Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
நல்ல கட்டுமஸ்தான உடலுடன் இருக்க நம் முன்னோர்கள் சாப்பிட்டது இந்த பழத்தை தான் தெரியுமா?
கொய்யாவில் வைட்டமின் சி, டயட்டரி நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அதிகம் அதிகளவில் நிறைந்துள்ளது. மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியக்கூடியது.
ஆரோக்கியமாக இருக்கவும், நோயில்லாத வாழ்க்கையை வாழவும் பழங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்று. யார் ஒருவர் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் தங்களின் உணவில் சேர்க்கிறார்களோ, அவர்களுக்கு நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பழங்கள் ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்களை வழங்குகிறது.

பெரும்பாலான பழங்களில் கொழுப்பு, கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக உள்ளன. மேலும் பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான பொட்டாசியம், டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்றவைகளும் அதிகம் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களைத் தன்னுள் கொண்ட, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் ஓர் பழம் தான் கொய்யா.

வெப்ப மண்டல பழம்
வெப்ப மண்டல பழமான கொய்யா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் வடதெற்கு அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இந்த பழம் பெரும்பாலும் அப்படியே சாப்பிடக்கூடியதாக இருப்பதோடு, இது பல்வேறு சமையல் சாஸ்கள், மிட்டாய்கள், உலர்ந்த தின்பண்டங்கள், ஃபுரூட் பார்கள் மற்றும் இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

கொய்யாப்பழத்தின் சத்துக்கள்
கொய்யாவில் வைட்டமின் சி, டயட்டரி நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அதிகம் அதிகளவில் நிறைந்துள்ளது. மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியக்கூடியது. நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், கொய்யாப்பழத்தை எப்படியெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எடை இழப்பிற்கு எப்படி கொய்யா உதவுகிறது?
கொய்யாப்பழம் உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்களுள் முக்கியமான ஒன்று. இதன் ஒரு பழத்தில் 37 கலோரிகள் மற்றும் ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தில் 12% நிறைந்துள்ளது. மேலும் இது கலோரி குறைவான பழம் மட்டுமின்றி, இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. கொய்யாவில் உள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து, செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுப்பதால், விரைவில் பசி எடுப்பதைத் தடுத்து, பசியுணர்வைக் கட்டுப்படுத்தும்.
மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், சீரான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. கனியாத கொய்யாவில் ஆப்பிள், ஆரஞ்சு அல்லது திராட்சையை விட குறைவான அளவு சர்க்கரை உள்ளது. இந்த பழத்தை எந்த வடிவில் எடுத்தாலும், குடலியக்கம் சிறப்பாக இருக்கும் மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை தூண்டி வேகமான எடை இழப்பிற்கு உதவி புரியும்.
இப்போது உடல் எடையைக் குறைக்க கொய்யாவை எப்படியெல்லாம் உட்கொள்ளலாம் என்று சில வழிகளைக் காண்போம் வாருங்கள்.

கொய்யா சட்னி
தேவையான பொருட்கள்:
* கொய்யா பழம் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை மிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாகும் வரை அரைத்தால், கொய்யா சட்னி ரெடி!

கொய்யா ஜூஸ்
தேவையான பொருட்கள்:
* கொய்யாப் பழம் - 2 கப் (நறுக்கியது)
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* மிக்ஸியில் அனைத்தையும் போட்டு நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையை வடிகட்டினால், சுவையான கொய்யா ஜூஸ் ரெடி!

கொய்யா சாலட்
நன்கு கனிந்த கொய்யா பழத்தை நீரில் நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது ப்ளாக் சால்ட் மற்றும் மிளகாய் தூளை மேலே தூவினால், கொய்யா சாலட் தயார்!

கொய்யா புதினா ஜூஸ்
தேவையான பொருட்கள்:
* கொய்யாப்பழம் - 3 (நறுக்கியது)
* வெள்ளரிக்காய் - பாதி (நறுக்கியது)
* புதினா இலைகள் - 2 கப்
* இஞ்சி - 1 இன்சி
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* ப்ளாக் சால்ட் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஜூஸர் ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 டம்ளர் நீரை ஊற்றி, மீண்டும் அரைக்க வேண்டும்.
* அதன் பின் அதை வடிகட்டி, சில ஐஸ் கட்டிகளை சேர்த்தால், கொய்யா புதினா ஜூஸ் ரெடி!



Click it and Unblock the Notifications
