Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
கண்களில் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால், கண் பார்வையை இழக்க நேரிடும்... உஷார்..
மனித உடலில் மிகவும் மென்மையான, உணர்திறன் வாய்ந்த பகுதி என்றால் அது கண் தான். கண் பார்வையை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஒருவரது தினசரி வாழ்க்கை முறை, அவர்களது பார்வையை பாதிக்கக்கூடும் என்பது தெரியுமா?
மனித உடலில் மிகவும் மென்மையான, உணர்திறன் வாய்ந்த பகுதி என்றால் அது கண் தான். கண் பார்வையை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஒருவரது தினசரி வாழ்க்கை முறை, அவர்களது பார்வையை பாதிக்கக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிலும், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது ஒருவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே, உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்திடாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

கெட்ட கொழுப்பு
மனித உடலில் இருக்கும் கொழுப்புகள் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டு வகைப்படும். நல்ல கொழுப்பானது உடலில் சீரான இயக்கத்திற்கு தேவையான ஒன்று. அதுவே, கெட்ட கொழுப்பு உடலில் அதிகமாக சேரும் போது உடலியக்கத்தில் பிரச்சனைகளை உண்டு பண்ணக்கூடும். உடல் பருமன், மூச்சு வாங்குதல், நடப்பதில் சிரமம் போன்றறை உடலில் கொழுப்பு அதிகரிப்பதால் சந்திக்கக்கூடிய சாதாரண பிரச்சனைகள். இவற்றைத் தவிர நாம் எதிர்பார்க்காத பல்வேறு பிரச்சனைகளுக்கு, அதிகப்படியான கொலஸ்ட்ரால் காரணமாக இருக்கிறது.

கெட்ட கொழுப்பின் பாதிப்புகள்
யாருடைய உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகிறதோ, அது அவர்களது கண்பார்வையை நேரடியாக பாதிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். கொழுப்பின் அளவு உடலில் அதிகரிக்கும் போது, அவை உடலின் இரத்த நாளங்களில் படியத் தொடங்கும். அதிலும், தமனிகளில் சேரும் கொழுப்பு படிமங்கள், அதன் இரத்த ஓட்ட பாதையைச் சுருங்க செய்து, இரத்த ஓட்டத்தை நிறுத்தக்கூடும். இதன் விளைவாக, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட ஆபத்துகள் அதிகரிக்கக்கூடும்.
நம் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் கொழுப்பு உடலுக்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும், அதன் அளவு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக சேரும் போது அது கெட்ட கொழுப்பாக மாறுகிறது. இந்த கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது, அது உடலில் பல நோய் அபாயங்களை அதிகரிக்க செய்கிறது. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதால் உடலில் சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு சேரக்கூடும். இது கண்களை மிகவும் மோசமாக பாதிக்கக்கூடும். உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது என்றால் அதன் அறிகுறி உங்கள் கண்களுக்கு அருகில் தெரியும். கண்களின் நிறம் மாறுவது மற்றும் கண்பார்வை மோசமாக பாதிக்கப்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும்.

கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படும் கண் பாதிப்புகள்:
சாந்தெலஸ்மாட்டா (Xanthelasma)
சாந்தெலஸ்மா என்பது உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது ஏற்படும் பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள சருமம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது. இந்த பிரச்சனையை கண்களின் மேல் கொழுப்பு சேருவது என்றும் அழைக்கப்படுகிறது. அப்படி சேரும் கொழுப்பு கண் இமைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் தெளிவாக தெரியக்கூடும். உங்களுக்கு இப்படி ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உங்கள் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, அதற்கான மருத்துவத்தையும் பெற முயற்சிக்கவும்.

கார்னியல் ஆர்கஸ் (Cornea Arcus)
ஆர்கஸ் செனிலிஸ் அல்லது கார்னியல் ஆர்கஸ் என்பது கண்களின் கார்னியாவைச் சுற்றி நீல நிற வளையம் அல்லது சாம்பல் நிற வளையம் உருவாகும் ஒரு நிலையாகும். கண்களின் கார்னியாவில் கொழுப்பு படிவதே இதற்குக் காரணம். உங்கள் கண்களைச் சுற்றிலும் இதுபோன்ற வளையங்கள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லையெனில், அவை உங்கள் கண்களை மோசமாக பாதிக்கக்கூடும்.

விழித்திரை நரம்பு அடைப்பு (Retinal Vein Occlusion)
விழித்திரை நரம்பு அடைப்பு என்பது அதிக கொழுப்புடன் நேரடியாக தொடர்புடைய ஒரு நோயாகும். இது பொதுவாக கிளைகோமா, நீரிழிவு, வாஸ்குலர் நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக் கோளாறுகள் போன்றவை ஏற்படும் போது உண்டாகிறது. இதன் விளைவாக, விழித்திரைக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்த அணுக்கள் தடுக்கப்படுகின்றன. இதனால், கண் பார்வை மோசமாக பாதிக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு
உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது உடல் எடையை மட்டுமே அதிகரிக்கும் என்று எண்ண வேண்டாம். உடலில் கொழுப்பு அதிகரிக்கும் அது கண் பார்வையையும் மோசமாக பாதிக்கும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். கண்களில் இது போன்ற பிரச்சனைகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமெனில் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம்.



Click it and Unblock the Notifications











