையில் தயார்படுத்த நிறைய உடற்பயற்சி வல்லுநர்கள் இருக்கிறார்கள். எனவே நன்கு அங்கீகரிக்கப்பட்ட உடற்பயற்சி சாலையில், சான்றிதழ் பெறப்பட்ட ஒருவரின் கீழ் உடற்பயற்சி செய்தால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is bodybuilding healthy?

Is bodybuilding healthy? Read on to know more...
Desktop Bottom Promotion